காபி வித் காதல் @ விமர்சனம்

அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ சி எஸ் அருண்குமார் தயாரிக்க, ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா  நடிப்பில் சுந்தர் சி எழுதி இயக்கி இருக்கும் படம் . 

இளம் வயதில் இருக்கும் மூன்று ஆண் பிள்ளைகள் ( ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ) இரண்டாவது பையனோடு இரட்டையராகப் பிறந்த ஒரு மகள் (திவ்யதர்ஷினி) ஆகியோரைக் கொண்ட ஒரு குடும்பத்தின் மூத்த மகன், தனது  மனைவி  (சம்யுக்தா) இருக்கும்போது வேறு பெண்ணைத் தேடுகிறான் . 

இரண்டாவது மகன் தன்னோடு லிவிங் டுகெதரில் வாழும் பெண்ணுக்கு (ஐஸ்வர்யா தத்தா) பெரும் சொத்து சேர்த்து வைக்க , அவளோ தனக்குப் பிடித்த நடிகனோடு போய் விடுகிறாள் . 

மூன்றாவது மகன் சிறு வயது முதலே தன்னை நேசிக்கும் பெண்ணை ( அம்ரிதா அய்யர்) புறக்கணித்து ,பணம் மற்றும் சொத்துக்காக , அப்பாவின் ( பிரதாப் போத்தன்) பணக்கார நண்பரின் மகளைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறான் .  

மூவரின் சகோதரியோ நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, அவள் கணவன் வேலை பிசியில் வீட்டுக்கு வராமலே இருக்க,

மூத்த மகன் ஒரு பெண்ணை (ரைசா வில்சன்)  பார்த்த அன்றே படுக்கை வரை போய்விட , அந்தப் பெண்ணை இரண்டாவது பையனுக்கு பெண் பார்த்து விட , மூன்றாவது மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பணக்கார நண்பரின் மகள் இரண்டாவது பையனை விரும்ப , அவனோ தனது  தம்பிக்காக அவளை புறக்கணிக்க, 

மூன்றாவது மகனை சிறுவயது முதல் நேசிக்கும் பெண் அவனது பண வெறி கண்டு விலகி வேறு ஒருவனை காதலிக்க அவன் மருக, பெற்றோரும் சகோதரியும் குழம்ப .. 

இது போதாதா சுந்தர் சி க்கு ?

கலர் புல்லான – கவர்ச்சி திமிறுகிற  ( படத்தில் வரும் ஓரிரு பெண்களைத் தவிர எல்லோரும் உறிச்சு மஞ்சள் தடவி வைக்கப்பட்ட போன்லெஸ் சிக்கன்  போலத்தான்) காமெடியும் இருக்கிற ( யோகி பாபு அதுவும் நாலு கெட்டப் மற்றும் ரெடின் கிங்ஸ்லி  ) படம்  பார்சல்ல்ல்….. !சுந்தர் சி யின் டைரக்ஷன்  அனுபவம் வேலையை சுலபமாக்கி இருக்கிறது 

 சில நல்ல செண்டிமெண்ட் காட்சிகளும் உண்டு . குறிப்பாக  மகளுக்கு மாப்பிள்ளை தேடியது பற்றி அப்பா சொல்லும் காட்சி .  குறிப்பாக அதில் திவ்யதர்ஷினிக்கு இயக்குனர் சுந்தர் சி வைத்து இருக்கும் ஒரு ஷாட்… அடடா !  காவிய நெகிழ்வு . 

மூத்த மகனின் மகளை வைத்து கிளைமாக்சில் கரை புரளும் நகைச்சுவை,  செண்டிமெண்ட் இரண்டும் லகலக ரகளை.

ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா, திவ்ய தர்ஷினி, சம்யுக்தா  அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் . ஐஸ்வர்யா தத்தாவும் ரைசா வில்சனும் சும்மா கட்டி ஏறுகிறார்கள்.

கணவனை மீண்டும் தன் பக்கம் திருப்ப உடம்பு குண்டாகாமல் இருக்க சாப்பிடாமல் பட்டினி கிடப்பது பற்றிய காட்சியில் நெகிழ வைக்கிறார் சம்யுக்தா .

என்ன….. பிரதாப் போத்தன் வசனம் பேசும் போது மட்டும் இப்படி ஒரு பம்பாயில் பிறந்து வளர்ந்த மலையாளத் தகப்பனுக்கு இத்தனை பக்கவான தமிழ்ப் பிள்ளைகளா  என்ற சந்தேகம் வருகிறது . யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் ஒளிப்பதிவு, எடிட்டிங், உடைகள், கலை இயக்கம் , வண்ணப் பயன்பாடு அனைத்து வகையிலும் படம் குளிர்ச்சி .. கிளர்ச்சி.. கிளர்ச்சி … கிளர்ச்சி !

இது முழுக்க முழுக்க வம்படியாக இட்டுக்கட்டி இட்டுக்கட்டி டெக்னிக்கலாக உருவாக்கப்பட்ட கதை திரைக்கதை என்பது அப்பட்டமாகத் தெரிவதும் அதன் விளைவுகளும்தான்  குறை . . 

காபி வித் காதல் …. இளமை துள்ளும் பக்கவான ஒரு சினிமாத்தனமான சினிமா 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *