சுகர் அண்ட் ஸ்பைஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் கப்ஸ் (நாக் ஆர்ட் புரடக்ஷன்ஸ்) சார்பில் சுகர், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் , அரவிந்த் கமலநாதன் .மற்றும்
பழம்பெரும் நடிகர் ,மேஜர் சுந்தர்ராஜனின் மகனும் நடிகருமான கௌதம் ஆகியோர் தயாரிக்க,
அரவிந்த் ஆகாஷ், எம் எஸ் பாஸ்கர், விச்சு என்கிற விஸ்வநாத், யோகி பாபு, சாந்தினி , அஸ்வதி , கல்யாண், கௌதம் ஆகியோர் நடிக்க,
எஸ் ஜி எஸ் கதைக்கு ராதா கிருஷ்ணன் வசனம் எழுத , திரைக்கதை எழுதி மேஜர் கௌதம் இயக்கி இருக்கும் படம் கண்ல காச காட்டப்பா.
வருத்தமான சமயத்தில் பொருத்தமான பெயர் கொண்ட இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்,
சென்னை 28 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர் .
பெருமளவு பணம் நகர்வில் ஏற்படும் சதிகள் சண்டைகள் சச்சரவுகள் உட்டாலக்கடி வேலைகள் இவை பற்றிய படம் இது என்பது படத்தின் முன்னோட்டத்தில் தெரிந்தது .
முன்னோட்டத்தில் மேஜர் சுந்தர்ராஜனின் முகம் வரும்போது அந்த முன்னோட்டத்துக்கே ஒரு கம்பீரம் வருகிறது.
பாடல்களில் சாந்தினியும் புதுமுகம் அஸ்வதியும் அழகழகாக ஆடுகிறார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மேஜர் கௌதம் “அப்பாவின் ஆசிர்வாதங்கள் என்றும் இருக்கும் . இந்தப் படம் உருவாக காரணமாக இருந்த டான்ஸ் மாஸ்டர் கல்யாணுக்கு நன்றி .
தயாரிப்பிலும் அவர் இணைந்து இருக்கிறார். எனக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும் என் அம்மாவுக்கும் மனைவிக்கும் நன்றி ” என்றார் .
புதுமுகம் அஸ்வதி ” இயக்குனர் கௌதம் மனைவி நடத்தும் டான்ஸ் ஸ்கூலில் படித்தவள் நான் . எங்க டான்ஸ் டீச்சர் மூலம்தான் நான் டைரக்டருக்கு அறிமுகம் ஆகி இந்த வாய்ப்பை பெற்றேன்” என்றார் .
“என்னை இந்த ஹீரோ கேரக்டருக்கு சிபாரிசு செய்தவரும் அவரே ” என்றார் நாயகன் அரவிந்த் .
இயக்குனர் வெங்கட் பிரபு “சென்னை 28 முதல் பாகத்தில் நடித்தவர்களிலேயே மிகவும் சின்சியர் ஆன நடிகர் இந்தப் படத்தின் நாயகன் அரவிந்த்தான் . உடம்பை குறைக்க சொன்னால் குறைப்பார் .
குண்டாக சொன்னால் செய்வார் . அவர் இன்னும் சினிமாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையாதது எனக்கு வருத்தமே .
இந்தப் படம் அவரை சினிமாவில் முக்கிய இடத்துக்கு கொண்டு வர வேண்டும் ” என்று வாழ்த்தினார்
நிகழ்ச்சியில் மேஜர் சுந்தர்ராஜனின் மனைவியாரும் கலந்து கொண்டார் .