
ஜெய் இந்திரா மூவீஸ் சார்பில் A.B.R தயாரிக்க , பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பவனும் , கோவிந்து என்பவரும் கதாநாயகனாக நடிக்க , , சத்ய ஸ்ரீ கதாநாயகியாக நடிக்க , கே. பாஸ்கர் இயக்கும் படம் காலகட்டம் .
மீனவக் குப்பங்களின் பின்னணியில் உருவாகும் நட்புக் கதை இது. ஒரு மீனவரும் நடனக் கலைஞரும் நண்பர்கள் . நண்பர்களில் ஒருவருக்கு கல்யாணம் ஆக , அந்த மனைவியையும் நண்பனையும் சந்தேகப்பட்டு கணவன் , நண்பனைப் பிரிய (வெவரமான கணவன் தான் ), கடைசியில் என்ன ஆனது என்பதுதான் படம.
” சந்தேகம் என்பது ஒரு இருட்டு . அந்த இருட்டு தூரத்தில் தெரியும்போதே விலகி விட வேண்டும் மாறாக உள்ளே நுழைந்து விட்டால் அவ்வளவுதான் என்று சொல்கிறேன் ” என்கிறார் இயக்குனர் பாஸ்கர் .
இவரது தந்தை ஒரு காஸ்டியூமர் . ஆர் எஸ் மனோகரின் நாடகங்களில் காஸ்டியூமராக இருந்தவர் . அப்பாவிடம் முதலில் பணியாற்றிய பாஸ்கர் பின்னர் நடனக் கலைஞராகை அப்புறம் நடன இயக்குனர் ஆகி தமிழ் தெலுங்கு மொழிகளில் பணியாற்றி விட்டு இப்போது இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஆகிறார் .
படத்தில் இடம் பெற்ற உன்னால் மயிலே என்ற பாடலை பாடி நடித்தும் கொடுத்த கானா பாலா, பாடல் மிக சிறப்பாக வந்த சந்தோஷத்தில் பாதி சம்பளம் போதும் என்று வாங்கிக் கொண்டாராம் . கலைச்சேவை .
கோவளத்தில் மீன் மார்க்கெட்டில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிக்காக ஒரு மதுபானக் கடை செட் போடப்பட , அது உண்மையான கடை என்று நம்பி குடிமகன்கள் வந்து விட்டார்களாம் . (வித்தீங்களா ?)
இப்போதெல்லாம் காமெடியிலும் வில்லத்தனத்திலும் கம்பைண்டாக கலக்கும் நான் கடவுள் ராஜேந்திரனும் படத்தில் இருக்கிறார். இந்தப் படம் முழுக்க நைட்டி போட்டுறலாமா ராஜேந்திரன் ?