கவனம் கவரும் ஹரீஷ் உத்தமன்

hareesh-999

தா என்ற வித்தியாசமான படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹரிஷ் உத்தமன் . படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் விமர்சன ஏரியாவில் பாராட்டுகளை அள்ளியது .

மீண்டும் அழுத்தமாக ஒரு மறு வெளியீடு செய்தால் நன்றாக ஓடும் என்று பேசப்படும் அளவுக்கு அந்தப் படத்துக்கு நல்ல பெயர் உண்டு . 

hareesh-9
அதன் பிறகு சுசீந்திரனின் பாண்டி  நாடு  படத்தின் மூலம் எல்லோருக்கும் தெரிந்த நடிகர் ஆனார் . வில் அம்பு உட்பட பல படங்களில் பாராட்டும்படியான நடிப்பைத்  தந்தவர். இவர் 
வெளியாக இருக்கும் தொடரி, மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடிக்கும் மாவீரன் கிட்டு , விஜய் சேதுபதியுடன் றெக்கை, நயன்தாராவுடன் டோரா என்று தொடர்ந்து….
hareesh-99 
இப்போது விஜய்யுடன் பைரவா படத்தில் நடிக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஹரிஷ் உத்தமன் . 
என்றாலும்  மிக மென்மையான குரலில் நிதானமாகப் பேசுகிறார். 
“கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள வாலையார் (செக் போஸ்ட்) பகுதியில்  பிறந்தவன் நான் . பதினேழு பதினெட்டு வயசுவரை அங்கேதான் இருந்தேன் . 
hareesh-8
பின்னர் எம் பி ஏ முடித்த நிலையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபோது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் கேபின் க்ரூ ஆகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது 
அப்போதுதான் என் சகோதரரின் நண்பரான இயக்குனர்  சூர்ய பிரபாகர்,   தான் இயக்கும் தா படத்தில் என்னை ஹீரோவாகக் கேட்டார் .  நான் ஒன்றரை மாசம் டைம்  எடுத்துக் கொண்டுதான் ஒகே  சொன்னேன் . 
hareesh-7
படம் அப்போ நல்லா ஓடலன்னாலும் இப்பவும் எல்லாரும் பாராட்டுவது சந்தோஷமான விஷயம் . 
அப்போ யு. ஹரிஷ் னுதான் பேரு  வச்சிருந்தேன் . அப்பா பேரு உத்தமன் .அவர் இறந்த அப்புறம் அவர் பேரையும் சேர்த்து ஹரீஷ் உத்தமன்  அப்படின்னு பேரை மாத்திக்கிட்டேன் .” என்றவர் 
தொடர்ந்து “சுசீந்திரன் சாரோட பாண்டிய நாடு படம்தான் எனக்கு ஒரு  நல்ல அடையாளம் கொடுத்தது .
hareesh-6
அப்புறம் பல படங்கள் . 
இப்போ ரிலீஸ் ஆகப் போற தொடரி படத்துல ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிச்சு  இருக்கேன் . 
றெக்கை படத்துலயும் படத்தின் மூன்று முக்கியமான கேரக்டர்கள் ஒண்ணு. 
நயன்தாரா கூட நடிக்கிற டோரா  படத்தில் அவங்களுக்கு அடுத்த முக்கியமான கேரக்டர் என்னுடையது . 
hareesh-5
சுசீந்திரனின்  மாவீரன் கிட்டு படத்தில் ஒரு  போலீஸ்  அதிகாரி கேரக்டரில் நடிக்கிறேன் . பல தலைமுறைகளுக்கு முன்பு பழனி பகுதியில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியைப் பற்றிய படம் அது .
 பைரவா படத்தில் விஜய் சாருடன் ஒரு முக்கியமான கேரக்டர் என்று பல  நல்ல  படங்களில் இருப்பது சந்தோஷமான விஷயம் . 
hareesh-3
இது தவிர தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பல படங்களில் நடித்துளேன் . அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் 
barcour எனப்படும் சுவர் தாண்டும் விளையாட்டில் நான் நன்றாக ஈடுபடுவேன். அதை அறிந்து என்னை மிகவும் பாராட்டினார் மகேஷ் பாபு .
அவரது அடுத்த படத்திலும்  நடிக்க வாய்ப்பு  உள்ளது . 
hareesh-1
ஹீரோ  வில்லன் என்று நான் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை.
கதை  திரைக்கதையில் முக்கியத்துவம் உள்ள எந்த கதாபாத்திரம் என்றாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் .” என்றார் ஹரீஷ் உத்தமன் 
hareesh-2
barcour என்றால் என்ன என்று பார்த்து வியக்க, 
வாழ்த்துகள்  ஹரீஷ்  உத்தமன் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *