ஆத்மாவும் அறிவும் பேசும் ‘சாயா’

saaya-1

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’.

ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். 

படத்தின்  பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார் .

தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ,நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். 

விழாவில் வழக்கத்துக்கு மாறாக மச்சான்ஸ் மறந்து ரொம்ப  சீரியசாக பேசிய நமீதா  ” இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச்  சொல்லும் படம் என்பதில்  மகிழ்ச்சி.

 சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்,செய்ய வேண்டும் என்றால்  திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன .அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.

saaya-4

இந்தப் படம் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி ,அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆம். நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக்கொள்கிறேன்.

என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன் .

இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது,

நல்ல டியூஷன்  மட்டும் கொடுத்தால் போதாது.  நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுகை  எது கெட்ட தொடுகை  என்று  சொல்லிக் கொடுக்க வேண்டும்,

குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள்,நிறைய பேசுங்கள் .இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள் இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன் .

இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார் ,

பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது

saaya-3

”எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும். இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை.

சாக்கு போக்கு சொல்லி பொய்யான காரணம் சொல்லி  தவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். இதை எண்ணி வேதனை அடைந்து இருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டு இருக்கிறேன்.

விழா நடத்துபவர்கள் பலரது  தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன்.அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன்.

என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன். நான் சம்பந்தப்படாத விழாவாக இருந்தாலும் சென்று வாழ்த்தி வருகிறேன். ஊக்கப்படுத்துகிறேன் .

அப்படித்தான் இங்கே வந்திருக்கிறேன்.சினிமாவில் எல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி ஒற்றுமையாக இருக்கவேண்டும். இப்படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்றார்.

நடிகை வசுந்தரா பேசும்போது

saaya-2

“இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது,

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வாழும் கிராமப்புறங்களுக்கு இன்னும் கல்வியறிவு சரியாக போய் கிடைக்காததுதான் .

அந்த கல்வியின் அவசியத்தை இந்தப் படம் சொல்கிறது என்பதில் எனக்கு ரொம்ப சந்தோசம் ” என்றார் 

முன்னதாக அனைவரையும் வரவேற்ற   ‘சாயா’  பட இயக்குநர் வி.எஸ். பழனிவேல் படம் பற்றிப் பேசும் போது ,

”பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக

 ஆத்மாவை மையமாக வைத்துஉருவாகியுள்ளது ’சாயா’. 

இந்தப்படம் கல்வியின் அவசியத்தை உணரத்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். 

saayaa-5

ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனதுஉடலைப் பார்க்க முடியுமா ?பார்த்தால் என்ன செய்யும்? இநத கேள்விகளுக்கெல்லாம் ”சாயா” படம் பதிலளிக்கும் ” என்றார் .

விழாவில் இயக்குநர்கள் மனோஜ் குமார், கே.எஸ்.அதியமான், தாமிரா,இசையமைப்பாளர் ஏ.சி. ஜான் பீட்டர் , படத்தின் நாயகன் சந்தோஷ் கண்ணா,

நடிகர்கள் கராத்தேராஜா, ‘பாய்ஸ்’ராஜன், சின்ராஜ் , நடிகைகள்  வசுந்தரா ,பட நாயகி காயத்ரி,  தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்  ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். 

நிறைவாக தயாரிப்பாளர் சசிகலா பழனிவேல் நன்றி கூறினார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *