வட சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும் வகையில்,
ரங்கா என்பவர் இயக்கி தயாரித்து பாடல்கள் எழுதி நாயகனாக நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ரியா நடிக்க, உருவாகி வரும் புதுமையான ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”.
கோவிட்டுக்கு முந்தைய தென் சென்னை, கோவிட்டுக்குப் பிந்தைய தென் சென்னை என்ற அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டு உள்ளதாம்

இதில் ராணுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், ‘பொன்னியின் செல்வன்’ நாடகப் புகழ் இளங்கோ குமணனும் பிரதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர்.
மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறுபாலா, திலீபன், தாரணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘டாடா’திரைப்படத்தில் அறிமுகமாகிப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜென் மார்டின், இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.
சென்னையிலும், பெங்களூரூவிலும் படமாக்கப்பட்டுள்ள இத் திரைப்படதிற்கு ஒளிப்பதிவாளராக சரத்குமார், படத்தொகுப்பாளராக இளங்கோவன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

படதின் போஸ்டர், லுக்ஸ், பாடல், டீசர், டிரைலர் ஆகியவை சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறதாம்.
சிவ பத்மயன் பாடல் இசையில், நரேஷ் ஐயர் குரலில் வெளிவந்திருக்கும் பாடலான “புது வானம் புது பூமி” இனிமையான மெலடி யாக வந்திருக்க, குழுவினரின் வித்தியாசமான முயற்சியில் வந்திருக்கும் மிரட்டலான டீசரும் கவனத்தை ஈர்த்துள்ளதாம்..
இதில் தண்ணீருக்கு அடியில் சிலர் உடற்பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் வருகின்றனவாம்.. இது கடற்படை கமாண்டோக்களின் பயிற்சி உத்திகளாகும்.

நீருக்கடியில் பயிற்சி எடுப்பது போன்ற காட்சிகளை தத்ரூபமாக படமாக்கியுள்ளனராம். , இது ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
படத்திற்கு ,
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : மாரிமுத்து
வண்ணம் – சிட்டகாங்
மக்கள் தொடர்பு – ஹேமானந்த்