ஜாகிர் உசேன் தயாரிப்பில் ஐயப்பன் புகழ் பாடும் ‘கன்னி சாமி’

kanni-7
ஸ்ரீ ஐயப்பனின் சர்வ சக்தி மகிமையை விளக்கும் ‘கன்னி சாமி’  திரைப்படத்தை
 ஏ.ஜாகீர் உசேனின்  என்ற இஸ்லாமிய சகோதரரின்  ரோஷன் மூவி  கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது எவ்வளவு சிறப்பான  விஷயம் ! 
மலேசியா கவிமாறன் தயாரித்த குருசாமி அபூர்வ மகான் போன்ற படங்களை இயக்கிய கே ஆர்  மணிமுத்து இயக்கத்தில் , நவ்ஷத்  ஒளிப்பதிவில் கண்மணி ராஜா இசையில் கே ஆர் வேலாயுதம் கதை வசனத்தில் , 
kanni-8
சரவணன், அர்ச்சனா  சிங், சத்ய பிரகாஷ்,  ‘அவன் இவன்’ ராமராஜன், மாஸ்டர் யோகேஸ்வரன், திருச்சி ஜெகதீசன், கிங்காங், போண்டாமணி மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம்தான் இந்த  கன்னி சாமி .  
பாடல்கள் – மறைந்த அண்ணாமலை மற்றும்  தமிழ் அமுதன், ஏம்பல் ராஜா, வைர மூர்த்தி. நடனம் – பவர் சிவா,  மக்கள் தொடர்பு பெரு.துளசி பழனிவேல். 
kanni-6
கன்னி சாமியின் கதை என்ன சாமி ?
“நாயகன்   ஒரு மேடைப் பாடகன்.  அவனது குரலுக்கு  மயங்கி  காதலித்து திருமணம் செய்து கொண்டவள் நாயகி.  நாயகி மீது ஒரு தலைக் காதல் கொண்டவன் ஒருவன்.
ஆனால் நாயகி  அவனது  காதலை ஏற்றுக் கொள்ளாமல், நாயகனை  காதலித்து திருமணம் செய்திருக்கிறாள்
 
kanni-5
இதனால் ஆத்திரம் அடைந்த  ஒரு தலைக் காதலன்  ஏதேதோ சதி வேலைகளை செய்து காதல் தம்பதியைப்   பிரிக்க முயற்சிக்கிறான். 
 
பாடகனான நாயகனின்  குரலுக்கு மயங்கி பல பெண்கள்  அவனை  மேடையிலேயே முத்தமிடுகிறார்கள். அதை அவன்  தன் பாடல் திறமைக்கான பரிசாக மட்டுமே எடுத்துக் கொண்டு அவர்களுடன் ஆடிப் பாடுகிறான் 
 
kanni-4
ஆனால் இதை வைத்து  அந்த ஒருதலைக் காதலன் நாயகியிடம்  ” உன் கணவனுக்கு  பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.  அவர்களுடன் அவன் ஊர் சுற்றுகிறான்  .
உனக்கு துரோகம் செய்கிறான் ..’ என்று  சொல்லி  நம்ப வைத்து,  இருவரையும் பிரித்து விடுகிறான் .
 
பிரித்தது மட்டுமில்லாமல், வீட்டில் தனியாக இருக்கும் நாயகியை  பலாத்காரமாக அடைய முயல்கிறான்
 
kanni-3
இவற்றை நண்பர்கள் மூலம் அறியும் நாயகன்   தனது மனைவியை எப்படியாவது  காப்பாற்ற வேண்டுமென்று துடிக்கிறான் மனைவியைக் காண ஓடுகிறான்
 
இறுதியில் நடந்தது என்ன..?  அயோகியனிடம்   இருந்து நாயகி தப்பினாளா?  நாயகன்   தனது மனைவியைக் காப்பாற்றினானா..?  
kanni-2
–என்பதுதான இந்தக்  ‘கன்னி சாமி’யின் கதை சாமி (பின்னே ஒரு நல்ல படத்துக்கு கதைதானே சாமி ?)
 
நாயகனாக  சரவணனும் நாயகியாக அர்ச்சனா சிங்கும் அயோக்கிய ஒருதலைக் காதலனாக சத்யபிரகாஷும் நடிக்கிறார்கள்
 
— என்று கூறுகிறார் இயக்குனர் கே ஆர் மணிமுத்து  
 
kanni-1
” படப்பிடிப்பை கேரளாவில் சபரிமலை, எரிமேலி, மற்றும் தமிழகத்தில் ஆவுடையார் கோயில், அறந்தாங்கி போன்ற பகுதிகளில் படமாக்கியிருக்கிறோம். (வாவர்  சன்னிதானம் படத்துல வருதுல்ல… ?)  
அடுத்த மாதம் திரைக்குக் கொண்டு வரவிருக்கிறோம்..” என்கிறார் தயாரிப்பாளர்  ஏ.ஜாகீர் உசேன்.
 
வாங்க சாமி வாங்க !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *