ரைட்’திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

நட்டி நட்ராஜ் , அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் திரைப்படம் “ரைட்”.
 
எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல் நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்? என்பதுதான் இப் படத்தின் மையம். 
 
ஜில்லா புலி படங்களில் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்து உள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார். 
 
தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல் தயாரிப்பாளராக உருவாகும் படத்தை, தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். 
 
படத்தில் நட்டி, அருண் பாண்டியன் இவர்களுடன் பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், வில்லனாக ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரம் படப் புகழ் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்கவி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக அறிமுகமாகிறார். 
 
வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 
 
இவ்விழாவில் பத்திரிக்கை நண்பர்களுக்காக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. 
 
இவ்விழானில் தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசியபோது, ​​”எங்கள் படத்தில் பணிபுரிந்த நட்டி சார், அருண் பாண்டியன் சார் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்த உறவுகளுக்கு நட்புகளுக்கும் நன்றி. இயக்குநர் எனது நண்பர், இன்னொரு நண்பர் ஜெயபாண்டி சார். அவர் மூலம் தான் இந்தப்படம் நடந்தது. சுப்பிரமணியன் படம் செய்ய வேண்டும் என்று சொன்ன போது மூவரும் இணைந்து செய்யலாம் என்று தான் படம் ஆரம்பித்தோம். அருண்பாண்டியன் சார் பல வழிகாட்டுதல்களை தந்தார். நட்டி சார் முழுக்க முழுக்க கூட இருந்து ஆதரவு தந்தார். இயக்குநர் ஜெயித்தால் எங்கள் ஊரே சந்தோசப்படும். அனைவரும் திரையரங்கு வந்து படம் பார்த்து ஆதரவு தாருங்கள்”என்றார். 
 
எடிட்டர் நாகூரான் பேசியபோது, ​​” திரையரங்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தருங்கள் இயக்குநருக்கும், நட்டி சாருக்கும் நன்றி. வாய்ப்பு தந்ததற்கு தயாரிப்பாளர்களுக்கு நன்றி நன்றி. படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி. 
 
வீரம் பட நடிகை யுவினா பேசியபோது, ​​”சின்ன குழந்தையாக என்னை படத்தில் பார்த்திருப்பீர்கள். இப்போ காலேஜ் பெண்ணாக நடித்துள்ளேன். வயது பாத்திரம் நடிக்கலாம் என ஆரம்பித்த போது இப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. எனக்கு இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நட்டி சாருக்கு நன்றி. “என்றார். 
 
இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியன் , “நான் இதுவரை 9 படம் செய்துவிட்டேன் ஆனால் இதுதான் என் முதல் மேடை. ரமேஷ் சாருடன் வேலை பார்த்தது. இனிமையான அனுபவம். ஒரு குடும்பமாக அனைவரும் இணைந்து செய்துள்ளோம். இந்தப் படத்தில் ஆர்ட் ஓர்க், கேமரா, என எல்லாமே சூப்பராக இருக்கும். நடிகர்கள் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்,”என்றார். 
 
நடிகர் ரோஷன் பேசியபோது, ​​”இந்த வாய்ப்பைத் தந்த ரமேஷ் சாருக்கு நன்றி. இந்தப் படக்குழு இப்படத்திற்காக உழைத்துள்ளனர். நட்டி சாருடன் தான் எனக்கு காட்சிகள் அதிகம் அவர் நடிப்பை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும். “என்றார். 
 
நிர்வாகத் தயாரிப்பாளர் பிரான்சிஸ் மார்க்கஸ் பேசியபோது, ​​” இந்தப் படம் பற்றி ஒரு புக்கே எழுதலாம். 24 நாளில் எடுக்கப்பட்ட படம், சின்ன பட்ஜெட்டில் எடுத்த படம், ஆர்டிஸ்ட் எல்லாம் அவ்வளவு கடுமையாக உழைத்தனர். இயக்குநரும் கேமராமேனும் இல்லாவிட்டால் இந்தப் படம் இவ்வளவு சீக்கிரம் எடுத்திருக்க முடியாது. படத்தில் உழைத்த உதவி இயக்குநர்கள் உட்பட அனைவரும் அர்ப்பணிப்போடு உழைத்தனர். மியூசிக் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. குட்லக் என்ஞ்சினியர்ஸ் சவுண்ட் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. சமூக அக்கறையுடன் கூடிய படமாக இப்படம் இருக்கும். “என்றார்.
 
நடிகை அக்‌ஷரா ரெட்டி பேசியபோது, ​​”சினிமாவுக்கு நான் புதுசு ஆனால் தமிழ் மக்களுக்குத் தெரியும். பிக்பாஸ் மூலம் என் வீட்டுப் பெண்ணாக” நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்மா தான் என்னை முழுதாக பார்த்துக்கொண்டார்கள், அவர்கள் எதிர்பாராமல் மறைந்த பிறகு எப்படி மீடியாவில் சினிமாவில் இருப்பது தயங்கினேன். ஆனால் இந்த டீம் என்னை மிகவும் ஆதரவாக பார்த்துக் கொண்டார்கள், இப்படி ஒரு டீம் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் பயப்படாமல் வேலை செய்யலாம். கிளாமர் பொம்மையாக இருக்க கூடாது என நினைத்தேன் படத்தில் மிக அழகான ரோல் தந்தார்கள். நட்டி சாருடன் வேலை பார்த்தது மிக இனிமையான அனுபவம், அருண் பாண்டியன் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நீங்கள் படம் பார்த்து ரசிப்பீர்கள் என எல்லோரும் பார்த்தீர்கள்”என்றார் 
 
சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் ரவிமரியா பேசியபோது, ​​”இந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை, ஆனால் இந்தப்படம் நன்றாக வரவேண்டும் என வேண்டிக்கொள்” கொண்டிருந்தேன். எனக்கு நெருக்கமான மூன்று பேர் பணியாற்றியிருக்கிறார்கள். எனக்கு மிளகாய் படத்தில் வாய்ப்பு தந்து, இப்போது வரை நண்பராக இருக்கும் நட்டி அவருக்கு நன்றி, மிளகாய் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டர் ரமேஷ், மிக திறமையானவர். இத்தனை காலம் அவருக்கு தயாரிப்பு கிடைக்கவில்லை திருமால் லட்சுமணன், ஷியாமளா இருவருக்கும் நன்றி. படத்தை 24 நாட்களில் முடித்துள்ளார்கள், படத்தை முடிக்கும் நாட்கள் முக்கியமில்லை குறைந்த நாட்களில் எடுத்தது நூறாவது நாள் பிளாக்பஸ்டர். நட்டி சார் இந்தப் படத்திற்காக எவ்வளவு குறைவாக சம்பளம் வாங்கி நடித்தார் எனத் தெரியும், ரமேஷ் மீது பெரும் அக்கறை கொண்டவர் அவர், இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் ” என்றார். 
 
நடிகை வினோதினி பேசியபோது, ​​”, இந்த விழாவிற்கு வருகை தந்த ரவி மரியா சாருக்கு நன்றி. நட்பு பற்றி நிறைய பேசுகிறோம். காரணம் நட்பு தான். மார்க்கஸ்தான் என்னை தொடர்பு கொண்டு இப் படத்தில் கொண்டு வந்தார். அவரை பல காலமாக எனக்கு தெரியும். ரமேஷ் அவர்களை ஜில்லா படத்தில் பார்த்துள்ளேன், அவர் இப்படி இயக்குநராக, அதுவும் நண்பர்கள் தயாரிப்பில் வருவார் என நினைக்கவில்லை, அவர் முதல், பலருக்கு இது முதல் படமாக அமைவது மிகுந்த மகிழ்ச்சி. 24 நாளில் எடுத்தது எனக்கே தெரியாது, நான் ஏழு நாள் தான் நடித்தேன். பக்காவாக திட்டமிட்டு எடுத்தார்கள். இது எவ்வளவு பெரிய உழைப்பு, என பிரமிப்பாக இருக்கிறது. அருண் பாண்டியன் சார், நட்டி சாரின் நடிப்பு மிகச் சிறப்பாக வந்துள்ளது. இப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும் “என்றார் . 
 
நட்டி (எ) நட்ராஜ் பேசியபோது, ​​” ரைட் ஒரு சுவாரஸ்யமான படம். ரமேஷ் என்னிடம் அசிஸ்டெண்டாக இருந்தவர், அவர் கதை சொன்ன போதே யார் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என எழுதியே வைத்திருந்தார். அருண் பாண்டியன் சார் படத்தில் ஒரு கோ டைரக்டர் போல வேலை செய்தார். அவர் அர்ப்பணிப்பிற்கு நன்றி. அக்ஷரா ரெட்டி பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர், மிக கடுமையாக உழைத்துள்ளார், வாழ்த்துக்கள். யுவினா சிறப்பான நடிப்பை தந்துள்ளார். ஆதித்யாவும் சிறப்பாக செய்துள்ளார். ரோஷனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. 
 
ரவிமரியா என் சிறந்த நண்பர் அவர் செய்த உதவிகள் ஏராளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். குணா இசையில் வாழ்ந்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வேலை பெரியளவில் கண்டிப்பாக பேசப்படும். படத்தின் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். அனைவரும் இப் படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். சமூக அக்கறை மிக்க ஒரு விசயத்தை ரமேஷ் கூறியுள்ளார். “என்றார் 
 
இயக்குநர் பாலசுப்பிரமணியம் ரமேஷ் பேசியபோது, ​​”என் இயக்குநர்கள் குழுவிற்கு முதல் நன்றி. என் அம்மா அப்பா, எனக்கு தொழில் கற்ற குருக்களுக்கு நன்றி. எப்போதும் ஊரில் என் நண்பர்கள் எப்போது படம் செய்வாய் எனக் கேட்பார்கள், அதற்கு தயங்கியே நான் எங்கும் போகாமல் இருந்தேன். என் நண்பர் ஜெயபாண்டிதான் திருமால் சாரை அறிமுகப்படுத்தினார், படத்தை தயாரித்ததற்கு திருமால் சாருக்கு நன்றி. 
 
நட்டி சார் ஆபிஸில் தான் நான் வாழ்ந்தேன். அவர்தான் நான் இப்படம் செய்ய காரணம். இப்படம் ஒரே இடத்தில் நடக்கும் கதை நடிகர்களை ஸ்டேஜிங் செய்வது மிகுந்த சவாலாக இருந்தது. குணா மிக அற்புதமான இசையை தந்துள்ளார். தாமு சார் கலை இயக்கத்தில் அசத்தியுள்ளார். மார்க்கஸ் சார் இப்படத்திற்கு முழு சப்போர்ட்டாக இருந்தார். அக்ஷரா கடுமையாக உழைத்தார். நன்றாக நடித்துள்ளார். வினோதினி மேடமுக்கு சொல்லித்தர அவசியமே இல்லை. யுவினா நன்றாக நடித்துள்ளார். ஆதித்யா நிறைய சப்போர்ட் செய்தார். 
 
அருண் பாண்டியன் சாரிடம் அன்பிற்கினியாள் படத்தில் நான் வேலை செய்தேன். அவரைப் பார்க்கவே ஆறு மாதம் ஆனது. அவர் என்னை வேண்டாம் என சொல்லத்தான் கதை கேட்கவே ஒப்புக்கொண்டார் ஆனால் அவர் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 
 
.தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் 
 
கலை – தாமு
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கில்
நடனம் – ராதிகா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *