‘நீயா நானா’ அந்தோணியின் ‘அழகு குட்டிச் செல்லம் ‘

azhagu 4

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் , ஆண்டனி  என்று அறியப்படும் அந்தோணி திருநெல்வேலி .

ஒவ்வொரு வாரமும் ஒரு திரைப்படத்துக்கு இணையான விறுவிறுப்போடு பயனுள்ள நிகழ்ச்சியாக நீயா நானாவை உருவாகும் அந்தோணியால்,  ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்க முடியாதா என்ன ?
தயாரித்து இருக்கிறார் . அதாவது சார்லஸ் என்ற தொலைக்காட்சித் தொடர் இயக்குனரின் திரைக்கனவை நனவாக்கும் தோணியாக இருந்திருக்கிறார் அந்தோணி . 
அந்தோணி திருநெல்வேலி
அந்தோணி திருநெல்வேலி

ஆம் . அந்தோணி திருநெல்வேலியின்   மெர்க்குரி நெட் வொர்க்ஸ் நிறுவனத்துடன் சன் லேண்ட் சினிமாஸ் என்ற நிறுவனமும் சேர்ந்து தயாரிக்க, மெட்ராஸ் ரித்விகா, அறிமுக நாயகி கிரிஷா குரூப், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், வினோதினி, ஜான் விஜய், நாராயணன்,  ஆகியோருடன் ஏராளமான குழ்நதை நட்சத்திரங்கள் நடிக்க, சார்லஸ் இயக்கி இருக்கும் படம் அழகு குட்டிச் செல்லம் . 

azhagu 5
அதீத கட்டுப்பாடுகள் என்ற நிலையில் குழந்தைகளின் உலகத்தை பெற்றோர் பறித்துக் கொள்ளும் நிலையில்,  ஐந்தாறு சிறுவர்கள் ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தை ஒன்றை எடுக்கிறார்கள் . அதை தாங்கள் விருப்பப்படி ரகசியமாக வைத்து வளர்க்க முயல்கிறார்கள்.
 அதனால் குழந்தையை இழந்த குடும்பம், அந்த சிறுவர்களின் குடும்பங்கள் , ஒரு காதல் ஜோடி , ஓர் ஆசிரியை , மற்றும் சில மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை சொல்லும் படமாக இது இருக்கும் என்பது …
படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது தெரிகிறது . 
azhagu 2
படம் பற்றி மட்டுமல்லாது பல விஷயங்கள் பற்றியும் தெளிவாகவும் கூர்மையாகவும் பேசுகிறார் ஆண்டனி .
” இது ஐந்து குடும்பங்களின் கதை என்று சொல்லலாம். ஒவ்வொரு கதையும் இன்னொரு கதையோடு மிக சரியாக இணையும் . ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உரிய முக்கியத்துவம் இருக்கும் 
சார்லஸ் இந்தக் கதையை  சொன்னபோது அவரிடம் இருந்த ஒரு தவிப்பு என்னை தவிக்க வைத்தது . படத்தை தயாரிக்க முடிவு செய்தேன் . 
ஆரம்பத்தில் சிறிய படமாகத்தான் ஆரம்பித்தேன் . மிக நல்ல திரைக்கதையாக அமைய அமைய,  நம்பிக்கை அதிகம் வந்தது . தம்பி ராமையா ஆடுகளம் நரேன் , கருணாஸ் , போன்றவர்கள் உள்ளே வந்தார்கள் . 
azhagu 3
இந்தப் படத்தில் காமெடி அல்லாத ஒரு சீரியஸ் வேடத்தில் கருணாஸ் நடித்துள்ளார். மிக விரும்பி நடித்தார் . ‘இது மாதிரி கேரக்டர்களில் எல்லாம் என்னை நடிக்க கூப்பிட்டா ரொம்ப சந்தோஷமாக இருக்கும்’ என்றார் . 
அவரது மகன் கென் படத்தின் மிக முக்கியமான சிறுவர் கதாபாத்திரங்களில் ஒருவர் . 
மெட்ராஸ்  ரித்திகா இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார் 
பள்ளிக்கூட ஆசிரியையாக வினோதினி நடித்துள்ளார் . 
azhagu 1
படத்தின் இசையமைப்பாளர் வேது ஷங்கர் சுகவனம் ஒரு நிலையில் ” இந்தப் படத்தின் பின்னணி இசைக் கோர்வை லண்டனில் சென்று செய்தால் நன்றாக இருக்கும்’ என்றார் . அப்படியே செய்தோம் . 
மிக அருமையான பாடல்கள் . ஒரு விதத்தில் இது ஒரு மியூசிகல் படமாகவும் வந்துள்ளது 
இது குழந்தைகள் பற்றிய படம் என்றாலும் இதில் பெரியவர்களுக்கும் நிறைய செய்திகள் இருக்கிறது . 
படத்தில் நடிக்க வைக்கப்பட்ட ஒரு குழந்தையை இப்போது என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை .அந்தக் குழநதையின் குடும்பம் சென்னையை விட்டே போய் விட்டது . அந்தக் குழந்தையைக் கண்டு பிடித்து அந்தக் குழந்தையின் படிப்புக்கு உதவ வேண்டும் என்று ஆசைப் படுகிறேன் . அந்தக் குழந்தையை தேடிக் கொண்டு இருக்கிறேன் ” என்று சொல்லும் அந்தோணி திருநெல்வேலி 
azhagu 6
படத்துக்கு வெளியே பேசும்போது ” தமிழ் சினிமாவில் மட்டும்தான் திறமையுள்ள யார் வேண்டுமானாலும் இறங்கி வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது . ஆந்திராவில் அது இன்னும் சாத்தியம் இல்லை . எனவே தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள படைப்பாளிகள் சினிமா துறையை பயன்படுத்தி நல்ல படைப்புகளை  தரவேண்டும்” என்கிறார், மிக நல்ல மனதோடு . 
இந்த அழகு மனதுக்காரரின் படமான அழகுக் குட்டிச் செல்லம் வரும் ஜனவரி 1 ஆம் தேதி வெளிவருகிறது .  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →