விழியே கதை எழுது, மலரே குறிஞ்சி மலரே, தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே போன்ற பாடல்கள் மூலம் தமிழகத்திலும் புகழ்பெற்ற மலையாளப் பாடகரான கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் என்கிற கே ஜே யேசுதாஸ்,
திரை இசை, கர்நாடக இசை, இவற்றின் அடிப்படையில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியவர் .
1961ல் முதல் முறையாக மலையாளத்தில் பிரபல கவிஞர் ஸ்ரீ நாராயண குரு எழுதிய ’ஜாதி பேதம் மத துவேஷம் ஏதுமில்லா’ என்ற பாடலை கால்பாடுகள் என்ற படத்தில் பாடி அறிமுகம் ஆனவர்.
1964 ஆண்டு எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக “நீயும் பொம்மை, நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது.
, ஏழு முறை தேசிய விருது களையும் . மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறையும் சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். 1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார்.
1968ல் சோவியத் அரசின் அழைப்பின் பேரில் கலாசாரத் தூதராக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கஜகஸ்தான் வானொலியில் இவர் பாடிய ரஷ்ய மொழிப் பாடல் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (2001), சிட்னி ஓபரா ஹவுஸ் (2006) அரங்குகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது..
யேசுதாஸ் தமிழில் பாடகராக அறிமுகம் ஆகி ஐம்பதாண்டுகள் ஆனதை கவுரவிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறது.
ஜனவரி 25ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மேலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு யேசுதாசை கவுரவிக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜேசுதாஸ் பாடிய பல பாடல்கள் தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் மேலாகப் பாடப்பட இருக்கின்றன. . இந்நிகழ்வில் பல்வேறு இசையமைப்பாளர்களும், பின்னணிப் பாடகர்களும், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும் இசைத்துப்பாடி கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்க உள்ளனர்.
மறைந்த கே. பாலச்சந்தரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் இயக்கிய சிந்து பைரவி படத்தில் யேசுதாஸ் பாடிய அனைத்து பாடல்களும் இந்த நிகழ்ச்சியில் பாடப்பட உள்ளன
இந்த 2015-ம் வருடம் ஜனவரி 10ம் தேதி அன்று 75வது பிறந்தநாள் காணும் யேசுதாசின் பிறந்தநாள் கொண்டாட்டமாகவும் இந்த நிகழ்ச்சி அமைகிறது .
இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.
ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள் லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் – வடபழநி /எம் 6 ஈவண்ட்ஸ் – சி.ஐ.டி நகர், நந்தி சிலை அருகில் / நாயுடு ஹால் – அனைத்து கிளைகளில் கிடைக்கும் (மேலும் விவரங்களுக்கு: 99419 22322, 98419 07711, 88070 44521, 044 – 4286 7778.)
இணையதளம் மூலமாக (Online Ticket Booking) டிக்கெட் முன்பதிவு செய்யவும் கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ள்து.
Comments are closed.