1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முதலாகப் பாடினார் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட எஸ் பி பால சுப்பிரமணியம்
தமிழில் ‘ஹோட்டல் ரம்பா ‘திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் ௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து ‘அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு’ ௭ன்ற பாடலை முதலில் பாடினார்.
௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக ‘சாந்தி நிலையம் ‘படத்தில் வரும் ‘இயற்கையெனும் இளையகன்னி’ என்ற பாடலைப் பாடினார் .
ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது
எஸ். பி. பி என்கிற எஸ். பி. பாலசுப்ரமணியம் திரைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவை ஒட்டி , திரையுலகில் தனது குருநாதர்களில் மிக முக்கியமான ஒருவராக அவர் மதிக்கும்,
கே ஜே யேசுதாசுக்கு பாத பூஜை செய்து குரு வணக்கம் செலுத்தினார் எஸ் பி. பி .
பார்ப்பதற்கு நெகிழ்வு மிகுந்த உணர்ச்சிகரமாக இருந்த அந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ் பி பி
“யேசுதாஸ் எனக்கு அண்ணன், குரு மட்டுமல்ல . ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருப்பவர் . என் மீது எப்போதும் அன்பும் அக்கறையும் கொண்டவர் .
அப்படி ஒரு குரல் அமைவதற்கு அவர் பல ஜென்ம புண்ணியம் செய்து இருக்க வேண்டும் . அவருடைய இசை ஞானம் அபாரமானது .
திரையுலகில் அவர் உட்பட சாதித்த பலரும் முறைப்படி இசை கற்றவர்கள் . ஆனால் முறைப்படி இசை கற்காத நான் இந்த அளவுக்கு வளர்ந்தேன் என்றால்
அதற்கு இவர் ஜானகி அம்மா உட்பட பல பாடகர்கள் ,இசை அமைப்பாளர்கள் எல்லோரும் காரணம்
ஆக,நான் பாட ஆரம்பித்து ஐம்பது வருடம் ஆன இந்த நிகழ்வில் என் மீது மாறா பாசம் கொண்ட யேசுதாஸ் அண்ணாவுக்கு பாத பூஜை செய்ய முடிவு செய்தேன்” என்றார் .
பாத பூஜைக்குப் பிறகு பேசிய யேசுதாஸ், ” எஸ் பி பி தான் முறைப்படி இசை கற்காதவன் என்றார் . அது விசயமே இல்லை . இசையை உணர்ந்து பாடுவதுதான் ஞானம் .
அப்படிப் பார்த்தால் எஸ் பி பி யாருக்கும் குறைந்தவர் இல்லை .
இன்னொரு விஷயம் நாங்கள் எல்லாம் சரஸ்வதியின் பிள்ளைகள் . இதில் இசை கற்றவர் கற்காதவர் என்ற பேதம் இல்லை ” என்றார் .
நிகழ்ச்சியில் வாழ்த்திப் பேசிய லக்ஷ்மன் (சுருதி) பேசும்போது , ” தன்னை விட மூத்தவர்கள் , குருமார்கள் ஆகியோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ,
இந்த தலைமுறைக்கு எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியாக இது அமைந்து உள்ளது ” என்றார்
எஸ் பி பி யின் மகன் எஸ் பி பி சரண் பேசும்போது ” அப்பா பாட ஆரம்பித்து ஐம்பது ஆண்டு ஆனதை முன்னிட்டு உலக இசை சுற்றுப் பயணம் ஒன்று நடத்திக் கொண்டு இருக்கிறோம் .
ரஷ்யா, மலேசியா , துபாய் , கனடா உள்ளிட்ட நாடுகளில் நடத்தி விட்டோம் . ரஷ்யாவின் கிரம்ளின் மாளிகையில் படிய முதல் இந்திய மெல்லிசைப் பாடகர் எஸ் பி பி தான்.
உலக இசை சுற்றுப் பயணம் தொடர்கிறது ” என்றார்
எஸ் பி பி பெற்ற இந்திய தேசிய விருதுகள்
————————————————————–
வருடம்- திரைப்படம் -பாடல் -மொழி
——————————————————-
1996 மின்சார க்கனவு , (பாடல் : தங்கத்தாமரை மகளே)தமிழ்
1995 சங்கீத சகர கனயோகி பஞ்சக்சற கவை (பாடல் : உமண்டு க்ஹுமண்டு கன கர் )கன்னடம்
1988 ருத்ரவீண (பாடல் : செப்பாழனி உண்டி )தெலுங்கு
1983 சாகர சங்கமம் (பாடல் : வேதம் அனுவனுவுன )தெலுங்கு
1981 ஏக் துஜே கே லியே (பாடல் : தேரே மேரே பீச் மேனி )இந்தி
1979 சங்கராபரணம் (பாடல் : ஓம் கார நதானு )தெலுங்கு