விஜய் ஆண்டனி ஒரு சக்சஸ் ‘சைத்தான்’

saithaan-6
பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றி, அதை விட பிச்சகாடு என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம்  செய்யப்பட அந்தப் படத்தின் இமாலய வெற்றி ….
இந்த வெற்றிக்குப் பிறகு அடுத்தும் வெற்றியை சுவைக்க ஒரு சுமாரான படம் மட்டுமே போதும் 
– என்று எண்ணும் சராசரி சினிமாக்காரர் அல்ல விஜய் ஆண்டனி . 
தமிழ் திரையுலகிலும் சரி, தெலுங்கு திரையுலகிலும் சரி, இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. 
தன்னுடைய திரைப்படங்களுக்கு  எதிர்மறையான தலைப்புகளை தேர்வு செய்து அதன் மூலம் வெற்றி வாகையை சூடி வருவது தான் விஜய் ஆண்டனியின் தாரக மந்திரமாக இருக்கிறது 
இதோ .. பிச்சைக்காரன் படத்தில் இருந்து முற்றிலும் மாறு பட்ட ஒரு களத்தில் – தளத்தில் சைத்தான் படத்தின் மூலம் வருகிறார் விஜய் ஆண்டனி. 
 ‘சைத்தான்’ ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை வானளவு உயர்த்தி வருவது மட்டுமின்றி
தெலுங்கில் ‘பெத்தலுடு’ என்று தலைப்பிட பட்டு, அந்த மாநிலத்தில்   600 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
saithaan-4
இந்த நிலையில்மி  மிகவும் பிரம்மாண்டமான முறையில் விமர்சையாக நடைபெற்றது  ‘சைத்தான்’ இசை வெளியீட்டு விழா.
பொதுவாக இது போன்ற நிகழ்சிகளில் படத்தின் முன்னோட்டத்தை  திரையிட்டு அப்புறம் பாடல்களை திரையிட்டு மீண்டும் ஒரு முறை முன்னோட்டத்தை திரையிடுவார்கள் . 
ஆனால் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு படத்தின் டைட்டிலில் துவங்கி முதல் சில நிமிடங்களை அப்படியே திரையிட்டுக் காட்டினார் விஜய் ஆண்டனி . தவிர கதையை விளக்கும் ஒரு பாடலும் அசத்தல் . 
ஜெயலட்சுமி என்ற ஆசிரியையை தேடிப் போகும் மன நிலை பிறழ்ந்த கதாபாத்திரமாக விஜய் ஆண்டனி நடிக்க , இடையிடையே வரும் பிளாஷ் பேக்குகள்,
 பழைய கதையா இல்லை முன் ஜென்மக் கதையா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன .  படம் ஒரு சைக்கோ திரில்லராக பிரம்மாதமாக உருவாகி இருப்பது அந்தக் காட்சிகளிலேயே  தெரிகிறது . 
மகாகவி பாரதி உட்பட பல வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார் விஜய் ஆண்டனி . 
மொத்தத்தில் திரையிடப் பட்ட காட்சிகளைப் பார்க்கும்போது  சைத்தானும் மாபெரும் வெற்றிப் படமாக ஆகும் என்பது புரிகிறது .
இசை வெளியீட்டு விழாவுக்கான சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனரும் – தயாரிப்பாளருமான எஸ் ஏ சந்திரசேகரன், ஷோபா சந்திரசேகரன்,
 saithaan-7
‘5 ஸ்டார்’ கதிரேசன்,   ‘ஸ்ரீ கிரீன்’ சரவணன்,   பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் டாக்டர் கே கணேஷ் –  ‘அம்மா கிரியேஷன்ஸ்’, தயாரிப்பாளர் டி சிவா -ட்ரீம் வாரியர்  எஸ் ஆர் பாபு, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், 
இயக்குநர் சசி (பிச்சைக்காரன்), இயக்குநர் ஜி என் ஆர் குமரவேல் (ஹரிதாஸ்) இயக்குநர் ஆனந்த் (இந்தியா – பாகிஸ்தான்), இயக்குநர் நிர்மல் குமார் (சலீம்), இயக்குநர் செந்தில் குமார் (வாய்மை), 
விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் அருள்பதி , காட்ர கட்ட  பிரசாத், சமூக ஆர்வலர் மனோஜ், ‘வின் வின் மீடியா’ வேணு கோபால், 
மற்றும் ‘சைத்தான்’ படக்குழுவினர்களாகிய தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்,
கதாநாயகன் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, கதாநாயகி அருந்ததி நாயர்,  ஒய் ஜி மகேந்திரன், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கிட்டி கிருஷ்ணமூர்த்தி, மீரா கிருஷ்ணன்,
ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயத், படத்தொகுப்பாளர் வீர செந்தில் மற்றும் கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.         
படத்தை தமிழில் வாங்கி வெளியிடும்  அவ்ரா பிலிம்ஸ் மகேஷ் கோவிந்தராஜ் பேசும்போது
saithaan-9
“பலத்த போட்டிக்கு இடையிலும் இந்தப்  படத்தை எனக்குக் கொடுத்த விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனிக்கு நன்றி .
நான் வாங்கி வெளியிட்ட  இருமுகன், தேவி படங்களை தொடர்ந்து இந்தப் படமும் வெற்றி பெறும்  ” என்றார்  
“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி.  ‘ தன்னம்பிக்கையின் அடையாளமாக செயல்படும்  அவரின் வெற்றிக்கு முதுகெலும்பாய் இருப்பவர்,
அவருடைய துணைவியார் பாத்திமா விஜய் ஆண்டனி தான்….”
saithaan-1
என்று கூறினார் டி.  சிவா   
படத்தை தெலுங்கில் வாங்கி வெளியிடும் வின் வின் மீடியா வேணுகோபால் ” பிச்சைக்காரன் தெலுங்கு ஆந்திராவை கலக்கியது .
இந்த சைத்தான் தெலுங்கு படத்துக்கு பிறகு  விஜய் ஆண்டனி  தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆகி விடுவார் . அவர் நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க வேண்டும் . அதை தயாரிக்க  காத்திருக்கிறேன் ” என்றார் 
“விஜய் ஆண்டனி நடித்த நான் திரைப்படத்தை பார்த்த பிறகு, நான் அவருடைய ரசிகனாக ஆகிவிட்டேன். அவர் தேர்ந்தெடுத்து நடித்த  ஒவ்வொரு திரைப்படமும் என் மனதோடு ஒட்டி பயணிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.
saithaan-8
தற்போது அவருடைய ‘சைத்தான்’ அவதாரத்தை காண நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர் ‘ஆரா சினிமாஸ்’  மகேஷ் கோவிந்தராஜ்,
 இந்த சைத்தான் திரைப்படத்தோடு இணைந்திருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
‘சைத்தான்’ திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்….” என்று கூறினார் தயாரிப்பாளர் ‘கணேஷ் 
 “விஜய் ஆண்டனி படங்களின் தலைப்புகள்  எதிர்மறையாக இருந்தாலும், அந்த படங்களின் கதை களங்கள் யாவும் அவரை போலவே ரசிகர்களின் மனதை வெல்ல கூடியதாக தான் இருக்கும்.
saithaan-5
தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் அவர் ஹீரோவாக வலம் வருவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.
என்னுடைய மகன் விஜய்யின் வளர்ச்சியை கண்டு நான் எப்படி மகிழ்ச்சி கொள்கிறேனோ, அதேபோல் தான் விஜய் ஆண்டனியின் வளர்ச்சியையும் கண்டும் நான் ஆனந்தம் கொள்கிறேன்…” என்று ,
உற்சாகமாக கூறினார் இயக்குநர் – தயாரிப்பாளர் எஸ் ஏ சந்திரசேகர்.
விஜய் ஆண்டனி பேசும்போது
saithaan-2
” இந்தப் படத்தின் கதையை மிக அருமையாக சொன்னார் இயக்குனர் பிரதீப் . நன்றாகவும் எடுத்துக் கொடுத்தார் . என்னோடு இரண்டு வருடங்கள் பயணித்தார் .
அவரது அம்மா இங்கே வந்து இருக்கிறார்கள் . அம்மா ! நல்ல பிள்ளையை பெற்று இருக்கிறீர்கள் . உங்கள் பிள்ளை அறிவாளி , உழைப்பாளி , உங்கள் மகன் இயக்கி இருக்கும் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.
படத்துக்காக என்னோடு உழைத்த அனைவருக்கும் நன்றி .  படத்தை வாங்கி வெளியிடும் அவ்ரா சினிமாஸ் மகேஷ் கோவிந்த ராஜுவுக்கு நன்றி .
அவருக்கு இருமுகன் , தேவி படங்களைப் போல இந்தப் படாமும் வெற்றி பெறும்” என்றார் .
பூதம் கணக்காக எதிர்பார்ப்பில் வளர்ந்து நிற்கிறது சைத்தான் .

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *