ஜி. காளியப்பன் தயாரிப்பில் ஹரிகுமார், மாதவி லதா, பருத்தி வீரன் சரவணன், சுமன், எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் ராஜ ரிஷி இயக்கி இருக்கும் படம் .
மதுரையில் மார்க்கெட்டில் அநியாயமாக தண்டல் வட்டி வாங்கும் ஒரு நபரைத் தண்டிக்கிறான் நியாயமாக வட்டி வாங்கும் மணி.(ஹரி குமார்).
அந்தப் பிரச்னையின் மூலம் ஒரு சாராய வியாபாரி ( சரவணன்) , எம் எல் ஏ ( சுமன்) ஆகியோரைப் பகைத்துக் கொள்கிறான் மணி .
அதனால் ஒரு பெரிய இழப்பு ஏற்படுகிறது . அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த மதுரை மணிக்குறவர்.
இசை அமைத்திருக்கும் இளையராஜா தோன்றிப் பாடும் (மேக்கப்பும் கேமரா கோணங்களும் .. முடியல) மதுரையின் புகழ் பாடும் பாடலோடு துவங்கும் படம் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் வழக்கமான காட்சிகளுடன் போகிறது .
ஏகப்பட்ட நட்சத்திரங்கள் வந்து போகிறார்கள் . கஞ்சா கருப்புக்கு ஓரளவுக்கு பொருத்தமான ஒரு புதிய டப்பிங் குரலைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள் . காமெடியன்கள் நிறைய பேர் இருந்தும் மார்க்கெட்டில் தண்டல் வாங்கும் பெண்களாக வரும் இரு பெண்கள் சிரிக்க வைக்கிறார்கள்
இளையராஜாவின் இசையில் வரும் பாடல்கள் சில முணுமுணுக்க வைக்கின்றன.
பெண்கள் மறுமணத்துக்குக் குரல் கொடுப்பதைப் பாராட்டலாம்