வால் வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் கதிர் ஐஸ்வர்யா ராஜேஷ் , சரவணன் , லால் , சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிப்பில் புஷ்கர் காயத்ரி எழுதி உருவாக்க, பிரம்மா , சர்ஜுன் இயக்கத்தில் உருவாக்கி அமேசான் பிரைமில் வந்திருக்கும் தொடர் .
பெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்தும் சமூக விரோதிகளின் பின்னால் உள்ள அரசியல், அதைத் தடுக்கமுயலும் ஒரு வக்கீல் (லால்) அவரது வளர்ப்பு மகனாக ஒரு போலீஸ் அதிகாரி (கதிர்) அவனுக்கு எதிராக செயல்படும் இன்னொரு போலீஸ் (சரவணன்) , முந்தைய தொடரின் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தின் நீட்சி,என்று ஒரு நீண்ட கதை. குற்றவாளி யார்? பாதிக்கப்பட்டவர்கள் தப்பினார்களா? குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை ? என்பதே இந்த எட்டு அத்தியாயத் தொடர்
கன்யாகுமரி, குலசேகரப் பட்டினம் தசாரா விழா இவற்றின் பின்னணியில் அட்டகாசமான மேக்கிங்கில் பிரம்மிக்க வைத்து அசத்தி இருக்கிறார்கள் இயக்குனர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் .
புஷ்கர் காயத்ரியின் திரைக்கதை போரடிக்காமல் போகிறது
சாம் சி எஸ் இசை அபாரம்
ஆப்ரகாம் ஜோசப்பின் ஒளிப்பதிவு, ரிச்சர்ட் கெவினின் படத் தொகுப்பு, தினேஷ் சுப்பராயன் , திலீப் சுப்பராயன், மிராக்கில் மைக்கேல் ஆகியோரின் சண்டை இயக்கம், மற்றும் கலை இயக்கம் யாவும் அருமை
மிக இயல்பாக நடித்து அசத்தி இருக்கிறார் கதிர்
ஆழமான கதாபாத்திரத்தில் நுட்பமாக நடித்துள்ளார் சரவணன்.
லால் தான் நடிப்பு வசன உச்சரிப்பு எல்லாவற்றிலும் சொதப்பி எடுக்கிறார் . அவரின் மனைவியாக நடித்து இருப்பவர் நடிப்பில் மனம் கவர்கிறார் .
வசனம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் . ஈர்ப்பில்லை
மற்றபடி போரடிக்காமல் சுழல்கிறது சுழல் 2