எஸ் கியூப் பிக்சர்ஸ் சார்பில் மோகன் தயாரிக்க, ஆகாஷ் பிரேம் குமார் , ஏனாக்ஷி, புகழ் நடிப்பில் சிவா சுந்தர் ஒளிப்பதிவில், சேத்தன் கிருஷ்ணா இசையில் ஜீவகுமாரனாக இருந்து பின் வித்யாதரனாக மாறி இப்போது மீண்டும் பெயர் மாற்றி இருக்கும் ஆர் கே வி இயக்கி இருக்கும் ‘கடைசி காதல் கதை’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா.
திரையிடப்பட்ட பாடல்கள் இனிமையாக இருந்தன .சிவ
சுந்தரின் ஒளிப்பதிவு வண்ண மயம்.
நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர். கே. வித்யாதரன் பேசும்போது,, கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு இந்த படம் ட்ரைலர் வெளியீட்டிற்கு வந்துள்ளது.என்னுடைய மானசீக குருநாதர் இருவர். இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அடுத்ததாக இயக்குனர் கமாண்டர் கே.எஸ்.ரவிக்குமார். என்னுடைய முதல் கன்னடப படத்தை 19 நாட்களில் முடித்தேன்.
சத்யா ராஜ் சாருடன் நிறைய கதை பண்ணிருக்கேன். அடுத்ததாக நிறைய கதை சிபிக்கும் வைத்திருக்கிறேன். அவர் சத்யராஜின் நகல். நான் ஒரு 1415 கதையை புத்தகத்தில் வைத்திருக்கிறேன். அதில் 141 ஆவது கதை மற்றும் 231ஆவது கதைக்கும் அட்வான்ஸ் வாங்கி அது சில காரணத்தால் எடுக்க முடியவில்லை. கடைசி காதல் கதை 531 ஆவது கதை தான். இந்த படத்தையும் 19 நாட்களில் எடுத்திருக்கிறேன் . படத்தின் ஹீரோ ஏற்கனவே பாலா இயக்கிய வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இந்த படத்தின் இசையமைப்பாளர் சேத்தன் கிருஷ்ணா கன்னடத்தில் 1000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இந்த படத்தை வெகுவிரைவில் வெளியிட உள்ளோம்” என்றார்.
நடிகர் சிபிராஜ் பேசும்போது,, “தமிழ் சினிமா நல்ல தரத்தில் இருக்கிறது. படத்தின் கதை நல்ல இருந்தால் தியேட்டரிலும் சரி, ஓடிடி-தளத்திலும் சரி நல்ல வரவேற்பு உள்ளது. இப்படத்தின் இயக்குனரை நீண்ட காலமாக தெரியும். எனக்கு கதை ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் முதலில் ஞாபகம் வருவது RKV தான். அப்பாவும் இவரை தான் சொல்லுவார் “என்றார்.
இயக்குனர் சீனு ராமசாமி பேசும்போது,, ” படத்தின் டைரக்டர் எனக்கு ஒரு 20 ஆண்டு கால பழக்கம். எப்போதும் ஏதேனும் ஓரு வேலையை செய்து கொண்டே இருப்பார். நல்ல கதை அறிவு உள்ளவர். . அவருக்கு சினிமா மீதுள்ள விருப்பம் தான் புது முக நடிகர்களை வைத்து எடுப்பதற்கான தைரியத்தைக் கொடுத்துள்ளது. இப்பொழுது தமிழ் சினிமாவில் கதைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 7 ஓடிடி தளங்கள் தமிழில் வரவிருக்கிறது. பறந்து வரும் நாயகனை, நடந்து வர வைத்தது கே.பாக்யராஜ் தான். இயக்குனர் ஜாம்பவான் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார்தான் ” என்றார்.
நடிகை ஷாலு ஷாமு பேசும்போது,”நான் இந்தத் துறைக்கு புதுசுதான். சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். எனக்கு வரும் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இப்பொழுது மாடலிங் செய்து கொண்டு இருக்கிறேன். ட்ரைலர் வெளியீட்டில் ஜாம்பவான்கள் முன்பு பேசியது மகிழ்ச்சி “என்றார்.
நடிகர் சாம்ஸ் பேசும்போது,”இந்த படத்தில் சுவாரஸ்யமான போலீஸ் கதாபாத்திரம் செய்திருக்கிறேன். ஆர்.கே.வி. போன்று நானும் நகைச்சுவைக்காக ஒரு நோட் வைத்திருக்கிறேன். 2 நாள் தான் படப்பிடிப்பு என்று கூறினார். ஆனால், வெச்சி செஞ்சிட்டார். படம் மொத்தமும் 60 சீன். ஆனால் நானே 120 சீன் பண்ணிருக்கேன். நிறைவாக இருக்கிறது “என்றார்.
கதாநாயகன் ஆகாஷ் பிரேம் குமார் பேசும்போது,”இது நான் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம். என் மீது நம்பிக்கை வைத்த அப்பா அம்மாக்கு நன்றி. என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன். எனது தந்தை கடைசியாக தியேட்டரில் பார்த்த படம் கே.எஸ்.ரவிக்குமாரின் பஞ்சதந்திரம், ரவிக்குமாரின் நடிப்பும் இயக்கமும் பிடிக்கும் என்று இங்கு பதிவு செய்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு என்னுடைய கண்தான் காரணம். நான் ஒரு காட்சியில் நடித்தால் போதும் என்றுதான் வந்தேன். ஆனால் ஹீரோவாக மாற்றி விட்டார்கள். என்னை முதன் முதலில் ஒரு கதாபாத்திரமாக பார்த்த என்னுடைய குரு பாலா சாருக்கு நன்றி “என்றார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,ஆர்.கே.வி. கதாசிரியர் – இயக்குனர் மட்டுமல்ல. அவர் சிறந்த நடிகரும் கால் நடை மருத்துவரும் கூட. கன்னடம் தெரியாவிட்டாலும் அவரின் திறமையால் அங்கே வாய்ப்பு வாங்கி விடுவார்.”கடைசி காதல் கதை என்ற பெயரைக் கேட்டவுடன் இயக்குனரிடம் என்னப்பா? இதற்கு மேல் யாரும் காதலிக்க மாட்டார்களா? அல்லது இதற்கு பிறகு யாரும் காதல் கதையை எடுக்க மாட்டார்களா? ”என்று கேட்டேன். அதற்கு அவர், ”அப்படியில்லை சார் அதற்குள் விஷயம் இருக்கிறது ””என்றார்.
அவர் உச்சிக்கு செல்லும் ஒரு காலம் வர வேண்டும் என்று வேண்டுகிறேன். கமல், ரஜினி போன்று எல்லாரையும் தியேட்டரில் பார்த்து கைதட்டின எனக்கு அவர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது போல இவருக்கும் ஒரு வாய்ப்பு வரும். படத்தில் நடித்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றிபெற வாழ்துகிறேன் என்றார்.
இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “நேற்று விபத்தில் இறந்த முப்படை தளபதி, அவரின் மனைவி மீதமுள்ள 12 பேருக்காக வருந்துகிறேன்.கொரோனாவிற்கு பிறகு தியேட்டர் திறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால், இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது.
நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அவற்றின் மீது பொது நல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்றார்.