நிஜமாக அடித்துக் கொண்ட உதயநிதி – விக்ராந்த்

Gethu Press Meet Stills (10)

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சத்யராஜ் , ஏமி ஜாக்சன் , கருணாகரன் ஆகியோர் நடிப்பில் , மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கி இருக்கும் படம் கெத்து. 

சிறந்த  அப்பா  , அன்பான அம்மா மற்றும் தடகளப் போராட்ட வீராங்கனையான தங்கை ஆகியோருடன் வாழ்ந்து வரும் நல்ல பிள்ளையான ஒரு இளைஞன்,  வாழ்வில் எதிர்பாராத விதமாக ஒரு இண்டர்நேஷனல் கொலைகாரன் வைத்த பொறியில் சிக்கிக் கொள்கிறான் .
Gethu Movie Stills (1)
அந்தப் பொறியில் இருந்து அப்பாவும் பிள்ளையும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம் .
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டத்தையும் இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள் . 
டிரைலர் ஆங்கிலப் பட பாணியிலும் ஆங்கில வார்த்தைகளுடனும்  தெறிப்பாக இருந்தது . 
Gethu Movie Stills (5)
அயல்நாட்டு லோகேஷன்களுக்கு இணையான — அசாமின் சிரபுஞ்சி உள்ளிட்ட – பல சிறப்பான இந்திய லொக்கேஷன்களில் பாடல்களை படமாக்கி உள்ளனர் . உயர்ந்து விழும் அருவிகள் , பள்ளத்தாக்குகள் ஆகியவை அதீத உயரத்தில் இருந்து அழகாகப் படமாக்கப்பட்டு உள்ளன என்றாலே நீங்கள் உடனே புரிந்து கொள்ள வேண்டும் , ஒளிப்பதிவாளர் சுகுமார்தான் என்று . 
Gethu Movie Stills (6)
”அப்பா கேரக்டருக்கு சத்யராஜ் சாரை  அணுகியபோது கதையைக் கேட்டுவிட்டு , ‘உதய்க்காக நடிக்கிறேன்’ என்று நடித்துக் கொடுத்தார்” என்கிறார் இயக்குனர் .  
முதன் முதலாக இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விக்ராந்த் ” மிக பவர்ஃபுல்லான கதாபாத்திரம் அது . ஏனென்றால் அவர் கேரக்டர் பவர்ஃபுல்லாக இருந்தால்தானே எனது ஹீரோயிசம் செல்லுபடியாகும் ” என்று உதயநிதி கூற , 
Gethu Press Meet Stills (41)
“படத்தில் மொத்தமே அவருக்கு இரண்டே வார்த்தைதான் வசனம் . ஆனால் பிரம்மாதமான கேரக்டர் அது . மிக அட்டகாசமாக நடித்து உள்ளார் விக்ராந்த் . இந்தப் படம் கண்டிப்பாக அவருக்கு ஒரு ஹாட் கேக் ” என்கிறார் இயக்குனர் திருக்குமரன் . 
கதிர்வேலனின் காதல் படத்தில் நன்றாக நடனம் ஆட ஆரம்பித்த உதய்,  இந்தப் படத்தில் நன்றாக சண்டை போடவும் ஆரம்பித்து இருக்கிறார் . உபயம் ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இரட்டையர் .
Gethu Press Meet Stills (26)
‘படத்தின் கிளைமாக்சில் உதயநிதியும் விக்ராந்தும் போட்டிருக்கும் ஒத்தைக்கு ஒத்தை சண்டையில் இருவரும் நிஜமாகவே மோதினார்கள் . இருவருக்கும் பலத்த அடி பட்டது . அந்த சண்டைக்காட்சி மிக சிறப்பாக பேசப்படும்”  என்கிறார்கள் இந்த இரட்டையர் 
மின்னலே படத்தில் ஒரு பாடலை ஒரே வாய்சுக்கு பலரை வைத்து பாட வைத்ததாக சொல்லும் ஹாரிஸ் ஜெயராஜ் , இந்தப் படத்தில் நான்கைந்து பாடலாசிரியர்களை ஒரு குழுவாக உட்கார வைத்து ஒரு பாடலை எழுத வைத்து இருக்கிறார். பாடல்கள் வெளியான உடனேயே ஐ டியூனில் முக்கிய இடத்துக்கு வந்திருப்பதில் சந்தோசம் காட்டுகிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 
Gethu Press Meet Stills (38)
முன்னாள் கவர்ச்சி ஆட்ட நடிகை அனுராதா இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு பெண் தாதாவாக நடிக்கிறார் . ”நடிப்பில் அனுராதாவின் ஃபோர்ஸ் பார்த்து அசந்து விட்டேன்” என்று உதயநிதி பாராட்ட , ”மிக அட்டகாசமாக நடித்தார் அனுராதா மேடம் ‘ என்கிறார் இயக்குனர் திருக்குமரன் . 
Gethu Press Meet Stills (8)
படப்பிடிப்பில் லூனாவில் போகும் ஒரு காட்சியில் நடித்த எமி ஜாக்சன் ஒரு பெரிய படுகுழியில் விழும் விபத்து நிகழ இருந்த சூழ்நிலையில் , பாய்ந்து சென்று பிடித்து இழுத்து (லூனாவைதான் ) நிறுத்து எமியைக் காப்பாற்றினாராம் . 
Gethu Press Meet Stills (27)
“படத்தில் பல காட்சிகளை அதிகாலை நாலு மணிக்கு எடுக்க வேண்டும் . ஐந்து மணிக்கு எடுக்க வேண்டும் . அப்போதுதான் நன்றாக இருக்கும்’ என்று அடம் பிடிப்பார் திருக்குமரன் . அப்போதெல்லாம் அவரை நன்றாக திட்டி இருக்கிறேன்.
Gethu Press Meet Stills (5)
அசிஸ்டன்ட் டைரக்டர்கள் எல்லாம் என்னிடம் நிறைய திட்டு வாங்கி இருக்கிறார்கள். இப்போது எல்லாரிடமும் சாரி சொல்லிக் கொள்கிறேன் ” என்றார் உதயநிதி. 
நிகழ்ச்சிக்கு வந்திருந்த எமி ஜாக்சனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது . (பின்னே? ஜல்லிகட்டை தடை செய்ய வேண்டும் என்ற மனுவில் கையெழுத்துப் போட்ட  ‘வெஜிடேரியன்’ வெள்ளையம்மா  அல்லவா ?)
Gethu Movie Stills (15)
”கெத்து பொங்கலுக்கு வெளியாகிறது” என்கிறார் உதயநிதி . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →