தெளிவான நாயகனின் ‘தப்பு தண்டா’

thappu 7

கிளாப் போர்ட் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து சத்யா  கதாநாயகனாக நடிக்க,  சுவேதா கய் என்பவர் கதாநாயகியாக நடிக்க, மைம் கோபி, ஜான் விஜய் அஜய் கோஷ்,போன்றோர் உடன் நடிக்க ,

ஸ்ரீகண்டன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் தப்பு தண்டா .

சத்யா பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர் . இந்தப் படத்துக்கும் ஆரம்பத்தில் அப்படிதான் வந்திருக்கிறார் . படத்தின் தயாரிப்பாளர் மணி . ஒரு நிலையில் சத்யா தயாரிப்பாளராகவும் நாயகனாகவும் ஆகி இருக்கிறார் .

இயக்குனர் ஸ்ரீகண்டன்  பாலு மகேந்திரா சினிமாப் பட்டறையில் பயின்று இயக்குனர் ஆகி இருக்கும் முதல் நபர் .

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பிரவீன் காந்த், ஷக்தி சிதம்பரம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் அண்மைக் காலத்தில் கவனம் கவர்ந்த மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எட்டு தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீகணேஷ்,

thaoppu 2

டோரா பட இயக்குனர் தாஸ், மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

விழாவுக்கு பாலு மகேந்திராவின் துணைவியார் அகிலா அம்மையார் வந்திருந்தார் . எந்த சினிமா நிகழ்ச்சியிலூம் அவர் இதுவரை கலந்து கொண்டவர் அல்ல .

நிகழ்வில் படத்தின் முன்னிட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .ஓட்டுப் போட பணம் தருவது உள்ளிட்ட தவறான விசயங்களில் புழங்கும் பெரும்பணம் ,

அதன் விளைவாக நடக்கும் குற்றங்கள் என்று படம் போகும் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது . பிக்பாக்கெட் அடிக்க டிரைனிங் எடுக்கும் காட்சிகள் கூட வருகின்றன…… கவனம் ! கவனம் !

படத்தின் தயாரிப்பாளர் கம் நாயகன் என்றாலும் மற்ற கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் உள்ள திரைக்கதையை அனுமதிக்கும், 

பெருந்தன்மை அல்லது புத்திசாலித்தனம் சத்யாவுக்கு இருப்பது டிரைலரில் புரிந்தது . வாழ்த்துகள்

thappu 3

நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தன . வினோத் பாரதியின் ஒளிப்பதிவு அட்டகாசம் . இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பெரிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

அவுட்டோர் பாடலை எடுத்த விதமாகட்டும் , இன்டோர் குத்துப் பாடலை வண்ணமயமான பிரகாசத்தில் எடுத்த விதமாகட்டும் ஜாலம் காட்டி இருந்தார் வினோத் பாரதி

நிகழ்ச்சியில் பேசிய எல்லோருமே நாயகன் சத்யாவின் பெருந்தன்மை, சினிமா திறமை மற்றும் ஆர்வத்தை புகழ்ந்தனர் .

சக்தி சிதம்பரம் பேசும்போது ” எனது படத்தின் கதையை சொல்லி பைனான்ஸ் கேட்டபோது பணம் கொடுத்ததோடு ‘ நீங்க ஜெயிக்கிற குதிரை சார் .

படத்தை ஆரம்பிங்க ‘ என்றார் சத்யா . அதுவரை படத்துக்கு டைட்டில் கிடைக்காத நான் அதையே படத்துக்கு பெயராக ஜெயிக்கிற குதிரை என்று வைத்தேன் ” என்றார் .

thappu 4

‘ மிக தெளிவானவர் சத்யா . இயல்பானவர் . படப்பிடிப்பில் தான் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் என்பதற்கான எந்த அடையாளமும் காட்டாமல் இயல்பாக இருந்தார் ” என்றார்  ஜான் விஜய் .

விசாரணை படத்தில் தெலுங்கு போலீஸ் அதிகாரியாக வந்த அஜய் கோஷ் “நான் தெலுங்குக்காரன். ஆனா நானே சொல்றேன் தெலுங்கு சினிமாவுல எல்லாம் ஓவர் பந்தா .

தமிழ் சினிமாதான் இயல்பா இருக்கு . எனக்கு தமிழ் சினிமாவில் நிறைய நடிக்கணும் . பேரு வாங்கணும். இங்கயே செட்டில் ஆகணும்னு ஆசை ” என்றார் .

ரட்சகன் இயக்குனர் பிரவீன் காந்த் தன் பேச்சில் ” சினிமாவில் நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் . தவறுகளை அழகு படுத்தி நியாயப்படுத்தும் காட்சிகள் கூடாது ” என்று சொன்னது கவனிக்கத் தகுந்த ஒன்று .

thaopu 1

படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன் பேசும்போது ” நான் ஆரம்பத்தில் எடுக்க நினைத்த கதை வேறு . அதை இப்போது எடுக்க முடியவில்லை . இது வேறு கதை .

உண்மையில் பாலு மகேந்திரா சார் இப்போது உயிரோடு இருந்தால் இந்தப் படம் எடுத்த காரணத்துக்காக என்னை செருப்பால் அடித்து இருப்பார் . அது போல கவர்ச்சி பாட்டெலாம் வைத்தால் அவருக்கு பிடிக்காது .

எனினும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படமாக தந்துள்ளேன். எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் இருக்கும்  ” என்றார் .

தயாரிப்பாளரும் நாயகனுமான சத்யா பேசும்போது

thappu 6

” பைனான்சியராக இருந்தேன் . படத்தின் நடிக்க சொன்னார்கள். நடித்தேன் .ஒரு நிலையில் தயாரிப்பாளர் சிரமப்பட்டபோது நானே தயாரிப்பாளர் ஆகி விட்டேன் .

இதில் நான் ஒன்றும் பெரிய ஹீரோ எல்லாம் கிடையாது . படத்தில் பல நல்ல கேரக்டர்கள் உள்ளன . அதில் என் கேரக்டரும் ஒன்று . என் கேரக்டருக்கு ஜோடியும் பாடல்களும் இருப்பதால் நான் ஹீரோ அவ்வளவுதான் .

நல்ல கதை திரைக்கதை படமாக்கல் இவைதான் நிஜமான் ஹீரோ என்பது என் எண்ணம் ” என்றார் தெளிவாக !

இந்தத் தெளிவு வெல்லட்டும் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *