ஏ ஜி எஸ் entertainment சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க, சதீஷ், பவித்ரா லக்ஷ்மி, ஜியார்ஜ் மரியான், இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ் நடிப்பில் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம் .
ஐ டி அலுவலகத்தில் பணியாற்றுகிற சேகர் ( சதீஷ்) தன்னுடன் பணியாற்றும் பூஜாவை( பவித்ரா லக்ஷ்மி) காதலிக்கிறான் . அவளது காதலைப் பெற்று அவளது அப்பாவிடம் (இளவரசு) பேசப் போக வேண்டிய சூழலில் , சேகரை பக்கத்து தெரு விஞ்ஞானி ஒருவர் ( ஜியார்ஜ் மரியான்) வளர்க்கும் நாய் கடித்து விடுகிறது .
டி என் ஏ ஆராய்ச்சிக்காக மருந்துகள் செலுத்தப்பட்ட அந்த நாய் கடித்ததன் மூலம் நாய்க்கு மனித உணர்வுகள் வருகிறது . சேகருக்கு நாயின் குணங்கள் வருகிறது .
இந்த நிலையில் காதலியின் அப்பாவிடம் அவன் நடந்து கொள்ளும் விதத்தால் கல்யாணப் பேச்சு ரணகளம் ஆகிறது. உண்மையை அவளுக்கு உணர்த்தி அடுத்த கட்ட ஆராய்ச்சிக்குப் போக இருக்கும் நிலையில் நாய் காணமல் போகிறது .
அடுத்து வயதான தாதா ( கணேஷ்) இதில் குறுக்கே வர அப்புறம் என்ன என்பதுதான் நாய் சேகர் .
எளிமையான கதை, படம். சாதரணமாக துவங்கி கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க காமெடியில் பலம் காட்டி நிறைகிறது . அப்படி திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் கிஷோர் ராஜ்குமார் .
பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு கண்ணுக்கு அழகு .
சங்கர் கணேஷின் மிருகங்களுக்கான பிரபலமான தீம் மியூசிக் பின்னணி இசையை அவர் நடிக்கும் காட்சிகளுக்கே பயன்படுத்தி கலகலக்க வைக்கிறார் இசை அமைப்பாளர்
கடைசி காட்சிகளில் காமெடி பஞ்ச களில் அதகளம் செய்கிறார் தாதாவின் உதவியாளராக வரும் மாறன் .
நாய் சேகர்….. சிரிப்பு சேகர் !