சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி சவுத்ரி தயாரிக்க, வேந்தர் மூவீஸ் மதன் வெளியிட
ராகவா லாரன்ஸ், சத்யராஜ் , நிக்கி கல்ராணி ,லக்ஷ்மி ராய் இயக்கத்தில் சாய் ரமணி இயக்கி இருக்கும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா .
கமர்ஷியலாக மிக சிறப்பாக வந்திருக்கும் இந்தப் படம் பல திசைகளிலும் இருந்து பல பிரச்னைகளை வழக்குகளை சந்தித்து,
ஒவ்வொரு தடையையும் மீறி ரிலீசை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது
இதுதான் சமயம் என்று பல பொய் வழக்குகளும் படத்தை நோக்கி பாய்ந்து வருவதாக கூறப் படுகிறது .
இதை எல்லாம் கடந்து சமாளித்து வென்று , வெற்றி முரசு கொட்ட ,
மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளிவரும் என்கிறார்கள் .