என்ன சொல்லப் போகிறாய் @ விமர்சனம்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரிக்க, அஸ்வின், தேஜூ அஷ்வினி , அவந்திகா மிஸ்ரா,  புகழ் நடிப்பில் ஹரிஹரன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.

 
காதல் கதைகளை மட்டுமே எழுதி புகழ் பெற்ற இளம், பெண் எழுத்தாளர் அஞ்சலிக்கும்  (அவந்திகா ) இளைஞன் விக்ரமுக்கும் ( அஸ்வின்) திருமணம் முடிவாகிறது. . விகர்முக்கு பெண் மிகவும் பிடித்துப் போன நிலையில் அவளோ தன் வருங்காலக் கணவனுக்கு முன்பே காதல் அனுபவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் . 
 
எனவே அவளிடம் விக்ரம் பொய்யான ஒரு காதல் கதை சொல்ல, அந்தப் பெண்ணை பார்க்க வேண்டும் என்று அஞ்சலி சொல்ல, அதற்காக காதலியாக நடிக்க ஒரு பெண்ணைக் ( தேஜூ அஷ்வினி  ) கொண்டு வர … 
 
இதற்கு மேல் மிச்சக் கதையை நீங்களே சொல்வீங்க . 
 
ஆயிரம் முறை மென்று துப்பப்பட்ட இந்தக் கதைக்கு, புதிதாக எந்த சேர்ப்பும் இல்லாத வழக்கமான காட்சிகளைக் கொண்ட அதீத நீளம் போகிற பொறுமையை சோதிக்க வைக்கும் திரைக்கதை . 
 
கொஞ்சம் கூட உயிர்ப்போ யதார்த்தமோ இல்லாத மேனா மினுக்கித்தனமான பெண் கதாபாத்திரங்கள் . படம் முழுக்க அப்படி ஒரு பிளாஸ்டிசிட்டி. 
 
புகழை சினிமா நடிகன் ஆக்க வேண்டும் என்று முதன் முதலில் யோசித்த நபரை கண்டிப்பாக கண்டு பிடித்து நாடு கடத்தவேண்டும் . 
 
அஸ்வின் , புகழ் , சுவாமிநாதன் , டி எம் கார்த்திக் சம்மந்தப்பட்ட காட்சிகளில் ஒரு பெண்ணை சும்மா வெட்டியாக நிற்க வைத்திருப்பார்கள் . அல்லது திட்ட மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள் . அந்தப் பெண் நிஜமாகவே  நன்றாக நடிக்கிறார் 
 
ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவு , கலை இயக்கம், நடன அமைப்பு   அருமை . 
 
வேறு என்ன சொல்லப் போகிறேன்?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *