அடுத்த குஷ்பு அறிமுகமாகும் ‘ஜிப்பா ஜிமிக்கி’

Jippaa Jimikki Press Meet Stills (10)

3 ஃபிரண்ட்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் திவாகர் ஜி வி  தயாரிக்க, அவரது மகன் கிரிஷ் திவாகர் நாயகனாக அறிமுகம் ஆக,  ரா. ராஜசேகர் என்பவர் இயக்கி இருக்கும் படம் ஜிப்பா ஜிமிக்கி.

இந்த ராஜ சேகர் மாலை முரசு நாளிதழில் பணியாற்றியவர்.

ஜிப்பா ஜிமிக்கி கதை என்ன ?

“இரண்டு நெருங்கிய நண்பர்கள். தங்களின் பிள்ளைகளை கல்யாண ஜோடியாக்கி ஒன்றாக வாழ வைக்க ஆசைப்படுகிறார்கள் . ஆனால் அந்த இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை.

எனவே இருவரும் சேர்ந்து ஒரு பயணம் மேற்கொண்டு  பெற்றோர்கள் மனம் புண் படாத வகையில்,  பிரிவதற்கான ஒரு காரணத்தைக் கண்டு பிடித்துச் சொல்ல முடிவு செய்து பயணம் போகிறார்கள் . கடைசியில் சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்பது கிளைமாக்ஸ் .

மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது முறைப்படி தமிழ்நாட்டுக்கு வந்திருக்க வேண்டிய , ஆனால் அநியாயமாக கர்நாடகாவோடு போய்விட்ட  கூர்க் பகுதியில் இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்கள் .

ஆடுகளம் நரேன் ஒரு முக்கியக் கதாபாத்தித்தில் நடித்துள்ளார் . கன்னட ஆணுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் பிள்ளையாகப் பிறந்து கன்னட கிராமத்தில் விவசாயம் செய்கிற ஒரு விவசாயி கேரக்டரில் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்து இருக்கிறார் .

படத்தின் இசையமைப்பாளர் ரனிப் இசையமைப்பாளர் தீனாவின் சகோதரர் . ரனிப்புக்கு இது முதல் படம்.

Jippaa Jimikki Press Meet Stills (30)

படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கும் புதுமுகத்தின் பெயர் குஷ்பு பிரசாத் . எஸ் மக்களே ! குஷ்பூவுக்குப் போட்டியாக இன்னொரு நடிகை வந்து விட்டார் (இந்த விஷயம் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு தெரியுமா ?தெரிந்தால் 2020 தமிழக காங்கிரசுக்கு இப்போதே தயார் செய்ய ஆரம்பித்து விடுவார் )

படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை திரையிட்டார்கள் .

ஒட்டு மொத்தக் காட்சிகளில் நம்மைக் கவர்ந்த முதல் விஷயம்,  சரவண நடராஜன் என்ற புதியவரின் அற்புதமான அட்டகாசமான அசத்தலான ஒளிப்பதிவு . வேல்ராஜிடம் உதவியாளராக இருந்தவராம் இவர் . நிச்சயமாக இவர் தமிழ் சினிமாவில் வெற்றி வண்ணம் படைப்பார்.

IMG_6218

ரனிப்பின் இசையில் பாடல்களும் நன்றாக இருந்தன . ‘பரவசப் படுகொலையே’ என்ற பல்லவி வரியில் கவனம் கவர்ந்தார்,  பாடலாசிரியர் மோகன்ராஜ் .

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ரா. ராஜசேகர் ” பொதுவாக ஜிப்பா என்பது ஆணின் குறியீடு. ஜிமிக்கி என்பது பெண்ணின் குறியீடு .

Jippaa Jimikki Press Meet Stills (33)

ஓர் ஆண் பெண் இருவரின் உணர்வுகளைப் பற்றிய கதை என்றாலும் பெயர் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதால்தான் ஜிப்பா ஜிமிக்கி என்று பெயர் வைத்தேன் ” என்றார்.

தயாரிப்பாளர் திவாகர் பேசும்போது ” நான் கன்னடத்தில் சில படங்களை தயாரித்துள்ளேன். ஆனால் என் மகன் நடிக்கும் படம் என்றால் அது தமிழ்ப் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அவனை தமிழில் அறிமுகப்படுத்துகிறேன் . இன்று முதல் கிரிஷ் என் மகன் இல்லை . உங்கள் அனைவரின் மகன் ” என்றார் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →