Hungry Wolf Entertainment And Production LLP சார்பில், கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்து ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நாயகனாக விக்ரம் ரமேஷ் நடிக்க, ஸ்வயம் சித்தா, சிவகுமார் ராஜூ, முரளி சீனிவாசன் நடிப்பில் வந்திருக்கும் படம்
பணம் பெண் குறித்த பெருங்கனவுகளுடன் உள்ள , வாடகைக் கார் ஓட்டும் நபர் ஒருவனின் (விக்ரம் ரமேஷ்) காரில் ஒரு நாள் இரவு பாரில் இருந்து வரும் பெண் ஒருத்தி ( ஸ்வயம் சித்தா) ஏறுகிறாள். இறங்கும்போது, ‘வீட்டுக்குள் வா மது அருந்திவிட்டுப் போகலாம்’ என்கிறாள்.
மதுவோடு காமமும் நடக்கிறது .
காலையில் எழுந்து பார்க்கும் அவனுக்கு , வீட்டில் வயதான ஒருவரின் பிணம் இருப்பது தெரிய வருகிறது . எலெக்ட்ரானிக் லாக் சிஸ்டம் காரணமாக அவன் வெளியே போக முடியாத சூழலில் தன்னை அனுப்பி விடும்படி அவன் அவளிடம் கெஞ்ச , அந்த சூழலில் அவளும் செத்துப் போகிறாள்.
அந்த வீட்டுக்குள் ஒரு திருடன் பாஸ் வேர்டு போட்டு கதவைத் திறந்த வந்து திருடுகிறான் . ஒரு அரசியல்வாதி அது போலவே பாஸ்வேர்டு போட்டு உள்ளே வந்து பெரும் பணப் பையோடு அவள் ‘ கண் விழிக்க’ காத்திருக்கிறான் .
ஒரு நிலையில் வாடகைக்கார் டிரைவரும் திருடனும் சண்டைக்குப் பின் நட்பாக பேசிக் கொள்ள , அப்புறம் அரசியல்வாதியும் மோதலுக்குப் பின் சமாதானமாக , அந்த சூழலில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களும் அதன் விளைவுகளும்தான் படம்.
எனக்கு endயே கிடையாது என்பதெல்லாம் என்ன பெயர் என்றே தெரியவில்லை . எனக்கு என்டே கிடையாது… எனக்கு என்டே (end) கிடையாது … எனக்கு endஏ கிடையாது இப்படி ஏதாவது ஒன்றாவது எழுதி இருக்க வேண்டும். அது என்ன endயே?
ஓரிரு காட்சிகளைத் தவிர மொத்த படமும் ஒரு வீட்டுக்குள்ளேயே .
படத்தின் முதல் பத்து நிமிஷம் அவ்வளவு இன்டரஸ்டிங். வெங்கட் பிரபு பாணியில் ஏதோ பிடித்து விட்டார்கள் என்று யோசித்தால் அந்தப் பெண்ணின் மரணத்துக்குப் பின் வழக்கமான படம் ஆகி விடுகிறது.
தளபதி ரத்னத்தின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது. கலை இயக்கமும் அப்படியே
ஒரு சில இடங்களில் சற்றே சிரிக்க வைக்கிறார்கள்.
ஸ்வயம் சித்தாவும் சிவகுமார் ராஜுவும் நடிப்பில் தேறுகிறார்கள் .
ஒன்றுக்கு இரண்டாக பிணம் இருக்கிற வீட்டில் புதிதாக வந்த மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள முடியும்?
பெண்ணின் மரணத்துக்கு சொல்லப்படும் காரணமும் வரும் காட்சிகளும் எப்படிப் பொருந்தும் ?
வங்கி ஏலத்துக்கு வரும் வீட்டில் வங்கி என்னென்ன செய்திருக்கும் ?
என்ற புரிதல் ஏதும் இல்லாத காரணத்தால்
startingயே… அடச் சே … startingஏ … கொஞ்சம் சிக்கல்தான்