நுஃபைஸ் ரகுமான் தயாரிப்பில் ருத்ரா, சுபிக்ஷா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கி இருக்கும் படம் .
இயற்கை ஒலிகளை பதிவு செய்யும் பணிக்காக, காடு மலைப் பகுதிக்கு வரும் பண்பலை நிகழ்ச்சி நடத்துனர் பெண்ணுக்கு (சுபிக்ஷா) உதவியாக,
ஒலிப்பதிவில் தங்க மெடல் பெற்று இருந்தும் கிராமத்தில் அப்பா, அத்தை, -போரில் இறந்த ராணுவக் கணவன் திரும்பி வருவான் என்ற மனப் பிறழ்வில் தினமும் தொடர்வண்டிப் பாதைக்கு வரும் – பாட்டி ஆகியோரோடு வாழ்ந்து வரும் இளைஞன் (ருத்ரா) நியமிக்கப்படுகிறான்
அந்தப் பணியில் அவர்களுக்குள் ஏற்படும் மெல்லிய மோதல்கள் ஒரு நிலையில் காதல் , காமம் என்றாகிறது .
அந்தக் காதலுக்கு வில்லனாக நாயகியின் பணி, அவளுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டு பின் நின்று போன திருமணத்தின் மாப்பிள்ளை ஆகியோர் வர, அப்புறம் என்ன ஆனது என்பதே இந்தப் படம் .
வித்தியாமான கதைக் கருவைப் பிடித்தவர்கள் திரைக் கதையில் புதிதாக , சுவாரஸ்யமாக , அழுத்தமாக ஒன்றுமே முயலவில்லை . அதே போல அப்படி ஒரு அட்டகாசமான லொக்கேஷன்கள் இருந்தும் ஒளிப்பதிவு அழுது வடிகிறது .
ருத்ரா உற்சாகமாக நடிக்கிறார். ஆனால் அவரே பேசி இருக்கும் பின்னணியில் இருக்கும் அதீத மலையாள நெடி அந்நியப்படுத்துகிறது. சுபிக்ஷா ஒகே.
காடு, மலை , அருவிகளில் உள்ள இயற்கை ஒலிகளை பதிவு செய்பவர்கள் பற்றிய கதை என்று சொல்லிக் கொண்டு, அப்படி உருப்படியாக ஒரு துண்டு ஒலியைக் கூட படத்தில் பயன்படுத்தாத கொடுமையையும் , பின்னணி இசையில் கூட அதற்கு முயலாத அநியாயத்தையும் என்ன சொல்ல?
நாடகத்தனமான காட்சிகள், தறி கெட்டு அலையும் திரைக்கதை, வலிந்து திணிக்கப்படும் முடிவு இவையே படத்தில் தூக்கலாக தெரிகிறது.
சற்றே குழந்தைத்தனமானது என்றாலும் வித்தியாசமான பெயருக்கு எடுத்துக் கொண்ட முயற்சியில் கொஞ்சம் கூட மற்ற படத்தின் விசயங்களில் எடுத்துக் கொள்ளவில்லை .
படத்தின் பலம் கதைக் கரு . அடுத்து லொக்கேஷன்கள் . ஆனால் இது இரண்டு மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார்
