கிச்சா கிரியேஷன்ஸ் மற்றும் ஷாலினி ஆர்ட்ஸ் சார்பில் ஷாலினி ஜாக் மஞ்சு மற்றும் அலங்கார் பாண்டியன் தயாரிக்க, கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீத்தா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கி இருக்கும் படம்.
பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை புரையோடிப் போயிருக்கும் சாதி வெறியால் ஒரு குடும்பம் அநியாயமாக பாதிக்கப்படுகிறது .உயர் சாதி சிறுவன் செய்யும் திருட்டு தாழ்த்தப்பட்ட சாதி நபர் மேல் சுமத்தப்படுவதால் அந்தக் குடும்பம் அழிக்கப்படுகிறது.
அங்கு உள்ள மாளிகையில் பேய் இருப்பதாக சொல்லப்பட்டு கொலைகள் தொடர்கிறது. போலீஸ்காரரே கொல்லப்படுகிறார்.
அங்கு இன்ஸ்பெக்டராக வரும் விக்ராந்த் ரோனா( கிச்சா சுதீப்) விசாரணை நடத்த , வெளிவரும் உண்மைகளும் அதன் விளைவுகளுமே படம்.
கம்பீரமாக கெத்தாக நடித்து இருக்கிறார் கிச்சா சுதீப். ஒற்றைப் பாட்டில் பின்னிப் பெடல் எடுக்கிறார் ஜாக்குலின்
வில்லியம் டேவிட்டின் ஒளிப்பதிவு மர்மம் , இருள் , குளிர் இவற்றோடு காடுகளை அற்புதமாக படம் பிடித்து இருக்கிறது .
சின்னச் சின்ன காட்சிகளுக்குக் கூட அபார வலு சேர்க்கிறது , அஜனீஷ் லோகநாத்தின் இசை
சண்டைக் காட்சிகள் அசத்தல் .
எடிட்டிங் சோதிக்கிறது
திரைக்கதை, இயக்கம் இரண்டும் படத்தின் பலவீனங்கள்