ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வெற்றி பெற்ற ரோமியோ ஜூலியட் படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயரிக்கும் படம் வீர சிவாஜி.
கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார்.
ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் உடன் நடிக்கிறார்கள் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களையும் முன்னோட்டததையும் திரையிட்டனர் .
‘வாழ்க்கையை அணு அணுவா அணுபவிக்கணும்னா அளவே இல்லாம சம்பாதிக்கணும்’ என்ற வில்லத்தனமான வசனத்தோடு துவங்கும் முன்னோட்டம்,
அதை எப்படி ஹீரோ முறியடிக்கிறான் என்று சொல்லும் விதமாக இருக்கிறது
இமான் இசையில் தாறுமாறு தக்காளிச் சோறு என்ற பாடலும் சொப்பன சுந்தரி பாடலும் குறிப்பிடும்படி இருந்தன. சுகுமாரின் ஒளிப்பதிவு , இது வரை இல்லாதபடி வேறு பாணியில் இருந்தது .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் நந்தகோபால்
” மிக சிறப்பான யூனிட் அமைந்தது. இமான் மிக சிறப்பான பாடல்கள் தந்தார் . சுகுமாரின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருக்கிறது .
எங்கள் அன்னை இல்லத்துப் பிள்ளை விக்ரம் பிரபு தந்த ஒத்துழைப்பு மறக்க முடியாத ஒன்று . மீண்டும் ஒரு வெற்றிப் படத்தோடு வருகிறேன் ” என்றார் .
விக்ரம் பிரபு பேசும்போது ” மிக நன்றாக படம் வந்துள்ளது . என்னை முதன் முதலில் எப்படி கேமரா வழியே காட்ட வேண்டும் என்று திட்டமிட்டு,
கும்கி படத்தில் சிறப்பாகக் காட்டிய சுகுமார் சார்தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு .
கும்கியில் கலைந்த தலையை சற்றே சரி செய்தால் கூட , ‘வேணாம் வேணாம் அப்படியே இருங்க ‘ என்பார்
இந்தப் படத்தில் தலையில் ஒரு முடி விலகி இருந்தால் கூட , மேக்கப் மேனை அழைத்து சரி செய்த பின்னரே ஷாட் போவார் . அப்படி இது எங்களுக்கு முற்றிலும் வேறு மாதிரியான படம் .
விரைவில் எங்கள் கும்கி டீம் இணைந்து மீண்டும் ஒரு படம் கொடுக்க உள்ளது ” என்றார்
இயக்குனர் கணேஷ் விநாயக் ” இது கமர்ஷியல் படம். ஆனால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கிற மாதிரியான ஜனரஞ்சக படம்.
ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடமிருந்து அந்த மக்களை காப்பாற்ற போராடி வெற்றி பெரும் வீரமான இளைஞனாக விக்ரம் பிரபு . கதாபாத்திரப் பெயர் சிவாஜி.
அதுதான் படத்திற்கான தலைப்பாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு பாண்டியிலும், பாடல் காட்சிகள் ஜார்ஜியாவிலும் படமாக்கப் பட்டுள்ளன ” என்றார்




