
கவர்ச்சி என்ற எல்லையையும் தாண்டி, நடிகை சமந்தா சட்டை பட்டன்களை திறந்து விட்டு ஜட்டி போன்ற உடை அணிந்து அஞ்சான் படத்தில் நடித்து இருந்தார் .(இதனால் சித்தார்த்துடனான சமந்தாவின் காதலே கிழிந்து போனது வேறு விஷயம்!)


அப்படி இருக்க, அஞ்சான் படத்துக்கு ஏ சான்றிதழ் தராமல் எப்படி யூ சான்றிதழ் கிடைத்தது என்ற கேள்வி, படம் பார்க்கும் போதே எழுந்தது.
படத்தில் இருந்த ஆபாசம் காரணமாக இங்கே யூ சர்டிபிகேட் கிடைக்காது என்பதால் மும்பைக்கு சென்று லஞ்சம் கொடுத்து அஞ்சான் படத்துக்கு யூ சான்றிதழ் வாங்கி வந்த விஷயம் சி பி ஐ அறிக்கையிலேயே வெளியே வந்து, இப்போது இந்தியா முழுக்க நாறுவது ஊரறிந்த விஷயம்தானே .
அஞ்சான் படத்தை அடுத்து, இப்போது கட்டாயம் ஏ சான்றிதழ் கொடுக்க வேண்டிய படமாகவே இன்னொரு படம் வந்திருக்கிறது . மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் விமல் , பிரியா ஆனந்த், சூரி நடிக்க , கண்ணன் இயக்கி இருக்கும் ஒரு ஊருல ரெண்டு ராஜா படம்தான் அந்த அடுத்த ஆபாசக் குப்பை.
படத்தில் பிரியா ஆனந்துடன் விமல் , சூரி இருவரும் சம்மந்தப்படுவது போல சில காட்சிகளை காமெடி என்ற பெயரில் ஆபாசமாக எடுத்து இருக்கிறார்களாம்.
தவிர , அஞ்சான் படத்தில் எப்படி சமந்தா துளியூண்டு உடை அணிந்து துக்கிரி ஆட்டம் போட்டாரோ அப்படியே இந்த ஒரு ஊருல ரெண்டு ராஜா படத்திலும், பிரியா ஆனந்தை ஆபாசமாக உடை அணிவித்து ஆட வைத்துள்ளார்களாம். காரணம் படத்தில் கதை காமெடி உள்ளிட்ட விஷயங்கள் ஒழுங்காக இல்லாததுதான்.

‘இந்தப் படம் கண்டிப்பாக ஏ சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய படமாகவே வந்துள்ளது . ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் எப்படியாவது யூ சான்றிதழ் வாங்க போராடுகிறார்கள் ‘ என்று படம் சம்மந்தப்பட்டவர்களே கூறுகிறார்கள்.
எனவே தணிக்கத் துறை கவனமாக இந்தப் படத்தை கையாள வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது .
என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம் .