சிவி பிலிம்ஸ் சார்பில் C.வெங்கடேஷ் தயாரிக்க, புதுமுகங்கள் கிரண், திவ்யா, வந்தனா, பிரக்னா N.பாபு, மஞ்சுநாத், மது, ஜெயராஜ், பைரக கவுண்டர், நாகராஜ் ஆகியோர் நடிப்பில்
கதை, திரைக்கதை, வசனம், எழுதி K.நரேந்திர பாபு இயக்கும் படம் “கேட்காமலே கேட்கும்”
இந்த இயக்குனர் கன்னடத்தில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மூன்று படங்கள் பெரிய வெற்றி பெற்றவையாம்
படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் , இசை – கிரிதர்திவான் எடிட்டிங் – k.கிரிஷ் குமார், பாடல் – பாரதிவள்ளி.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னோட்டத்தை திரையிட்டனர் . பேய்ப் படம் ! இதயத்துடிப்பை முன்னிறுத்தி வந்த ஒரு பாடல் இனிமை .
நிகழ்ச்சியில் படம் பற்றிப் பேசிய இயக்குனர் K.நரேந்திர பாபு “சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசு இருக்கும்.
பேய்க்கதைகள் என்பது ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும். இதுதான் பேய்க்கதைகளின் ஒன் லைன்.
“கேட்காமலே கேட்கும்” திரைப்படம் டெக்னாலஜி பேய்ப் படம் ! செல்போனிலிருந்து பேய் ஊடுருவி இன்னொரு செல்போனுக்கு செல்கிறது.
ஹாரர் மூவியின் அடையாளத்தையும் கொஞ்சம் மாறுபட்டு யோசித்திருக்கிறேன்.

செல்போனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகில் ‘கொல்லும்’ அளவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
கதைக்கேற்ப டெக்னாலஜிகள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சென்னை, மன்னார், கொடைக்கானல், கர்நாடக மடக்கேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது ” என்றார்
மிரட்டுங்க !

