‘அகடம் ‘ என்ற முழு தமிழ்ப் படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற முதல் தமிழ் இயக்குநர் இசாக்
அடுத்து இவர் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை மன்னன் நாகேஷின் பெயரில் நாகேஷ் திரையரங்கம் ” எனும் புதிய படத்தை இயக்குகிறார்
டிரான்ஸ் இண்டியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகனாக,
நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரியும், கதாநாயகியாக வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், மீன்குழம்பும் மண்பானையும் படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள்.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லதா, சித்தாரா நடிக்கிறார்கள்.
முண்டாசுப்பட்டி, ராஜாமந்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த காளிவெங்கட் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். மும்பையை சேர்ந்த மாடல் அழகி மாஷும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்
ரமணா, அயன், நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு, கபாலி படத்தின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம். திருநாள், போங்கு படங்களின் இசையமைப்பாளர் ஸ்ரீ …
ஆகியோர் பணிபுரியும் இந்தப் படத்தின் பாடல்களை தாமரை, உமாதேவி, ரோகேஸ், முருகன் மந்திரம், மு.ஜெகன்சேட் எழுதுகிறார்கள்.
சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
படத்தைப் பற்றி இயக்குனர் இசாக் கூறுகையில், “திரையரங்கை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் கதையும் களமும் புதிதாக இருக்கும்.
நகைச்சுவை, காதல், மர்மம் போன்றவற்றை பின்னணியாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நாகேஷ் திரையரங்கம் திரையரங்குகளை கவரும்” என்கிறார் .
”வேகமாக வளர்ந்து படம் டிசம்பரில் திரைக்கு வரும்” என்கிறது, டிரான்ஸ் இண்டியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் .
வாழ்த்துகள் !