தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலத்தை கதையின் வில்லனாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்த குறிப்பிட்ட நேரம் நாயகனை பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக்கொள்ளாமல் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை.
பாடல், காமெடி இல்லாமல் முழுமையான ஹாரர் அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் தொழில்நுட்ப குழு விவரம்
எழுத்து & இயக்கம் – நம்பிக்கை சந்துரு
ஒளிப்பதிவு – சதீஷ் மனோகரன்
இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
படத்தொகுப்பு – தீபக் S. துவாரகநாத்
VFX சூப்பரவைசர் – அருண்
ஸ்டண்ட் – ஸ்டன்னர் ஷாம்
மிக்சிங் – ராம்ஜி சோமா
SFX – A. சதீஷ்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )
