தென் சென்னை @ விமர்சனம்

ரங்கா பிலிம் கம்பெனி சார்பில் ரங்கா தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்க,கதாநாயகியாக ரியா  மற்றும் இளங்கோ குமணன், திலீபன், வத்சன், நடராஜன், சுமா , விஷால், ராம் ஆகியோர் நடித்து  இருக்கும்  படம். 

கிரிக்கெட் போட்டி குறித்த பண சூதாட்டம் அது இல்லீகல் என்பதால் அதன் மூலம் நடக்கும் மற்ற தகிடுதததங்கள், ஏமாற்று , வன்முறை, திருட்டு கொலை, கொள்ளை … 

தான் நடத்தும் சிறு ஹோட்டலை  மதுபான பார் ஆக்க, இது போன்ற ஒரு நேர்மையற்ற கும்பலிடம் இடத்தை பேராசையோடு அடகு வைத்து ஒரு நிலையில் எதற்கும் தயாராகும் ஒரு நபர் (இளங்கோ குமணன்)  ,

அவரது சகோதரி (சுமா) , அந்த சகோதரியின் நேரமையான மகன் (ரங்கா)  , அவன் காதலிக்கும் ஒரு டாக்டர் (ரியா) , அந்த டாக்டரின் அக்கா(தாரணி)வின் மோசமான கணவன் , கோவிட்  தீவிரமாக இருந்த காலம் , மரணங்கள் இவற்றின் பின்னணியில் ஒரு படம் . 

கதைக்கு பெரிதாக தேவை இல்லை என்றாலும் நீச்சல் காட்சிகள் நன்றாக இருக்கின்றன .

தாய்மாமன குறித்த திருப்பம் அட போட வைக்கிறது. சபாஷ்

மிக இயல்பாக நடிக்கிறார் ரங்கா . யதார்த்தமாக இருக்கிறார் ரியா . பாராட்டுப்  பெறுகிறார் இளங்கோ குமணன் 

சரத்குமாரின் ஒளிப்பதிவும் ஜென் மார்ட்டினின் பின்னணி இசையும் ஓகே ரகம். 

சுவாரசியம் இல்லாமல் நீண்டும்  சுற்றியும் பயணிக்கும் திரைக்கதையும் ஈர்ப்பில்லாத வசனங்களும் மைனஸ் . 

சும்மா எப்படி வருதுன்னு பார்ப்போமே என்று ஒரு படம் எடுத்த மாதிரியே இருக்கிறது .

தென் சென்னை …. முட்டு சந்து 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *