வி.ஆர்.கம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘கதிர்’ திரைப்படத்தில் , 8 முறை பிளாக் பெல்ட் வாங்கியுள்ள சர்வதேச குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
புதுமுகங்கள் விஷ்வா, நீராஜா இணையராக நடிக்கும் இப்படத்தில் கஞ்சா கருப்பு, கோலிசோடா பாண்டி, சுப்புராஜ், பசங்க சிவக்குமார், செந்தி, சிந்து, சங்கவி, பருத்திவீரன் சுஜாதா ஆகியோர் நடிக்கின்றனர் .
ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பு செய்கிறார். அண்ணாமலை, கபிலன் ஆகியோர் பாடல்கள் எழுத, ‘இசைக்கவிஞர்’ செளந்தர்யன் இசையமைக்கிறார்.
சேரன் பாண்டியன் ’, ‘சிந்துநதி பூ’, ’கோபுர தீபம்’ உள்ளிட்ட, பல சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்த படங்களுக்கு இசையமைத்துள்ள செளந்தர்யனுக்கு இது 50 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடிக்கும் ராஜநாயகம், இப்படத்தின் ஹீரோ புதுமுகம் என்பதால், அவருக்கு முறையான சண்டைப்பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வருவதோடு,
இப்படத்தின் ஆக்ஷன் இயக்குநர் மிரட்டல் செல்வாவுடன் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் தனது பங்களிப்பையும் வழங்கி வருகிறார்.
பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தோழர் அரங்கன், என்பவர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிரார்.
வி.ஆர் கம்பைன்ஸ் சார்பில் ஆர். விமலா ராஜநாயகம் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
படம் குறித்து இயக்குநர் தோழர் அரங்கன் கூறுகையில்,
“அறிவு, கொள்கை என சமூக அக்கறையோடு வாழும் ஓர் இளைஞனின் வாழ்வில்
காதல் கடந்து போனால் என்ன நடக்கும் என்பதை, யதார்த்தமாக தமிழ்க் கலாச்சார பண்போடு சொல்பவன்தான் இந்த ‘கதிர்’.
இளைஞர்களுக்கு பிடித்த வகையில் காதலும், குடும்பத்தோடு பார்க்கும் விதத்தில் காமெடியும் என, படம் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான முறையில் இப்படத்தை உருவாக்கி வருகிறோம்” என்கிறார் .