இந்தியாவின் மிகச் சிறந்த ராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்று சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமி .
ஆரம்பத்தில் ஆபிசர் டிரைனிங் ஸ்கூல் என்ற பெயருடன் இயங்கிய இது, இந்தியாவின் மிக பழமையான ராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றும் கூட .
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் உருவாக்கத்துக்குப் பெரும் உதவி புரிந்தது சென்னை ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமி.
அதற்கு நன்றி சொல்லும் விதமாக ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமியில் ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு ஒரு காட்சி ,
இளம் ராணுவ வீரர்களுக்கு ஒரு காட்சி என்று இரண்டு காட்சிகள் (இந்திப் பதிப்புதான்) விஸ்வரூபம் படத்தைத் திரையிட்டார் கமல்ஹாசன்
நிகழ்வில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ” இந்த ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமிக்கும் எனக்கும் முப்பது ஆண்டுகளாக தொடர்பு உண்டு .
மருத நாயகம் படத்தில் நான் நடித்த போது, நான் பல ஆராய்ச்சிகள் செய்வதற்கு இந்த ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமி உதவியது .
அதோடு எனக்கு குதிரை ஏற்றம் மற்றும் ராணுவப் பயிற்சி அளித்து முழுக்க முழுக்க உதவியது இந்த ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமிதான்.
அப்போது முதல் என்னையும் நான் இந்த ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமி யின் மாணவனாக நினைத்துக்கொண்டு இருக்கிறேன், அதற்கான அருகதை எனக்கு குறைவு என்றாலும்கூட !
இங்கே பயிற்சி எடுத்த காலம் குறைவு . ஆனால் நான் இங்கே கற்றுக் கொண்டது அதிகம் . விஸ்வரூபம் படத்துக்கும்,
அப்படி அவர்கள் செய்த உதவி செய்தனர் . அதற்கு நன்றி சொல்லவே நான் இந்த திரையிடலை இங்கு செய்கிறேன்.
நமக்கும் ராணுவத்துக்குமான நெருக்கம் யாருக்கும் குறைந்தது அல்ல . நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்துக்கு பெரும்பலமாக இருந்தது நமது தென் தமிழ்நாட்டு மக்கள்தான் .
சுதந்திர இந்தியாவிலும் தமிழர்கள் ராணுவத்துக்கு செய்யும் சேவை கொஞ்சமல்ல .ஆனால் நம்மவர்கள் ராணுவத்தில் உயர் அதிகாரிகளாக வருவது இல்லை .
அந்த நிலை மாற வேண்டும் . இளைஞர்கள் ராணுவத்துக்கு வர வேண்டும் . அதற்கு பாலமாக என் பேச்சு அமைந்தால் ரொம்ப சந்தோஷப் படுவேன்.
நிகழ்வில் நான் கமல்ஹாசனிடம் சில கேள்விகள் கேட்டேன்
- இங்கே ராணுவப் பயற்சி பெறும் நிஜ வீரர்கள் விஸ்வரூபம் படத்தில் நடித்து இருக்கிறார்களா ?
ஆமாம் பங்கெடுத்து இருகிறார்கள் இருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் காட்சிகள் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது .
- ராணுவப் பின்னணியில் மேலும் படங்கள் எடுப்பீர்களா?
ராணுவம் தொடர்பான பல கதைகள் என்னிடம் இருக்கிறது. ஆனால் அவற்றில் மற்ற நடிகர்கள் நடிப்பார்கள் . . நான் நடிப்பேன் என்று சொல்ல முடியாது.
- நம்மவர்கள் ராணுவத்தில் உயர் பதவிக்கு வருவது இல்லை என்று சொன்னீர்கள் . என்ன காரணம் ? எப்படி சரி செய்யலாம் ?
சும்மா சாதாரண ராணுவ வீரனாக சேர்ந்தால் போதும் என்று நினைக்கக் கூடாது . இது போன்ற ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமிகளில் சேர்ந்து படித்தால்தான் உயர் பதவிகளுக்குப் போக முடியும்.
மருத்துவம் பொறியியல் போல இதுவும் ஒரு படிப்பு என்று புரிந்து கொண்டு படித்த இளைஞர்கள் இந்த படிப்பைப் படித்து ராணுவத்தில் உயர் பதவிக்கு போக வேண்டும் என்கிறேன் .
இன்று ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணம் செய்வதில் உள்ள ஆபத்து அளவுக்கு ராணுவத்தில் இருப்பது ஒன்றும் பெரிய ஆபத்தான விஷயம் அல்ல