திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் சி.வி.குமார் .
இது வரை 13 படங்கள் தயாரித்து , அவற்றின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் , நலன் குமார சாமி உட்பட,
11 இயக்குனர்களை அறிமுகப்படுத்தி உள்ள சி.வி.குமார்( கார்த்திக் சுப்புராஜ் , நலன் குமாரசாமி இருவரும் தலா இரண்டு படங்களை இவருககாக இயக்கி உள்ளனர் )……
இப்போது இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார் .
சந்தீப் கிஷன் , லாவண்யா திரிபாதி இணையராக நடிக்க , டேனியல் பாலாஜி , இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் வில்லனாக நடிக்க
ஸ்டுடியோ கிரீன்சி ஞானவேல்வி ராஜாவுடன் சேர்ந்து தனது திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் குமார் தயாரித்து இயக்கும் இந்தப் படத்தின் பெயர் மாயவன் .
தான் இயக்குனரான விதத்தை இயல்பாக சொல்கிறார் சி வி குமார் .
” எனக்குள் தோன்றிய ஒரு கதையை .இயக்குனர் நலன் குமாரசாமியிடம் சொல்லி அதை எழுதச் சொன்னேன் . எழுதி வந்ததும் அவரையே இயக்கச் சொல்லலாம் என்று முடிவு செய்து இருந்தேன்.
அவர் எழுதிக் கொடுத்த போது, அவரோடு சேர்ந்து திரைக்கதை எழுதினேன்
எனது ஆர்வத்தைப் பார்த்த நலன் குமாரசாமி, ‘ நீங்களே இதை டைரக்ட் பண்ணுங்களேன்’ என்றார் . நான் மறுத்தேன் .அவர் வற்புறுத்தினர் .
என்னை சம்மதிக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் , நான் இயக்குவதாக முடிவானதும் மேலும் மெருகூட்டி இன்னொரு முறை எழுதிக் கொடுத்தார் .
படத்தை ஆரம்பித்தேன். தயாரிப்பில் ஞானவேல்ன்னு ராஜாவும் வந்து இணைந்தார். இன்னும்சி ல நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் ” என்கிறார் .
“மாயவன் என்ன மாதிரியான கதை ?”
“சீரியல் கில்லரை துப்பறிந்து கண்டு பிடிக்கும் மர்டர் மிஸ்டரி படம் . ஹீரோ ஒரு போலீஸ் அதிகாரி, ஹீரோயின் சைக்யாட்ரிக் டாக்டர் .”
“தயாரிப்பாளராக இருந்து புரடியூசர் ஆகி விட்ட நிலையில், இனி நீங்கள் தயாரிக்க இருக்கும் படங்கள் பற்றிய உங்கப் பார்வை மாறுமா ?” என்றேன்
“நிச்சயமாக மாறும் சார் . இதுவரை டைரக்டர்கிட்ட ‘முப்பது நாள்ல படத்தை முடிக்கணும் . நாப்பது நாள்ல முடிக்கணும்’னு கட் அண்ட் ரைட்டா சொல்லுவேன் . இப்பதான் அதெல்லாம் எவ்வளவு கஷ்டம்னு புரியுது .
அண்மையில் ஒரு புது இயக்குனர் ஒரு கதையை சொல்லி ‘முப்பது நாள்ல முடிப்பே’ன்னு சொன்னார் . ‘முப்பது நாள்ல நல்லபடியா எடுத்து முடிக்க முடியாது .
மீறி எடுத்தா நல்லா வராது’ன்னு சொல்லிட்டேன் ” என்கிறார் டைரக்டராய் லட்சணமாய் .
“டைரக்ஷனை தொடர்வீர்களா ?” . என்றால்
“ஆறு படம் அடுத்தடுத்து தயாரிக்க முடிவு பண்ணி இருக்கேன் . டைரக்ஷன்னு வந்ததால அதுக்கு எல்லாம் நேரம் ஒதுக்க முடியல .
இந்த படம் ஓடினாதான் தொடர்ந்து டைரக்ஷன் செய்வேன். ” என்கிறார் , தயாரிப்பாளராய் லட்சணமாய் .
முதல் படத்துக்கு பொருத்தமாதான் பேரு வச்ச்சிருக்கறாரு….’ மாயவன்’






