சிங்கப்பூரை சிலிர்க்க வைத்த ‘ பறந்து செல்ல வா ‘

 

psv 88

8 பாய்ண்ட் என்டர்டைன்மென்ட் சார்பில்  பி. .அருமைச் சந்திரன் தயாரிக்க ,

நாசரின் மகனும் , ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் நடித்தவருமான லுத்புதீன் நாயகனாக நடிக்க , ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க 

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் இயக்குனர் தனபால் பத்மநாபன் இயக்கி இருக்கும் படம் பறந்து செல்ல வா.

ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர ஆனந்தி சுஜாதா என்று பல துணைக் கதாநாயகி நடிகைகள் .இவர்களோடு நரேல் கெங் என்ற ஒரு சீனப் பெண்ணும் முக்கியக் கதாநாயகியாக நடிக்கிறார் .

ஸ்கேன்னி பேங் என்பவர் உள்ளிட்ட சில அயல்நாட்டு வில்லன்களும் உண்டு

சிங்கப்பூரில் 18.06.2016 அன்று நடைபெற்ற பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

pssv

ட்ரெய்லரை வெளியிட்டுப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் தமிழக மற்றும் சிங்கப்பூர் கலைஞர்களின் பங்களிப்புடன் தயாராகியுள்ள இத்திரைப்படம் ஒரு முன்னோடி முயற்சி என குறிப்பிட்டார். 

படத்தின் இசைத்தட்டை நாடாளுமன்ற நியமன உறுப்பினர் கணேஷ் ராஜாராம் வெளியிட இயக்குனர் பா. ரஞ்சித் பெற்றுக் கொண்டார். 

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் முக்கிய தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட இவ்விழாவின் ஏற்பாடுகள் வண்ணமயமாக இருந்தது.

ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்ட சிங்கப்பூரின் பெரும்பாலான இடங்கள் தாங்களே பார்க்காத புது இடங்கள் என சிங்கப்பூர் வாழ் பார்வையாளர்கள் பிரமித்துப் போனார்கள்.

சிங்கப்பூர் மக்கள் காலத்திற்கும் கொண்டாடும் படமாக இத்திரைப்படம் இருக்கும் என சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒருமனதாகப் பாராட்டினார்கள்.

psv 4

இதை அடுத்து அண்மையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .

படத்தின் பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டது.

ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு “ என்று பாடல்களில் சிலாகித்த காலம் எல்லாம் மலையேறி விட்ட நிலையில் ,

எப்போதும் ரொமாண்டிக் ஆக இருக்கும் ஓர் இளைஞன், 

தனது காதல்கள் தோல்வி அடையும்போது எல்லாம் மனம் தளாராமல் ,அடுத்தடுத்த பெண்களைக் காதலிப்பதும் அந்தந்தக் காதல் காலத்தில் அந்தக் காதல்களுக்கு உண்மையாகவும் இருக்கும் நிலையில் ,

ஒரு கோபக்கார சீனப் பெண் மீது அவனுக்கு வரும் காதல் என்ன முடிவை நோக்கிப் போனது என்பதே இந்தப் படம என்பது ,

படத்தின் முன்னோட்டத்தில் தெரிந்தது.

psv 6

ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் சிங்கப்பூரில் படமாக்கப்பட்ட பாடல்கள் எல்லாம் செவிக்கும் கண்ணுக்கும் சிந்தைக்கும் விருந்தாக இருக்கின்றன .

சிங்கப்பூரின் உயர்ந்த கட்டிடங்களில் உச்சிக்கும் மேல்  கேமராவை பயன்படுத்தி , ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் விஜயகுமாரும் பிரபாகரனும் படமாக்கி இருக்கும்விதம் வாய் பிளக்க வைக்கிறது .

(யூனிட்ல யாருக்கும் வெர்டிகோஃபோபியா இல்லையோ ?)

பெண்மையைப் போற்றும் ஒரு பாடல் அபாரம் .

நிகழ்ச்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் அருமைச் சந்திரன்

psv 9

 

“ முதல் இரண்டு படங்கள் நன்றாகப் போகாத நிலையிலும் நான் எடுத்து இருக்கும் மூன்றாவது படம் இது .

அவற்றில் கிடைத்த பாடங்களை வைத்து இந்தப் படத்தை சிறப்பாகத் திட்டமிட்டேன் .அதன் காரணமாக இப்போதே இந்தப் படம் எல்லோரையும் கவர்ந்து இருக்கிறது .

 

முழுக்க முழுக்க சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இது .

அது மட்டுமல்ல .. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்தியபோது,

 சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழர்கள் அல்லாத சிங்கப்பூர் பிரபலங்கள் பலர்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இப்படி ஒரு பெருமையை பெற்ற முதல் திரைப்படமும் இதுதான்

சதீஷ் , கருணாகரன் , ஆர் ஜே பாலாஜி என்று மூன்று நகைச்சுவை நடிகர்களை முதன் முதலில் இந்தப் படத்தில் ஒன்று சேர்த்து இருக்கிறேன் .

psv 3

படத்தில் நடித்த நடிகையர் தொழில் நுட்பக் கலைஞர்கள் கொடுத்த ஒத்துழைப்பு நன்றாக இருந்தது .படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர இருக்கிறோம் “ என்றார் .

நிகழ்ச்சியில் பேசிய சதீஷ் , “ ஒரு படத்துக்கு என்னை ஃபாரின்னு சொல்லி பம்பாய்க்கு அழைசுட்டுப் போய்ட்டாங்க .

ரொம்ப நாளா நான் கோவாவையே ஃபாரின்னுதான் நினைச்சுட்டு இருந்தேன். அதனால படத்துக்கு என்னை கேட்டபோது , முழு ஷூட்டிங்கும் சிங்கப்பூர்னு சொன்ன உடனே யோசிக்காம தேதி கொடுத்துட்டேன் .

சிங்கப்பூரில் தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் அருமையாக கவனித்துக் கொண்டார். இந்தப் படத்தில் நான் நடிக்காம இருந்திருந்தா சிங்கப்பூர் ட்ரிப்பை மிஸ் பண்றது மட்டுமில்ல ,

ஒரு நல்ல படத்தையும் மிஸ் பண்ணி இருப்பேன்” என்றார்

psv 5

ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் விஜயகுமாரும் பிரபாகரனும் ” படப்பிடிப்புக்கு என்று நாங்கள் கேட்ட எல்லா வசதிகளையும்  தவறாமல் தயாரிப்பாளர் செய்து கொடுத்தார் .

அதனால்தான் எல்லோரும் இப்போது பாராட்டும் அளவுக்கு சிறப்பாக படம் எடுக்க முடிந்தது “ என்றார் .

படத் தொகுப்பாளர் எம் வி ராஜேஷ் குமார் பேசியபோது “லுத்புதீன் மிக சிறப்பாக நடித்துள்ளார் . எடிட்டிங்கின் போதே சதீஷின் ஜோக்குகளுக்கு அப்படி ரசித்து சிரித்தோம் . ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்துள்ளார் .

சீன நடிகை நரேல் கெங் படத்தில் நடிப்பு ஆக்ஷன் இரண்டிலும் அசத்தி இருக்கிறார் . “ என்றார் .

“பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு சந்தோஷமாக இருக்கிறது . பாடல்கள் நன்றாக படமக்கப்பட்டும் இருப்பது மகிழ்வாக இருக்கிறது “ என்றார் இசை அமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர்

psv 2

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது “ அண்மையில் ஒரு திரைப்பட நிறுவனத்தில் என்னை[க் கதாநாயகியாக போடுவது பற்றிப் பேச்சு வந்தபோது

‘ஐஸ்வர்யா கிராமத்துப் பொண்ணு சேரிப் பொண்ணு மாதிரி கேரக்டர்களுக்கு தான் செட் ஆவார் ‘ என்று கூறி, 

வேறு நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டதாக அறிந்தேன் .காக்கா முட்டை போன்ற சிறந்த படங்களால் வந்த பாதிப்பு அது .

ஆனால் இந்த பறந்து செல்ல வா படம் வந்த பிறகு அந்தக் கருத்து மாறும் . நவீனமான ஸ்டைலான கேரக்டர்களுக்கும் என்னை அழைப்பார்கள் . அப்படி ஒரு கேரக்டர் இது .

வழக்கமான பார்வையில் இருந்து விலகி என்னை இந்த நவீனமான கேரக்டரில் நடிக்க வைத்த இயக்குனர் தனபாலுக்கு நன்றி “ என்றார் .

லுத்புதீன் தனது பேச்சில்

psv 8

“ ஆரம்பத்தில் படப்பிடிப்பில் சில நாட்கள் பயமாகவே இருந்தது . அப்புறம்தான் சகஜமானேன் .சதீஷ் கருணாகரன் பாலாஜி ஆகியோருடன் நடித்தது சந்தோசம் .

ஒரே ரூமில் தங்கி இருந்தோம் . ஜாலியாக இருந்தது

இந்தப் படத்தில் எல்லோருமே நன்றாக நடித்து இருக்கிறார்கள் . ஐஸ்வர்யா ராஜேஷ் பிரம்மாதமாக நடித்து இருக்கிறார் .

எனினும் நரேல் கெங் காட்டிய ஈடுபாடு பிரம்மாதமானது . அவர் சீனப் பெண் . அவருக்கு தமிழ் தெரியாது .

படப்பிடிப்பில் அவர் வசனம் பேசும்போது ‘உச்சரிப்பும் உதட்டசைவும் சுமாராக இருந்தால் கூட போதும் . டப்பிங் பேசுபவர் பார்த்துக் கொள்வார்’ என்று நாங்கள் எல்லோரும் சொல்வோம்.

ஆனால் அவர் அப்படி விடவில்லை . அந்த தமிழ் வார்த்தைகளை சரியாகக் கற்று அர்த்தம் அறிந்து சரியான உச்சரிப்புடன் நடித்தார் “ என்று பாராட்டினர் .

psv 77

இயக்குனர் தனபால் பத்மநாபன் பேசும்போது “ இது ஒரு கதாநாயகனின் படம் அல்ல . கதை நாயகனின் படம் 

படத்தில் வரும் முக்கிய முடிவுகளை எல்லாம் பெண்களே எடுப்பார்கள்.  இது பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் படம் 

இந்தக் கதையை நான் ஆரம்பத்தில் வேறு சில ஹீரோக்களிடம் சொன்னபோது , ‘அட்லீஸ்ட் கிளைமாக்சில் வரும் முடிவையாவது நான் எடுக்கிறேனே ‘ என்றார்கள் .

அது படத்தை பாதிக்கும் என்பதால் அப்படி மாற்ற முடியவில்லை .

அப்போதுதான் சைவம் படத்தில் லுத்புதீன் நடிப்பைப் பார்த்தபோது, இந்த பாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது .

தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் சம்மதித்தார் .

psv 66

முழு ஸ்கிரிப்டையும் நாசர் சாரிடமும் அவரது துணைவியார் கமீலா நாசரிடமும் கொடுத்தோம் . படித்து விட்டு சம்மதம் சொன்னார்கள் .

படம் நன்றாக வந்துள்ளது .

ஐஸ்வர்யா ராஜேஷ் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த — ஐ டி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார் . எல்லாருடைய பங்களிப்பும் அற்புதமானது “ என்றார் .

நாசர் பேசும்போது “ இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிகரமாக ஒட வேண்டும். காரணம் என் மகன் நடித்த படம் என்பதால் அல்ல .

முதல் இரண்டு படங்கள் லாபம் தராத நிலையிலும் ஒரு தயாரிப்பாளர் மூன்றாவதாக படம் எடுப்பது அபூர்வமான விஷயம் .

psv 7

அந்த அளவுக்கு சினிமாவை நேசிக்கும் அவர் தோற்கக் கூடாது . இந்தப் படம் ஜெயிக்க வேண்டும் . அவர் முன்னூறு படங்கள் எடுக்க வேண்டும் .

லுத்புதீன் நடிக்கப் போவதாகச்  சொன்ன போது எனக்கு கோபம் வந்தது . ‘ஒரு நடிகனுக்கு பயிற்சி முக்கியம்னு நான் ஊர் ஊரா சொல்றேன் . நீ திடீர்னு நடிக்க ஆரம்பிச்சா என்ன அர்த்தம்?’ என்று கேட்டேன் .

உடனடியாக நடிப்புப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தேன் . அண்மையில் கூட பாண்டிச்சேரியில் நடந்த ஒரு நடிப்புப் பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பி வைத்தேன் .

இயக்குனர் தனபால் திரைக்கதையை முழுக்க எழுதி ஸ்கிரிப்டாக கொடுத்தார் . தமிழ் சினிமாவில் வந்திருக்கும்- இந்த முழு ஸ்கிரிப்டையும் படிக்கத் தரும்– மாற்றம் என்னை சந்தோஷப் படுத்துகிறது .

psv  7

படத்தில் என் மகன் கதை நாயகன்தான் . கதாநாயகன் அல்ல . அவன் முதலில் கதாபாத்திரங்களை உணர்ந்து நடிக்கும் நடிகனாக வரட்டும் . அப்புறம் ஹீரோவாக ஆகட்டும்” என்றார்

படம் வெற்றி பெற வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *