குரங்கு பொம்மை @ விமர்சனம்

Vidharth & Delna Davis (4)

ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் எல் எல் பி தயாரிப்பில்  இயக்குனர் பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ், குமார வேல், தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் ஆகியோர் நடிக்க,

நித்திலன் என்பவர் இயக்கி இருக்கும் படம் குரங்கு பொம்மை . படம் வெறும் பொம்மையா இல்லை உணர்வுள்ள உயிரா ? பார்க்கலாம் 

திருடனாய் இருந்து சிலை கடத்தும் சமூக விரோதி ஒருவனால்  (தேனப்பன்) உறவுக்காரர்கள் என்னும் திருடர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட —
பால்ய காலந்தொட்ட விசுவாச நண்பன் ஒருவனுக்கு (பாரதிராஜா ), மனைவி (ரமா) மகன் (விதார்த்) ஒரு மகள் என்று அழகிய குடும்பம் . 
Bharathiraja (1)
ஊரறிந்த அயோக்கியனுக்கு விசுவாசி துணையாக இருப்பது , அவரது மனைவி , மகன் மற்றும் மகளுக்குப் பிடிக்கவில்லை . ஆனாலும் விசுவாசி மாறவில்லை . 
அது அவரது குடும்பத்தாருக்குப் பல பின்னடைவுகளை ஏற்படுத்துகிறது . 
உதாரணமாக கல்யாணத்துக்கு பெண் பார்க்கப் போன இடத்தில் பெண்ணுக்கு (டெல்னா டேவிஸ்) மாப்பிள்ளையைப் பிடித்து இருந்தாலும் ,
மாப்பிளையின் அப்பா (பாலாசிங்) ”கடத்தல்காரனின்  நண்பன் மகனுக்கு பெண் தர மாட்டேன்” என்று அவமானப்படுத்த கை கலப்பு ஆகிறது . 
அதன் பின் அவளும் அவனும் பழகினாலும் பெண்ணின் அப்பா மனதில் கோபம் குறையவில்லை .
Vidharth & Delna Davis (2)
இந்த நிலையில் ஐந்து கொடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் சிலை  ஒன்றை விசுவாசியிடம் கொடுத்து கைமாற்ற அனுப்புகிறான் கடத்தல்காரன். அது என்ன என்றே தெரியாமல் கொண்டு போகிறார் விசுவாசி . 
பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்காத ஒரு  சிலைக்  கடத்தல் இடைத் தரகன்  (குமாரவேல் ) சிலைக்குக் கிடைக்கும் பணத்தை,
 தானே முழுக்க வைத்துக் கொள்ள எண்ணி , விசுவசியைக் கொல்ல முயல்கிறான் . 
மகளின் திருமணத்துக்காக கடத்தலில் இறங்கும் துணைத் தரகன் ஒருவனும் (மேனேஜர் கிருஷ்ண மூர்த்தி) அதற்கு துணை போகிறான் . 
Kumaravel & Krishnamurthi
விசுவாசிக்கு ஆபத்து என்று மகனுக்கு தெரிய வருகிறது . தன்னிடம் பிக் பாக்கெட் அடிக்க முயன்ற பண வெறியன் ஒருவனின் (கல்கி ) துணையோடு,
கடத்தல் ஏரியாவுக்குள் புகுந்து அப்பாவைக் காப்பாற்ற மகன் முயல ,  அப்புறம் என்ன நடந்தது என்பதே குரங்கு பொம்மை 
நிதானமான விவரணை , அழுத்தமான மேக்கிங் என்று படம் பயணிப்பதால் சின்னச் சின்ன காட்சிகள் கூட மனதில் முழுக்கப் பதிகின்றன . சிறப்பு 
மாத்தி யோசி பாணியில் மடோன் அஸ்வின் எழுதி இருக்கும் வசனங்கள் படத்தின் பெரிய பலம் .  அதில் நகைச்சுவை, கணம், விமர்சன பார்வை எல்லாம் இருப்பது அழகு.  சபாஷ் 
Vidharth & Delna Davis (1)
இசையும் ஒளிப்பதிவும் ஒகே . 
மிக இயல்பான கேரக்டரில் மிகச்  சிறப்பாக நடித்துள்ளார் விதார்த் . நடிப்பென்றே தெரியாத நல்ல நடிப்பு .  தன்னை கொல்லப் போகிறவனிடமே,
 தான் சிலை கடத்துபவனுக்கு நண்பனாக இருக்கும் காரணத்தை விவரிக்கும் இடத்தில்,  நெக்குருக வைக்கிறார் பாரதிராஜா . கிரேட் . 
மிக சாதரணமான கதாபாத்திரமாக அறிமுகமாகி வில்லத் தனத்தில் விஸ்வரூபம் எடுக்கிறார் குமாரவேல் பண்பட்ட நடிப்பு . 
Kumaravel
பிக் பாக்கெட்காரனாக வரும் கல்கி எக்ஸ்பிரஷன்களில் கவர்கிறார் . கேரக்டரை உணர்ந்து நடிக்கிறார் . 
சிலை கடத்தல் தாதாவாக தேனப்பன் தோற்றத்திலேயே அசத்துகிறார் . 
கிருஷ்ண மூர்த்தி தொலைத்த பையை பிளாஷ்பேக்கில் பாரதிராஜா எடுத்துப் போவதைக் காட்டும் போதே கதை புரிந்து விடுகிறது . அப்புறம் அதை விலாவாரியாக காட்சியில் காட்ட வேண்டுமா ?
பாரதிராஜாவின் செல்போனை துப்புரவுத்  தொழிலாளி குப்பைத்   தொட்டியில் இருந்து எடுத்ததை அவன் மனைவி விளக்கமான சொன்ன பிறகும் நடந்ததை ஆதியோடு அந்தமாக காட்டுவதும் அப்படியே .
மீண்டும் மீண்டும் வண்ணத்தில் இருந்து கறுப்பு வெள்ளைக்குப் போய் பிளாஷ்பேக் ஆரம்பிக்கும் அந்த உத்தி ஒரு நிலைக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகிறது . 
Vidharth
இது யாருடைய கதை ? சிலை கடத்தல் தாதா , விசுவாசி  , அவர் மகன் , இவர்களது கதையா ? அல்லது பணத்துக்காக எதையும் செய்யும் ஒரு கொடூரனின் கதையா ? 
அவர்கள் கதையாக ஆரம்பித்து இவனது கதையாக முடிவதே ஒரு imbalanceதான் .
தப்பு செய்யும் எல்லாரும் தண்டனை பெறுவதைக் காட்டுவதே திரைக்கதையின் நோக்கம் என்றால் , கொடூரனின் பொண்டாட்டி செய்யும் தப்புக்கு அவள் தண்டனை பெறுவதையும்  சொல்லலாம்  .
நாயகியின் அப்பா செய்த தப்புக்கு அவர் தண்டனை பெறுவதையும் சொல்லலாமே . இந்தப் படத்தை இப்படி ஏன் முடிக்கணும் ? 
Bharathiraja (3)
இப்படி சில குறைகள் இருந்தாலும் வித்தியாச மனிதர்கள் , வித்தியாசமான பார்வை இவற்றால் பாராட்ட வைக்கிறது படம் . 
குரங்கு பொம்மை .. மனசுக்குள் தாவும் 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *