ரஜினியின் வாழ்த்துகளோடு வெளிவரும் ‘மழையில் நனைகிறேன்’

ஒரு படம் நன்றாக இருப்பதாக ஒரு பொதுக் கருத்து  இருந்தால் , தனக்குப் பிடித்து இருந்தால் , தனக்கு வேண்டியவர்கள் படம் என்றால் படம் வெளியான பிறகு அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அந்தப் படம் பற்றிப் பாராட்டுவதும், படக் குழுவினரை அழைத்து பேசி பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொள்வதும் வாழ்த்துவதும் ரஜினிகாந்தின் பழக்கம் . 

ஆனால் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு  படத்தை வாழ்த்தி ரஜினி காணொளிப் பேச்சு தந்து இருக்கிறாரா? இதுவரை இல்லை 

அப்படி ஒரு விஷயத்தை சாதித்து இருக்கிறது ஒரு படம் .

ராஜஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ்குமார் தயாரிக்க, அன்சன் பால். ரெபா மோனிகா ஜான், , மாத்யூ வர்கீஸ், அனுபமா குமார் , வெற்றிவேல் ராஜா, கிஷோர் ராஜ்குமார், சங்கர் குரு ராஜா, சுஜாதா   நடிப்பில் 

விஜி – கவின் பாண்டியன் வசனத்தில் கல்யாண் ஒளிப்பதிவில் விஷ்ணு பிரசாத் இசையில் , 

சுரேஷ்குமார் இயக்கி இருக்கும் , அழகான கவியான , நயமான பெயர் கொண்ட  காதல் படம் மழையில் நனைகிறேன் .

இந்தப் படம்தான் அப்படி ஒரு விஷயத்தை சாதித்து இருக்கிறது . .

தயாரிப்பாளர் ராஜேஷ்குமார்,  தீவிர ரஜினி ரசிகர் . இவரைப்  பற்றி மிகப் பெரிய அரசுத் துறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் சொல்ல , அப்படி வந்தது ரஜினியின் அந்த வாழ்த்துக் காணொளி. 

அன்சன் பால் இதற்கு முன்பு ரெமோ, சோலோ, 90 எம் எல் , தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் . மலையாள நடிகரான இவருக்கு இது ஹீரோவாக முதல் படம். மலையாளத்தில் மம்முட்டியுடன் இவர் நடித்த ஆபிரகாமிண்டே சந்தாதிகள் படத்தின் மூலம் சிறப்பான பெயர் பெற்றவர்.

நாயகி ரெபாபா மோனிகா ஜான் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்தவர் . ஜருகண்டி என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக  நடித்தவர்.  தெலுங்குப் படமான சாமஜவரகமனாவில் அசத்தியவர். 

ரொம்ப நாளுக்குப் பிறகு படத்தில் ஏழெட்டு அழகான மெலடி பாடல்களோடு வருகிறது இந்தப் படம் . 

விஷ்ணு பிரசாத்தின் இசையில் , கல்யாணின் சிறப்பான ஒளிப்பதிவில் அன்சன் பால், ரெபா வின் அழகிய முகங்களை வைத்து லட்டு லட்டாக பாடல்களை எடுத்து இருக்கிறார் இயக்குனர் சுரேஷ்குமார் .

அப்படி இருக்கின்றன பாடல்கள் .

படம் பற்றிப் பேசும் இயக்குனர் சுரேஷ்குமார், ” இது முழுமையான காதல் கதை. விதவிதமான காதல் படங்களில் இது ஒரு வகை. நிராகரிக்கப்பட்ட காதலைப் பற்றிய கதை இது. அமெரிக்கா சென்று மேல் படிப்பு  படிக்க ஆசைப்படும் ஒரு வேற்று மதப்  பெண்ணின் மீது ஓர் இளைஞனுக்கு காதல் வருகிறது . நாயகி அதை நிராகரிக்கிறார். எனினும் நம்பிக்கையோடு அவர் காத்திருக்க  அந்தக் காதல் என்ன ஆனது  என்பதே படம் . 

படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்றாக,  பேசப்படும் ஒன்றாக இருக்கும்

படத்துக்கும் மழைக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கிறது . அது ஒரு கதாபாத்திரம் போலவே வருகிறது . எனவேதான்  இந்தப் பெயரை வைத்தோம் . இது குடும்பத்தோடு பார்க்க முடிகிற படம் “என்றார். 

தயாரிப்பாளர் ராஜேஷ்குமார்  பேசும்போது, ” நான் ரஜினி சாரின் உயிருக்கு உயிரான ரசிகன் .முத்து படம் வெளியான போது ரஜினியின் அதே கெட்டப்புடன் கையில் சாட்டையுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தேன் (குதிரை வண்டி ஓட்டுவீங்களா சார்?) 

இயக்குனர் சுரேஷ்குமார் என் தம்பியின் நண்பர் . அவர் சொன்ன கதை நன்றாக இருக்க, ஒரு நிலையில் நானே தயாரிக்க முன்வந்தேன்.. பின்னர் அன்சன் பால் ஹீரோ ஆனார் . ரஜினி சாரின்  வாழ்த்து எனக்கு பெரிய ஆசீர்வாதம்” என்றார்  

“முழுக்க முழுக்க காதல் படம் என்பதால் ஒளிப்பதிவில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன் ” என்றார் ஒளிப்பதிவாளர் கல்யாண்.

” படத்தில் பாடல்கள்  நிறைய இருப்பது சந்தோஷம் . எல்லா பாடல்களும் இனிமையாக இருக்கும் . பின்னணி இசையும் நன்றாக இருக்கும்” என்றார் விஷ்ணு பிரசாத்

நாயகன் அன்சன் பால் , ” ரெமோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான எனக்கு இது நல்ல வாய்ப்பு. படத்தில்  என் கேரக்டரில்  நிறைய மாற்றங்கள் இருந்தது நடிக்க நன்றாக இருந்தது . “என்றார் .

நாயகி ரெபா மோனிகா ஜான் பேசும்போது, ” உள்ளுக்குள் காதல் வந்தும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாத பாத்திரம் எனக்கு . படத்தின் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளது . ரசித்து நடித்தேன் . படமும் நன்றாக இருக்கும் “என்றார்.

படத்தில் வரும் உன் காதல் பார்வை பாடலை ஹரிச்சரனுடன் சேர்ந்து பாடி இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீவித்யா ராஜேஷ்குமார் . 

டிசம்பர் 12 படம் வெளிவருகிறது . அன்று ரஜினியின் பிறந்த நாள் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *