காவிரி…கன்னடன்.. கொதித்த குகநாதன் ; பசப்பிய பாக்யராஜ் !

kadi-5

கிறிஸ்ட் இன்டர்நேஷனல் புரடக்ஷன்ஸ்  சார்பில் கே.பிரவேஷ், கே.பிரதீஷ்ஜோஸ் இருவரும் இணைந்து தயாரிக்க, 

 கிஷோர், லதா ராவ், கருணாகரன், புதுமுகன் ஷெரின்  ஆகியோர் நடிக்க 

இயக்குநர் சசிகுமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய  வைகறை பாலன் எழுதி இயக்கும்  படம் கடிகார மனிதர்கள் 

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள்  வி.சி.குகநாதன் கே.பாக்யராஜ் இருவரும் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர் 

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறிய ஒரு கீழ் நடுத்தர வர்க்க குடும்பம் , வாடகை வீட்டில் இருப்பதன் சிரமத்தை அனுபவிப்பதுதான் படத்தின் கதை 

குடும்பத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து  வாடகைப் பணத்தை உயர்த்தும்  வீட்டு உரிமையாளரின் தொல்லையில் இருந்து  தப்பிக்க, 

பள்ளி  செல்லும் தனது மகனை  யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்து வளர்ப்பதும், அவனை பொறை விற்கும்  பெட்டிக்குள்  மறைத்து வைத்து  தூக்கிச் சென்று, பின்பு அழைத்து வருவதுமாகவே 

kadi-2

ஒரு குடும்பத் தலைவர் படும் பாட்டையும் ,  இது தொடர்பாக எழும் பிரச்சினைகளும், அதன் தீர்வும்தான் படமே என்பது புரிகிறது.  (வித்தியாசமா  இருக்கு . ஆனா  நம்பும்படி  இருக்கா ?) 

திரையிட்ட இரண்டு  பாடல்களும் கீழ் நடுத்தர வர்க்க  வாழ்வின் தற்காலிக சந்தோஷங்களை தொடரும் பிரச்னைகளை சொல்வதாக இருந்தது  

 விழாவில் இயக்குநர் வி.சி.குகநாதன் பேசும்போது” “கலைஞர்கள் அனைவருக்குமே பொதுவானவர்கள். அவர்கள் அரசியல் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது. கலைக்கு மொழி பேதம் கிடையாது. 

நம் ஊரில்  யார் வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம். திறமையைக் காட்டலாம். ஜெயிக்கலாம். நன்றாக இருக்கலாம். தமிழகம் வந்தாரை வாழ வைக்கும். யாரையும் ஏமாற்றாது.

இங்கே நான் ஈழத்தைச் சேர்ந்தவன்.. இந்தப் படத்தின் ஹீரோவான கிஷோர் கன்னடத்தைச் சேர்ந்தவர். தயாரிப்பாளர் கேரளாவைச் சேர்ந்த மலையாளி.. கே.பாக்யராஜ்  தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர் . 

ஆனாலும் எல்லோரும் இங்கே ஒன்றாக இருக்கிறோம் . 

நாம் இப்படி திராவிடனாக இருக்கிறோம். ஆனால்   நாம திராவிடன்னு சொல்லி  இங்க  வாழ வைக்கிறவன்தான் , அங்கே நம்ம  ஆட்களை நீ தமிழன்டானு சொல்லி  அடிக்கிறான் 

kadi-1

மலையாளியான எம்ஜியார் இங்கே எந்த இடத்துக்கு உயர்ந்தார். நம் இதய தெய்வமாக ஆனார் . அவரை  மக்கள் மலையாளியாக பார்க்கவில்லை.  

புரட்சித் தலைவராக, தெய்வமாக பார்த்தார்கள். அது போலத்தான் அரசியல் தலைவர்களுக்கும் மக்கள் ஜாதி பார்த்து, இனம் பார்த்து தலைவராக்குவதில்லை.

கன்னட நடிகர் ராஜ்குமாரை முதன்முதலாக ‘பேடர கண்ணப்பா ’ (வேடன் கண்ணப்பன் ) என்ற  கன்னடப் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் நமது தமிழகத்தைச் சேர்ந்த ஏவி.எம். மெய்யப்பச் செட்டியார்தான். 

ஒரு தமிழன் அறிமுகப்படுத்தியதால்தான் அந்த ராஜ்குமார் கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக ஆக முடிந்தது. ஏவி.எம். செட்டியார் அதைச் செய்யாவிட்டால் ராஜ்குமாரின் நிலைமை இந்நேரம் என்னவாகியிருக்கும்..? 

ராஜ்குமாரை அப்போதும்கூட ‘கன்னட எம்.ஜி.ஆர்’. என்றுதான் சொன்னார்கள். அப்போதும் அவருக்கென்று ஒரு தனித்துவம் இல்லை. எம்.ஜி.ஆரை போலத்தான் என்றுதான் அழைத்தார்கள்.

இப்போது அங்கேயிருந்துதான் நமக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. காவிரி நீரைத் தரக் கூடாது என்று அங்கேயிருக்கும் கலைஞர்களே சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு. 

நீங்கள் கலைஞர்கள். உங்களுக்கு இது தேவையில்லாதது. அரசியல்வாதிகள் அரசியல் செய்யட்டும்   திரைப்பட கலைஞர்கள் தண்ணீரை  வைத்து அரசியல்  செய்து  பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்..”

kadi-3

–என்று மிக சரியாக பேசினார் 

இவருக்கு பின்பு பேச வந்த  கே.பாக்யராஜ், “குகநாதன் கொஞ்சம் டென்ஷனானவர். தமிழ் உணர்வுமிக்கவர். இப்படித்தான் பேசுவார்.

இப்போ இங்கே பேசாமல் இருந்தாலும் பிரச்சினையாயிரும் போலிருக்கு..

‘அங்க பார்த்தீல்ல.. அவங்க என்னவெல்லாம் பேசுறாங்க. செய்றாங்க.. உங்களுக்கு மானம், ரோஷம் இருக்கா.. சோத்துல உப்பு போட்டு சாப்புடுறீங்களா..?’ன்னு ,

நம்ம ஆளுக்கிட்ட நாலு பேர் கேட்கும்போது நாம என்ன செய்ய முடியும்..? 

நமக்கே இப்படியிருக்கே..? கர்நாடகால இருந்து வந்து தமிழ்நாட்டுக்கு சூப்பர் ஸ்டாரா இருக்குற ரஜினிக்கு எப்படி இருக்கும்..? அவருக்கு இது எவ்வளவு பெரிய தர்மசங்கடமான பிரச்சினை..? 

அங்க  உள்ள கலைஞர்கள் ஏன் போராட்டத்துல கலந்துக்கறாங்கன்னா , அவங்கள கலந்துக்க சொல்லி மற்ற கன்னட அமைப்புகள் வற்புறுத்தறாங்க.. அதனால் கலந்துக்கறாங்க  ” என்று சப்பைக்கட்டு கட்டினார் பாக்யராஜ் . 

ஆனால் பாக்யராஜ் சொல்வது சரி இல்லை .  மற்றவர்கள் வற்புறுத்தலுக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவன் அமைதியாக இருந்து விட்டு வந்து விடுவான் .

kadi-4

ஆனால் கர்நாடகாவில் நடக்கும் போராட்டங்களில்  கன்னட சினிமாக் கலைஞர்களின்  கேவலமான நாக் கூசும் பேச்சுக்களை கேட்டால்

 அவர்கள் கடமைக்கு பேசவில்லை  . காட்டுமிராண்டிகள் போல பேசுகிறார்கள் என்பது புரியும். திரைக்கதை மேதை என்று அறியப்படும் பாக்யராஜுக்கு இது கூட  புரியாத என்ன ?

கண்டிப்பாக  புரியும் 

உச்ச நீதி மன்றம் தானடா  தண்ணி விட சொன்னது ? ஒரு அப்பனுக்கு  பொறந்தவனுங்கன்னா கோபத்த  அது மேல காட்டிப் பாருங்கடா .

தமிழன் மேல ஏண்டா  காட்டறீங்கன்னு சொல்லும் ஆண்மையோ நேர்மையோ யாருக்கும் இல்லை என்பதுதான் வருத்தம் 

நாம் திறமை மட்டும் பார்க்கிறோம் . மொழி இன பேதம் பார்ப்பதில்லை . ஆனால் தமிழ் இனத்துக்கு பிரச்னை என்று வரும்போது எல்லாம் இப்படி  சாயங்கள் வெளுப்பதும் 

நாம் அதை வானவில்லாக எண்ணி  வண்ணம் பாடுவதும் … கேவலம் !

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *