புதிய பரிணாமத்தில் உருவாகும் ‘முப்பரிமாணம்’

mup-4

ஷமயாலையா கிரியேஷன்ஸ் சார்பில் பொள்ளாச்சி வி .விசு மற்றும் பொள்ளாச்சி கோல்டு வி குமார் இருவரும் தயாரிக்க,

சாந்தனு , சிருஷ்டி டாங்கே, ஸ்கந்தா அசோக், ரவி பிரகாஷ், தம்பி ராமையா, அப்புக்குட்டி , லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடிப்பில்

இயக்குனர் பாலாவிடம் நான் கடவுள் படத்தில் பணியாற்றிய அதிரூபன் எழுதி இயக்கும் படம் முப்பரிமாணம் .

படத்துக்கு இசை ஜி வி பிரகாஷ். ஒளிப்பதிவு கவிஞர் அறிவுமதியின் மகன் ராசா மதி .

mup-5

படம் பற்றி மிக ஆர்வமாகப் பேசுகிறார் இயக்குனர் அதி ரூபன்

“ஓர் ஆண் ஒரு பெண் இருவரின் மழலைப் பருவம் முதல்  23 வயது வரையிலான கால கட்டத்தில் நடக்கும் சம்பவங்களே இந்தப் படம் .

ஒரு சம்பவம் நிகழ்ந்த பிறகு அது இன்னொரு கோணத்தில் பார்க்கப்படும்போது சம்பவத்தின் தன்மையே மாறும் . அப்பப்பட்ட கதைப்போக்கு இந்தப் படத்தில் உள்ளது ” என்ற இயக்குனரிடம் ,

”இரண்டு கோணங்கள் பற்றிய இந்தப் படத்துக்கு முப்பரிமாணம் என்று பெயர் வைத்தது ஏன்?” என்று கேட்டேன் .

mup-1

” பொதுவாக ஒரு  விசயத்தை திரையில் பார்க்கும்போது நீள அகலம் மட்டுமே உணர முடியும் . அதையே நேரில் நாம் பார்க்கும்போது தூரம் என்ற மூன்றாவது பரிமாணத்தையும் உணர முடிகிறது .

அப்படி காதலை நேரில் பார்ப்பது போல இயல்புக்கு நெருக்கமாக பார்க்கும்  படம் இது என்பதால் முப்பரிமாணம் என பெயர் வைத்தேன் ” என்கிறார் அசத்தலாக .

தொடர்ந்து பேசும்போது ” இதில் சாந்தனு மூன்று கெட்டப்களில் நடிக்கிறார் . அதில் ஒன்று மொட்டை அடித்த கெட்டப் . இந்தப் படத்தில் தானும் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் என்ற அளவுக்கு, 

mup-2

இந்தப் படத்துக்காக அவ்வளவு இறங்கி உழைத்து நடித்துக் கொடுத்தார் சாந்தனு .நிச்சயமாக இந்தப் படம்அவருக்கு மிகப் பெரிய நல்ல மாற்றத்தை தரும் .

இதுவரை துருதுரு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த சிருஷ்டி இதில் முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் வருகிறார் . அவருக்கு இது வேறு மாதிரியான படம்.

இயக்குனர் வெற்றி மாறன் மூலம் எனக்கு ஜி வி பிரகாஷ் குமார் அறிமுகம் கிடைத்தது . படத்துக்கு அவர் மிக சிறப்பான இசையை கொடுத்துள்ளார் .

mup-3

இப்போது அவர் பெரிய ஹீரோவாகவும்  இருக்கும் நிலையில் அவரது இசை என்பது எங்கள் படத்துக்கு பெரிய பலம் .

இந்தப் படம் மிக சிறப்பாக வர அதி முக்கியக் காரணம் எனது  தயாரிப்பாளர்கள் . அவர்கள் இல்லாவிட்டால் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது.

இதை நான் சும்மா கடமைக்காக சொல்லவில்லை. நிஜமாகவே சொல்கிறேன் .

இயக்குனர் பாலாவிடம் நான் கற்றுக் கொண்டது பொறுமை . நினைத்தபடி படம் வர வேண்டும் . அது வரை திருப்தி அடையாத மனம் எனக்கு . சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்காவிட்டால் அது சாத்தியம் ஆகாது .

mup-000

ஆனால் என் தயாரிப்பாளர்கள் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது .

இது மிக வித்தியாசமான கதைப் போக்கு கொண்ட படம் என்பதால்  நான் நடிகர்களை கதையின் மூடுக்கு கொண்டு வந்த பிறகே ஷாட் எடுப்பேன் .

உதாரணமாக சாந்தனு ஸ்பாட்டுக்கு வந்த உடன் , சேது படத்தில் வரும் ”எங்கே செல்லும் இந்த பாதை/”  பாடலை ஹெட் போனில் போட்டு போட்டு அவரை பலமுறை கேட்க வைப்பேன் .

அதை மீண்டும் மீண்டும் கேட்டு அவர் மன நிலை அந்த பாட்டின் மூடுக்கு வந்து  அவர் தொய்ந்து போவது அவர் முகத்திலேயே தெரிந்த பிறகு அதே மூடில் அவரை இருக்க வைத்து ஷாட் எடுப்பேன் .

mup-7

இதில் வேஸ்ட் ஆகும் நேரத்துக்காக தயாரிப்பாளர்கள் ஒரு போதும் மறுப்பு சொன்னது  இல்லை .

அதே போல சிருஷ்டி டாங்கே  எப்போதும் உற்சாகமாக இருப்பார் . இந்த படத்தில் அவரது கேரக்டருக்கு அது உதவாது.  எனவே அவரது  காட்சிகள் எடுக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே

அவரை வர வைத்து ,விடுவேன் . மற்ற காட்சிகள் எடுக்கும்போது மற்றவர்கள் நடிப்பதை அவரை பார்க்க வைப்பேன் .

சில நாட்கள் அவர் இப்படி ஷூட்டிங் பார்த்து கதையின் மூடுக்கு வந்த பிறகே அவரது காட்சிகளை எடுப்பேன் .

mup-9

இதனால் சில நாட்கள் தேவை இல்லாமல் அவருக்கான அறை வாடகை மற்ற செலவுகள் ஆகிறதே என்று தயாரிப்பாளர்கள் ஒரு போதும் முகம் சுளித்தது இல்லை .

இது எல்லாவற்றையும் விட முக்கிய விஷயம்…

அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் செட் போட்டு சில காட்சிகளை எடுத்தோம் . அது மிக எமோஷனலான காட்சிகள் என்பதால் என்னால் அவற்றை சொன்ன நேரத்தில் எடுத்து முடிக்க முடியவில்லை .

mup-99

போட்ட செட்டை நீட்டிக்க வேண்டி வந்தது . அதனால் செலவு அதிகம் ஆனது . எடுத்து முடித்த பிறகு தாமதத்துக்காக தயாரிப்பாளரிடம் வருந்தினேன் .

அப்போது தயாரிப்பாளர் குமார் சொன்ன விஷயம் என்னை நெகிழ வைத்து விட்டது .

‘ஒரு சிற்பியை சிலை வடிக்க நியமித்து கால அவகாசம் கொடுக்கிறோம் . கொடுத்த நேரத்துக்குள் அவரால் கழுத்து வரைதான் சிலை வடிக்க முடிந்தது என்று வைத்துக் கொள்வோம் .

அதற்காக அவரிடம் ‘ கொடுத்த நேரம் முடிந்து விட்டது . சொன்ன தொகையும் முடிந்து விட்டது . எனவே இதற்கு மேல சிலை வடிக்க வேண்டாம் . அப்படியே கழுத்தோடு விட்டு விடு’ என்று சொல்ல முடியுமா ?

mup8

சிலை நன்றாக வரும்போது இன்னும் கொஞ்சம் நேரமும் பணமும் கொடுத்துதான் ஆக வேண்டும் . அதைத்தான் நாங்கள் செய்தோம்’ என்றார் .

இப்படி ஒரு விஷயம் யார் சொல்வார் பாருங்கள் . (கோல்டு குமார் கோல்டன் குமார்தான்)

அவர்களுக்காகவே இந்தப் படம் நன்றாக வந்துள்ளது . படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகிறது ” என்கிறார் அதி ரூபன் .

படம் அதிவெற்றி பெற வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *