ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து– ஒளிப்பதிவு —இயக்கத்தில் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தானே தயாரித்து நடிக்கும் தனுஷின் 25வது படம் வேலை இல்லாப் பட்டதாரி.
வேலை உள்ள மிட்டாதார்கள்
இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சரண்யா பொன் வண்ணன் “இந்தப் படத்தோட கதையை என் மகனே என்கிட்டே வந்து சொல்லி நீங்க நடிக்கனும்னு கேட்டுட்டாரு . அதான் நடிச்சேன் “என்றார் .
‘படத்தோட ஒளிப்பதிவு எழுத்து இயக்கம் எல்லாமே வேல் ராஜ் தானே ? சரண்யாவுக்கு இவ்ளோ பெரிய மகனா?’ என்று நினைத்தால் அப்புறம்தான் புரிந்தது ….
அவர் சொன்னது படத்தில் தனக்கு மகனாக நடித்த தனுஷை என்று . (ஆத்தி .. ஆத்தாவாவே மாறிட்டாங்க !)
அம்மா.. அம்மம்மா!
தொடர்ந்து ” இந்தப் படத்துல நானும் இயக்குனர் சமுத்திரகனியும் தனுஷுக்கு அப்பா அம்மாவ நடிச்சு இருக்கோம். பொதுவா சமுத்திரக்கனி என்னை அண்ணின்னுதான் கூப்பிடுவாரு. ஷூட்டிங் ஸ்பாட்ல கூட அப்படிதான் கூப்பிடுவாரு .
ஆனா தனுஷுக்கு அது புடிக்கவே புடிக்காது . ஜோடியா நடிச்சுகிட்டு அவர் உங்கள அண்ணின்னு கூப்பிடறது ஒரு மாதிரி இருக்குன்னு சொன்னாரு . ஆனாலும் நாங்க கேக்கல . கனி என்னை அண்ணின்னு கூப்பிடும்போது தனுஷ் எங்களை முறைச்சுகிட்டே இருப்பாரு” என்று சொன்னபோதும் …. தனுஷ் முறைத்துக் கொண்டேதான் இருந்தார், ஜாலியாக (!?)
வந்திருந்த எல்லோரையும் வாருவாரென்று வாரினார் விவேக் . (காமெடி .. காமெடி !) “இந்தப் படத்துல கதாநாயகியா நடிச்சு இருக்கற அமலாபால் இதே படத்து ஷூட்டிங்லதான் எனக்கு பத்திரிகை கொடுத்து கல்யாணத்துக்கு வரணும்னு சொன்னாங்க. என்னால சில காரணங்களால் போக முடியல .சரி.. அடுத்த தடவை கண்டிப்பா வரேன்னு சொல்லவும் முடியாது. இது அந்த மாதிரி விசயமும் இல்லை. “என்றவர்….
சரண்யாவையும் விட்டு வைக்கவில்லை. “இப்போரெண்டு அம்மாதான் ஃபேமஸ் . அரசியல்ல புரட்சித் தலைவி அம்மா. சினிமாவில் சரண்யா அம்மா..அம்மா.. அம்மா..” என்ற போது சரண்யா பயந்து கொண்டே சந்தோஷப் பட்டார் .
PANT போட மறந்த குமுத சுரபிய்
அடுத்து தொடை வரை வெளியே தெரியும்படி ஒரே ஒரே சட்டை மட்டும் போட்டுக் கொண்டு வந்திருந்த நடிகை சுரபியைப் பார்த்து ” ஷூட்டிங் ஸ்பாட்ல சுரபியை ஷாட்டுக்கு டைரக்டர் கூப்பிட்டா சாப்பிடறது முதற் கொண்டு என்ன வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாலும் அப்படியே போட்டுட்டு இந்தப் பொண்ணு வந்திடும் . அது அநேகமாக சட்டையைப் போட்டுக்கிட்டு இருக்கும்போது இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு இருப்பாங்க போல. அதான் அப்படியே பேன்ட் கூட போடாம உடனே ஓடி வந்துருச்சி “ என்றார்
இப்படி எல்லோரையும் ஓட்டு ஓட்டு என்று ஒட்டி விட்டுதான் உட்கார்ந்தார் உடன்பிறப்பு போல பேசிய விவேக் .அடுத்து பேசிய தனுஷ் “எனக்கு அப்பாவா இந்தப் படத்துல சமுத்திரக்கனி சாரை நடிக்கக் கேட்டபோது அவர் சம்மதமா இருந்தாலும் அவரு ஃபிரண்ட்ஸ் சில பேருக்கு அது புடிக்கல . ஆனா அதை மீறி எனக்கு நடிச்சு கொடுத்தார்
மனோரமாவின் இடத்தை அருமையாக நிரப்பிக் கொண்டு இருக்கிறார் சரண்யா . அவங்க சொன்னது உண்மைதான் . கணவன் மனைவியா நடிச்சுகிட்டு சமுத்திரக் கனி சார் அவங்களை அண்ணின்னு கூப்பிட்டது ஒரு மாதிரியா இருந்தது. ஆனா பர்பார்மன்ஸ்ல ரெண்டு பெரும் கலக்கிட்டாங்க .
எல்லாருக்கும் நன்றி .
சினிமாவுலயே ஒல்லியான ஆளா நான்தான் இருந்தேன்.
பத்திரிக்கைக்காரங்களே என்னை பத்தி கிசு கிசு எழுதும்போது ஒல்லிப்பிச்சான் நடிகர்னுதான் எழுதுவீங்க.
ஆனா அனிருத் வந்த பிறகு அந்த பட்டம் என்னை விட்டு போயிடுச்சி .
அவரு என்னை விட ஒல்லி . ஆனா ஆளு கில்லி . நாலு படம்தான் பண்ணி இருக்காரு . நாளும் ஹிட் .
இந்தப் படத்துல எஸ் ஜானகி பாடி சரண்யா நடிச்சு இருக்கற ஒரு பாட்டு ரொம்ப நாள் பேசப்படும் . படமும் சிறப்பா வந்துருக்கு ” என்றார் தனுஷ்
“ஒரு வேலை இல்லாத பட்டதாரி இளைஞன், அவனுக்கு வரும் காதல் , அவனது சூழ்நிலை எல்லாவற்றையும் சொல்லும் படம் இது படத்துல சொல்லி இருக்கற ஒரு விஷயம் எல்லோருக்கும் தேவையான ஒன்று “என்றார் இயக்குனர் வேல்ராஜ்
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன் இந்தப் படத்தின் மூலம் முதன் முதலாக முதன் முதலாக விநியோகஸ்தராகவும் மாறி படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் . (குறைந்த பட்சம் படம் எஸ்கேப் ஆவது உறுதி !)
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462