லெஜன்ட் அருள் சரவணன் தயாரிப்பில் சரவணன் ,ஊர்வசி ரடீலா, கீர்த்திகா திவாரி, மறைந்த விவேக், பிரபு, நாசர், யாஷிகா ஆனந்த் , சுமன் மற்றும் பலர் நடிப்பில் ஜே டி ஜெர்ரி இயக்கி இருக்கும் படம் .
உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான சரவணன் (சரவணன்) பல வளர்ந்த நாடுகளின் பெரிய நிறுவனங்கள் தரும் மெகா சம்பள வேலை வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டு சொந்த ஊருக்கு சேவை செய்ய வருகிறார் .
தனது பள்ளிக்கால நண்பனின் மகனாகிய சிறுவன் , பிறக்கும் குழந்தை ஆகியோர் வரை சர்க்கரை நோய் இருப்பதை கண்டு அதற்கு மருந்து கண்டு பிடிக்கிறார் . அதனால் சர்க்கரை நோய்க்கு தற்காலிக தீர்வான இன்சுலினை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் நிறுவனங்களின் சார்பாக வில்லன் (சுமன்) , சரவணனின் காருக்கு பாம் வைப்பது, மனைவியை இழந்த நிலைக்கு ஆளாக்குவது போன்ற கொடுமைகளை செய்கிறார் . அதில் இருந்து விஞ்ஞானி எப்படி வென்றார் என்பதே லெஜன்ட் .
பணத்தைக் கொட்டி படத்தை பிரமாண்டமாக எடுத்து உள்ளனர் . சரவணன் கஷ்டப்பட்டு நடனம் சண்டை எல்லாம் செய்கிறார் . அவரது முயற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது .
நட்பை மதிப்பது, மக்களுக்காக உழைப்பது, தமிழ்ப் பற்று , உறவினர் மேல் பாசம், கிராமிய பண்பாடு காத்தல், என்று பல நல்ல விசயங்களை படத்தில் சொல்வது பாராட்டுக்குரியது
விவேக் டப்பிங் பேசாமல் மரணம் அடைந்து விட பைலட் ட்ராக்கை noise gate போட்டு தரக் கூட்டல் செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பிரபல வெற்றிகரமான கமர்சியல் படங்களில் இருந்து ஒவ்வொரு காட்சி எடுத்து கோர்த்து இருக்கிறார்கள் .
லெஜன்ட்… தியேட்டர்கள் எங்கும் பிரம்மாண்டமாய்!