சமூக விசயங்களில் அக்கறையோடும் அதிரடியோடும் தனக்கே உரிய பாணியில் கருத்துகளைச் சொல்வது நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியான மன்சூர் அலிகான் வழக்கம்.
அதே வகையில் தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் மன்சூர் .
ஆனால் சமூக நீதி பற்றிய வரலாறு பெரிதாக இல்லாத மாநிலங்கள் கூட இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். என்று சரியான விதத்தில் களம் இறங்கி உள்ளன.
பாலஸ்தீனம் இஸ்ரேல் சண்டை என்று இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை போல பேசுகிறோம் . அதுவே தப்பு . அது ஒரு உள்நாட்டு சண்டை . ஒரே நாட்டுக்குள் ஒரு இன- மத மக்கள் அழிக்கப்படுகிறார்கள் .
திரைப்படங்கள் பொழுதுபோக்கு என்றாலும் அதில் நல்ல விசயங்களை சமூக அக்கறை நோக்கில் பேச வேண்டும் . தவறான விசயங்களை ஊக்குவிக்கக் கூடாது