”பாவம் தங்கர் பச்சன் ” – வருத்தப்படும் பிரபுதேவா

prabhu deva
prabhu deva
எல்லாமே இந்தி பாஸ்

சென்னைக்கு வரும் வழியையோ மறந்து விட்டாரோ என்று எல்லோருக்கும் தோன்ற ஆரம்பித்தது அவருக்கும் புரிந்திருக்கவேண்டும் . விளைவு ? மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஜஸ்ட் லைக் தட் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பிரபு தேவா .

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை அடுத்து பிரபு தேவா இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிப்பதாக செய்தி வந்ததே .. அதை அறிவிக்க சந்திக்கிறாரா ? இல்லை வடிவேல் நடிக்க பிரபுதேவா படம் இயக்கப் போவதாக செய்தி வந்ததே.. அதற்கான சந்திப்பா ? தமிழில் புதுப் படம் எதிலும் நடிக்கிறாரா? தங்கர் பச்சன் இயக்கத்தில் இவர் நடித்து  வெளியீட்டுக்கு காத்திருக்கும் களவாடிய பொழுதுகள் படம் பற்றி ஏதாவது முக்கிய செய்தியா ?…………….

— என்று பல கேள்விகளோடு காத்திருந்தால் “உங்களை எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு . அதான் பாத்து ஒரு நன்றி சொல்லணும்னு தோணுச்சு. அவ்வளவுதான்” என்று மையமாக சிரித்தார் .முன்பு இருந்ததை விடவும் ஒல்லியாக இருந்தார்.

வடிவேலை வைத்து படம் இயக்குவது போல எந்த திட்டமும் இல்லை என்றார் . விஜய் படம் பற்றியும் பேசவில்லை .

“நான் அஜய் தேவ்கனை வைத்து இயக்கி இருக்கும் ஆக்ஷன் ஜாக்சன் முக்கால்வாசி முடிந்து விட்டது . அடுத்து சிங் ஈஸ் ப்ளிங் என்ற இந்திப் படத்தை இயக்குகிறேன் . ஏ பி சி டி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன்” என்றார் . “ஏ பி சிடி ஒரு எமோஷனலான படம் . ஆனால் அதை எல்லோரும் ஒரு டான்ஸ் படமா மட்டும் பார்த்துட்டாங்க .” என்ற வருத்தத்தை பதிவு செய்து விட்டு “இரண்டாம் பாகத்தில் இன்னும் கவனமாக இருப்போம் ” என்றார்.

களவாடிய பொழுதுகள் போன்ற நல்ல கதைப் படங்களில் நடிப்பீர்களா என்று கேட்டபோது ” நடிக்கலாம் . ஆனா பாவம் …களவாடிய பொழுதுகள் படத்தை எடுத்த தங்கர் பச்சானே அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாம கஷ்டப்படறாரு . என்றாலும் நல்ல கதை இருந்து எனக்கும் புடிச்சிருந்தா நடிப்பேன்” என்றார் .

prabhu deva
“யோசிக்கணும் ‘

“இந்தியில் பெரிய டைரக்டரா இருக்கிற நீங்க ஏன் அந்தப் படங்களை திமிழ் இந்தி இரண்டு வெர்ஷன்களாக எடுக்கக் கூடாது ?
மற்ற இயக்குனர்கள் போல நீங்கள் ஏன் ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தமிழில் நல்ல படங்களை தயாரிக்கக் கூடாது ?”

இந்த இரண்டு கேள்விகளையும் பிரபுதேவா சற்றும் எதிர்பார்க்கவில்லை . கொஞ்சம் யோசித்து ” அப்படி தோணல. ” என்றார் .

தமிழ்ல பண்ணலன்னா விடுங்க . கன்னடத்துலயாவது பண்ணலாமே ?

எதுக்காக சொல்றோம்னா .. கன்னடத்துல பட்ஜெட் ரொம்ப கம்மியாதானே ஆகும் … அதுக்காக சொல்றோம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →