கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நான்கு படங்களிலும் வெற்றி நாயகனாக திகழ்ந்த ஜெயம் ரவி, இந்த ஆண்டை ‘மிருதன்’ திரைப்படத்தின் மூலம் கம்பீரமாகத் துவங்குகிறார்.
ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் இந்தத் திரைப்படம், தமிழ் சினிமா இத்தனை ஆண்டு காலம் தொடாத — “சோம்பி” எனப்படும் நடமாடும் பிண மனிதரகளைக் கொண்ட — பாணியில் அமைந்த படம்.
”மிருதன் என்பது சோம்பியின் சரியான தமிழ் ஆக்கம், எதிர்பாராத விதமாக (மிரு)கம் + மனி(தன்), இவ்விரண்டையும் இணைத்தால் ‘மிருதன்’ வரும்.
ஆனால் இதுவல்ல மிருதனுக்கான அர்த்தம்” என்று கூறும் இயக்குனர் படத்தில் ஜெயம் ரவியின் பங்களிப்பு பற்றி கூறும் போது,
“ஜெயம் ரவி. இப்படத்தில் அவர் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகன் படம் முழுக்க இந்தக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் முதல் படம் இது.
ஜெயம் ரவி இல்லாவிட்டால் இந்தப் படத்தைப் பற்றி யோசிக்கக் கூட முடியாது . அவர் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது.
உடைகள் மாற்ற மட்டுமே கேரவனுக்குள் செல்வாரே தவிர, மீதி நேரம் முழுவதும் அவர் படப்பிடிப்பு தளத்திலேயே இருப்பார்.
அவரின் முழு அர்ப்பணிப்பாலேயே இது போன்ற படத்தை இத்தனை குறுகிய காலத்தில் எடுக்க முடிந்தது” எனக்கூறினார்.
மிருதன் திரைப்படத்தின் திரைக்கதை ஓட்டம் முழுக்க முழுக்க 6 கதாபாத்திரங்களை மையப்படுத்தி பின்னப் பட்டிருக்கும்.
ஆனால் படத்தில், இடம் பெறும் சோம்பிகளின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதவை” என்கிறார்