‘திரைத் தொண்டர்’ பஞ்சு அருணாச்சலத்தின் 80 ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்.

பாடலாசிரியர், கதை திரைக்கதை வசனகர்த்தா, இயக்குனர் , தயாரிப்பாளர், விநியோகஸ்தர்,என்று பல்வேறு பரிணாமங்களில் தமிழ்த் திரையுலகில் சாதித்தவர் பஞ்சு அருணாச்சலம். ஏ எல் எஸ் ஸ்டுடியோவில் செட் அசிஸ்டன்ட் ஆகப் பணிபுரிந்த வகையில் சினிமாவில் நுழைந்து, பிறகு கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக மாறி , 1960 ஆம் ஆண்டு இவர் முதலில் எழுதி வெளியான நானும் மனிதன்தான் என்ற பாடல் முதல் கொண்டு இருநூறு படங்களுக்கு பாடல் எழுதியவர் . நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதுயவர். தனது பி ஏ ஆர்ட் புரடக்ஷன்ஸ் பட நிறுவனம் ரஜினியின் நீண்ட கால வெற்றிக்குக் காரணமான பல படங்களைக் கொடுத்தவர் .  

எல்லாவற்றுக்கும் மேலாக இசைஞானி இளையராஜாவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.  தன்னைத் திரைத் தொண்டர் என்று அழைத்துக் கொண்டவர். 1941இல் பிறந்து  2016 ஆம் ஆண்டு இறந்த இவரது எண்பதாவது ஆண்டு இப்போது நடக்கிறது . தமிழ்த் திரையுலகின் திசையைத் தீர்மானித்தபஞ்சு அருணாச்சலத்தின் சாதனைகளைப் பாராட்டி அவரது எண்பதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் , மாபெரும் விழா ஒன்றை இளையராஜா பாரதிராஜா தலைமையில்  பி ஏ ஆர்ட் புரடக்ஷன்ஸ் நிறுவனமும் பிளாக் ஷீப் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. 

டிஜிட்டல் தளத்தில் இளம் சாதனையாளர்களைத் தேடித் தேடி அங்கீகரிக்கும் டிஜிட்டல் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தொடங்கி யுவன் சங்கர் ராஜாவின் இருபத்தைந்தாவது  ஆண்டு விழாவைக் கொண்டாடும் யுவன் 25 வரை திறமையாளர்களை அங்கீகரிக்கும் பிளாக் ஷீப் நிறுவனம் தமிழ்த் திரையுலகின் பல்வேறு சாதனையாளர்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பணியின் ஓர் அங்கமாக  இந்த பங்கு அருணாச்சலம் சாதனைகளைக் கொண்டாடும் விழாவை நடத்துகிறது. 

இந்த விழாவுக்கான அறிமுக நிகழ்வில் பாரதிராஜா, கலைப்புலி எஸ் தாணு, கங்கை அமரன், சத்யஜோதி தியாகராஜன்,  விநியோகஸ்தர் அன்புச் செழியன் , திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர்  பன்னீர் செல்வம், வர்த்தக சபைத் தலைவர் ரவி கொட்டாரக்காரா, காட்ரகட்ர பிரசாத், நடிகர் சங்கத் துணைத்தலைவர் பூச்சி முருகன்,  ஃபெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி  ஆகியோர் கலந்து கொண்டு விழாவுக்கு தங்கள் மற்றும் தமது அமைப்புகளின் ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவித்தனர். பஞ்சு அருணாச்சலம் பற்றிய ஆவணப்படமான A creator with midas touch படத்தை உருவாக்கிய இயக்குனர் தனஞ்செயன்,மற்றும் தயாரிப்பாளர்களான லலிதா ஜெயானந்த் , உமா மகேஸ்வரி சத்யகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

விழாவில் பல்லாண்டுகளுக்கும் மேலாக சினிமா செய்திகள் எழுதி வரும் பத்திரிக்கையாளர்கள் கலைப்பூங்கா ராவணன், தேவி மணி, ஜெயச் சந்திரன், தேவராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *