இன் சினிமாஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் அருண்விஜய்யின் மனைவி ஆர்த்தி அருணும் ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தர் குமாரும் சேர்ந்து தயாரிக்க,
அருண் விஜய் , மகிமா நம்பியார், தம்பி ராமையா, அபிநயா ஆகியோர் நடிப்பில் ,
ஈரம் வல்லினம், ஆறாது சினம் போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் கவர்ந்திருக்கும் இயக்குனர் அறிவழகன் இயக்கி இருக்கும் படம் குற்றம் 23.
மர்மக்கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு கிரைம் நாவலை முறைப்படி உரிமம் வாங்கி இந்தப் படத்தை உருவாக்குகிறார்கள்.
இன்னும் ஒரு சில நாட்களே மிச்சமிருக்க , பெரும்பகுதி படப் பிடிப்பு முடிந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் அருண் விஜய் , இந்தர்குமார் மற்றும் இயக்குனர் அறிவழகன் மூவரும்
முதலில் பேசிய அருண்விஜய் “ நான் சொந்தக் கம்பெனி துவங்கியது பல புதிய திறமையாளர்களை சினிமாவுக்குக் கொண்டு வரும் பெருமையை அடையத்தான் .
ஆனால் நான் படம் தயாரிக்க விரும்புகிறேன் என்றதும் நண்பர் இந்தர்குமார் இணைந்தார் .
புதுமுகங்களை வைத்து படம் எடுகத்தான் முதலில் நினைத்தேன் . ஆனால் நிறுவனத்துக்கு ஒரு நல்ல ஆரம்பம் இருக்கட்டும் என்றே நான் நடிக்க முடிவு செய்தேன் .
என்னை அறிந்தால் படத்தில் வில்லன் விக்டராக நடித்து கிடைத்த புகழ் அந்த தைரியத்தை கொடுத்தது .
எனக்கு அறிவழகன் சார் படங்கள் ரொம்ப பிடிக்கும் . அவரிடம் கதை கேட்டபோது அவர் இந்தக் கதையை சொல்ல உடனே சம்மதித்தேன் . அவ்வளவு சிறப்பான கதை .
அதற்கேற்ப மற்ற நடிக நடிகையர் வந்தார்கள் .
நான் இந்தப் படத்தில் அசிஸ்டன்ட் கமிஷனராக நடிக்கிறேன் . போலீசாக நடிக்கும் முதல் படம் இது
போலீஸ் கதா பாத்திரத்தில் நடிக்கும் போது மிக முக்கியமாக கற்று கொள்ள வேண்டியது அவர்கள் அடிக்கும் சல்யூட் தான். அதை கனகச்சிதமாக நான் கற்றுக்கொள்ள உதவியவர், என்னுடைய ரசிகர் ஒருவர் தான்.
போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரியும் அவர், வாட்ஸாப் மூலம் எனக்கு சில வீடியோக்களையும், ஒரு சில குறிப்புகளையும் வழங்கினார்..”
என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வந்திருந்தாலும், ஒரு தனித்துவமான கதைக்களம் கொண்ட திரைப்படத்தை தான் நான் தேடி கொண்டிருந்தேன்.
அந்த ஆசை எனக்கு இயக்குனர் அறிவழகன் சார் மூலம் இப்போது நிறைவேறி உள்ளது.
கவுதம் மேனன் எனக்கு விக்டர் என்ற நல்ல கேரக்டர் கொடுத்தார் . அறிவழகன் என்னை வெற்றிமாறன் ஆக்கி இருக்கிறார் . படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது .
ஆகஸ்டு கடைசியில் படம் திரைக்கு வரும் எனது அடுத்த படத்தையும் அறிவழகன் சாரே இயக்கினால் ரொம்ப சந்தோஷப்படுவேன் “ என்றார்
இந்தர்குமார் தனது பேச்சில் “ அருண் விஜய்யின் சினிமா திறமை அறிவேன் . அறிவழகன் சார் படங்கள் எல்லாமே சிறப்பானவை . இருவரும் இணைந்த படத்தில் நானும் இருப்பது சந்தோசம் .
அருண் விஜய் தயாரிக்கும் எல்லா படங்களிலும் நானும் தயாரிப்பாளராக இருப்பேன் . விரைவில் அடுத்த படம் பற்றிய தகவலும் வரும் “ என்றார் .
இயக்குனர் அறிவழகன் பேசும்போது
“அருண் விஜய்யை வைத்து ஒரு படம் செய்யவேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம்
அப்புறம் எனக்கு சின்ன வயசு முதலே புதுமைப் பித்தன், ஜெயகாந்தன் , சிவசங்கரி போன்றோரின் கதைகளை பிடிப்பது போலவே துப்பறியும் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதைகள் ரொம்பப் பிடிக்கும் .
தவிர மெடிக்கல் கிரைம் பற்றி ஒரு படம் செய்ய வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை .
இந்தமூன்று விசயங்களையும் இணைக்கும் படம்தான் இந்த குற்றம் 23.
ராஜேஷ்குமாரை சந்தித்து அவரது கதை வேண்டும் என்று கேட்டபோது அவர் பத்துப் பதினைந்து புத்தகங்கள் கொடுத்தார் .
”நீங்கள் நல்ல டைரக்டர் . உங்கள் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் . இந்தக் கதைகள் உங்களுக்குப் பொருத்தமானவை. இவற்றில் ஒன்றை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்
அப்படி அவர் கொடுத்த கதைகளில் ஒரு மெடிக்கல் திரில்லர் கதையும் இருந்தது . அதையே நான் எடுத்துக் கொண்டேன் .
கதையின் அடிப்படையை மட்டும் எடுத்துக் கொண்டு , நிறைய சேர்த்து எனது பாணியில் திரைக்கதை வசனம் எழுதினேன் .
எப்படி மற்ற சராசரியான திகில் படத்தில் இருந்தும், விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படங்களில் இருந்தும் நான் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் படங்கள் தனித்து விளங்கியதோ,
அதே போல் குற்றம் 23 திரைப்படமும் மற்ற மெடிக்கல் – க்ரைம் – திரில்லர் படங்களில் இருந்து தனித்து விளங்கும்.
குற்றம் 23 என்ற பெயரில் உள்ள அந்த 23 என்ன என்பது சஸ்பென்ஸ் . அது படத்தில் எல்லோரையும் கவரும் விசயமாக இருக்கும் . வெகுஜன மக்கள் பலரும் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்னை அது .
தம்பி ராமையா காமெடியாக மட்டும் அல்லாமல் கேரக்டராகவும் வருவார் எல்லா நடிகர்களுக்குமே முக்கிய பங்கு இருக்கும் .
படத்தில் அருண் விஜய்யின் அப்பா விஜயகுமார் சாரும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார் .
ஆறாது சினம் படத்தை நாற்பது நாளில் எடுத்து முடித்தேன். இந்தப் படத்தை அதை விட பல மடங்கு பெரிதான சிறப்பான மேக்கிங்கில் நாற்பத்தைந்து நாளில் முடிக்கிறேன் .
எல்லோருக்கும் தேவையான ஒரு மெசேஜ் இந்தப் படத்தில் இருக்கும் . எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கிற சுவாரஸ்யமான படமாகவும் இருக்கும் “ என்றார் .
வாழ்த்துகள் !









