விஜய்யின் ஸ்டில்லை வீரியமாக போட்டு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் ரிலீஸ் என்று கத்தி படத்துக்காக செய்தித்தாள்களில் விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் தீபாவளி ரிலீஸ் பற்றி தீவிரமாக பேசும் சினிமா புள்ளிகள் “கத்தி ரிலீஸ் கன்பார்ம் தானே?” என்று கேட்டால் மட்டும் சட்டென்று மவுனம் காத்து திருதிருவென முழிக்கிறார்கள் .
ஏனாம் ?
கத்தி, புலிப் பார்வை படங்களை ரிலீஸ் செய்ய தடை இல்லை என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை அறிவித்த பின்னரும் , வேல்முருகனின் வாழ்வுரிமைக் கட்சி ‘கத்தி படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் . மீறி செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்’ என்று தொடர்ந்து குரல் கொடுக்கிறது .
ஏற்கனவே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் பலரும் கண் வைத்து இருக்க, அதே சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கத்திக்கும் கத்தி வைக்கும் எண்ணத்தில் சில ‘பவர் பாயிண்டுகள்’ இருக்கிறார்கள் .
தவிர , ஜெயலலிதா கைது செய்யப்பட சமயத்தில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடியதையும் ரசிகர் மன்ற மாவட்டத் தலைகளுக்கு சென்னையில் வைக்கப்பட்ட பார்ட்டியையும் ஆளும் தரப்பு ரசிக்கவில்லை என்கிறார்கள் .
ஆக, இருக்கிற சிக்கலில் இதை பெரிது படுத்த வேண்டாம் என்று சம்மந்தப்பட்டவர்கள் ஒதுங்கி நின்றால் மட்டுமே கத்தி பளபளவென தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும்
— என்று குசுகுசுக்கிறது கோட்டை வட்டாரம் .
இன்னும் ஓரிரு நாளில் நிலவரம் தெரிந்து விடும்