லண்டன் சொல்லும் ‘மதுரை மா வேந்தர்கள்’

DSC_0223
லண்டன் திரைப்படக் கல்லூரியில் படித்த மதுரைக்காரத் தம்பி வி.கே.விஜய் கண்ணா,  அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் வழியில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம் பேச்சுக் கொடுக்க, அந்தப் பேச்சில் தன்னைப் பற்றி சொல்ல , அந்த சக பயணியும் ஆர்வமாகக் கேட்க…..
அதன் தொடர்ச்சியாக ”உங்களுக்கு தெரிஞ்ச புரடியூசர் யாராவது இருந்தா சொல்லுங்க .. என்று விஜய் கண்ணா சொல்ல , அந்த சக பயணியும் தனது விசிட்டிங் கார்டை கொடுத்து ” ஆபீஸ் வாங்க” என்று சொல்ல , பல நாட்கள் கழித்து மீண்டும் சென்னையில் அவரை  சந்திக்கும் வரை விஜய் கண்ணாவுக்கு தெரியாது….

அவர்தான் இரவும் பகலும் , நேற்று இன்று , போன்ற படங்களை வெளியிட்ட ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் எஸ் தணிகைவேல் என்பது ! DSC_0329இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கதை அல்ல … ஒரு சினிமா உருவான கதை .

அப்புறம் என்ன?

RSSS பிக்சர்ஸ் சார்பில் S .தணிகை வேல் தயாரிக்க, அஜய்,  அர்ச்சனா, அப்புக்குட்டி, காதல் சுகுமார், உள்ளிட்ட பலர் நடிக்க ,  வி.கே விஜய் கண்ணாவின் கதை திரைக்கதை வசன இயக்கத்தில் உருவாகி விட்டது மதுரை மாவேந்தர்கள் திரைப்படம் .”இன்னும் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும்தான் பாக்கி . ஜூன் மாதம் திரைக்கு வருக்றோம் ” என்கிறார் இயக்குனர் வி.கே விஜய் கண்ணா.

லண்டனில் படித்து விட்டு வந்து மதுரையைப் பற்றிய படமா என்றால் “எங்க படிச்சா என்ன சார் ? நம்ம ஊரு வாழ்க்கையைதானே நாம பேசணும்?” என்கிறார் இயக்குனர் . (பாசக்காரப் புள்ள )

என்ன கதை ?

DSC_0501

அரசியல்வாதிக்கு சொந்தமான சீட்டுக் கம்பெனியில் மக்கள் பணம் போட , அவர் திட்டமிட்டே ஏமாற்றுகிறார். ஏமாந்தவர்களில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹீரோவின் குடும்பமும் ஒன்று . மகளின் திருமணத்துக்காக வீட்டை விற்று வைத்திருந்த பணம் போச்சே என்று அப்பா மனம் உடைய , மகனான ஹீரோவும் அவனது நண்பர்களும் எப்படி தங்கள் பணத்தை அரசியல்வாதியிடம் இருந்து மீட்டார்கள் என்பதை…….

DSC_0162

காமெடியாக சொல்லும் படமாம் இது . ”கடைசியில் ஒரு நல்ல மெசேஜும் வைத்து இருக்கிறோம்” என்கிறார் இயக்குனர்

நிஜமாகவே ஏமாந்த மக்கள்,  படம் பார்த்து கொஞ்சமாவது சிரிச்சாலும்,  படம் எடுத்தவங்களுக்கு புண்ணியம்தானே .

வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →