டான் புரடக்ஷன் மற்றும் டிரைபல் ஆர்ட் புரடக்ஷன் சார்பில் ஹரிஹர நாகநாதன், முத்து , காளீஸ்வரன் ஆகியோர் தயாரிக்க,
விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, நாசர், ரகுமான், ஜோக்கர் புகழ் குரு சோம சுந்தரம் ஆகியோர் நடிப்பில்
காக்காமுட்டை என்ற தங்க முட்டையை தந்த மணிகண்டன் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் குற்றமே தண்டனை .
குற்றமே தண்டனை என்றால்…. ?
குற்றவாளியை தண்டனை என்ற பெயரில் தூக்கில் போடுகிறோமே அந்தக் குற்றத்தை படம் சொல்கிறதா ?
இல்லை ஒருவரது மன சாட்சியை தூண்டி விட்டால், அவன் செய்த குற்றத்தை எண்ணி வருந்துவதை விட பெரிய தண்டனை இல்லை என்று சொல்ல வருகிறதா ?
“இரண்டாவது விஷயம்தான்” என்று ஆரம்பிக்கும் மணிகண்டன் ” நாம் செய்தது குற்றம் என்று தானே உணரும் உணர்வை ஒருவனுக்கு உண்மையாக ஏற்படுத்தி விட்டால் ,
மணிகண்டன்
அப்புறம் அந்த குற்றமே அவனுக்கு தண்டனையாக இருக்கும் . இது படத்தின் அடிப்படை நோக்கம் .
அதே நேரம் யதார்த்தம் எப்படி இருக்கிறது ?
குற்றம் செய்கிற எல்லாருமே அதை மறைத்து விட்டால் போதும் . அப்புறம் அது குற்றம் ஆகாது என்ற நம்பிக்கையில்,
அதை மறைக்க தங்கள் அறிவு , திறமை , பலம் , பணம் எல்லாவற்றையும் பயன்படுத்துகின்றனர் . இதுதான் படத்தின் டிராவல் .
முரண்பாடான இந்த இரண்டு விசயங்களையும் சேர்க்கும்போது என்ன நடக்கும் என்பதே இந்தப் படம் .
அதே நேரம் இது நேரடியாக பிரச்சாரமாக படத்தில் சொல்லப் படாது .
ஒரு நாவல் படித்து முடியும்போது அதன் அடிநாதம் மென்மையாக மனதில் படியும் இல்லையா ? அப்படித்தான் இந்த விஷயத்தை படத்தில் சொல்கிறேன். “
— தெளிவாக திட்டவட்டமாக பேசுகிறார் மணிகண்டன் .
“படத்தில் கதாநாயகன் கதாநாயகி என்று யாரும் இல்லை . எல்லாருமே கதாபாத்திரங்கள் மட்டுமே .
விதார்த்துக்கு இந்த படம் ஒரு பெரிய பிரேக் தரும் . பூஜா தேவரியா சிறப்பாக நடித்துள்ளார் .படத்தில் அவரே பின்னணி குரல் பேசி உள்ளார் . ஆனால் வசனங்கள் கம்மிதான் .
சொல்லப் போனால் விதார்த்துக்கே வசனம் கம்மிதான் . ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்துள்ளார் . ரகுமான் ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு தமிழில் ஒரு பிசினஸ் மேன் கேரக்டரில் நடிக்கிறார்
வெகு யதார்த்தமான ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரில் மாரிமுத்து சிறப்பாக நடித்துள்ளார் . அது பார்ப்பதற்கே புதுசா இருக்கும் . இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம் ” என்றவரிடம் ,
“காக்கா முட்டைக்கு அடுத்து வரும் படம் என்ற எதிர்பார்ப்பை இந்தப் படம் ஈடு செய்யுமா ?” என்று கேட்டேன் .
பதில் சொன்ன மணிகண்டன் ” கண்டிப்பாக செய்யும் . ஆனால் என்னை பொறுத்தவரை அது வேறு படம் இது வேறு படம் . அதை நினைத்து இதை பார்க்க தேவை இல்லை .
அந்தப் படத்துக்கு உரிய நியாயம் அதில் இருந்தது . இந்தப் படத்துக்கு உரிய நியாயம் இங்கே இருக்கும் ” என்கிறார்
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462