டூ’ படத்தை இயக்கியவர் ஸ்ரீராம் பத்மநாபன். . இப்போது லொள்ளு சபா ஜீவா நடிக்கும் ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
அது சற்றே தாமதமாகவே இவர் சும்மா சோம்பியிருக்கவிலை. அடுத்தவர்களை பொறாமையால் கடித்துக் குதறும் ஸோம்பி ஆகவும் ஆகவில்லை .
ஒய்வெடுக்க விரும்பாத இவர்,இடையில் ‘பூனையின் மீசை என்கிற சிறுகதை தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். ‘465’ என்கிற படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
இப்போது ‘ருசிகண்ட பூனை’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இதில் ‘டூ’ படத்தின் நாயகன் சஞ்சய், ‘சரவணன் மீனாட்சி’ புகழ் பவித்ரா ஆகியோர் நடித்துள்ளனர் .
ஒளிப்பதிவு– எஸ்.பிரபு. எடிட்டிங்- விதுஜீவா, இசை – ஷாஜகான். இயக்குநர் உள்பட அனைவரும் திரைப்படக் கல்லூரி மாணவர்களே.
டூ ரீல் சினிமாஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் தயாரித்துள்ளார்.
பத்தரை நிமிடங்கள் ஓடும் இது ஒரு திரில்லர் குறும்படம் . சினிமா இயக்குநர் ஒருவர் பற்றிய கதை.சினிமா எப்படி ஒருவரை அதிலிருந்து வெளிவர முடியாமல் ஈர்க்கிறது என்பதை,
காதல், திகில் கலந்து சொல்லியிருக்கிறார்.
படம் இயக்க முடியாமல் தவிக்கும் ஒருவனுக்கு குடும்பத்தில் ஏற்படும் பிரச்னையை சொல்லி துவங்குகிறது படம் .
தன் சம்பாத்தியத்தில் கணவன் வாழ்வதை வைத்து மனைவி கேவலமாக பேச, ஒரு நிலையில் அந்த இயக்குனர் மனைவியை கத்தியால் குத்திக் கொல்ல,
அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வர , இவன் பிணத்தை மறைக்க முடியாமல் தவிக்க ,
அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்தை உருவாக்கி …
அதில் இருந்து முற்றிலும் விலகி இன்ப அதிர்ச்சியாக ஓர் அற்புதமான நம்பிக்கை ஊட்டும் படத்தை காதல் கலந்து கொடுத்திருக்கிறார் ஸ்ரீராம் பத்மநாபன்.
தான் சாதிக்க போராடி அல்லாடும் நேரத்தில் குடும்பத்தினர் காட்டும் தூய அன்பால் ஏற்படும் விபரீத உணர்வுகளை சொல்லும் அற்புத கதை திரைக்கதை .
இயக்குநர் பாலாஜி தரணிதரன், ஒளிப்பதிவாளர் பிரேம். நடிகர் பகவதி ஆகியோர் வெளியிட்ட,’ருசிகண்ட பூனை’ குறும்படம் ,
யூ டியூபில் வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் இருப்பவர்கள் தினந்தோறும் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும்; புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இயங்கிக் கொண்டேஇருக்க வேண்டும்;
தன்னை நிரூபித்துக்கொண்டேஇருக்க வேண்டும்.இல்லாவிடில் சினிமாவை விட்டு விலகிப் போன உணர்வு வந்து விடும்.
சினிமாவில் பாதை வரவில்லை, வாய்ப்பு வரவில்லை என்பவர்கள் அதை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராம் பத்மநாபனிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அட்டகாசமான இந்தப் படத்தைப் பார்க்க , பின்வரும் இணைப்பை சொடுக்கவும்