தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டைன்மென்ட் வழங்க, ஷமன் பிக்சர்ஸ் சார்பில் ஷமன் மித்ரு தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க,
சத்யகலா , அழகு, வெண்ணிலா கபடி குழு ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா, குமணன் , முத்துராமன் நடிப்பில் , மாரி முத்து இயக்கி இருக்கும் படம் தொரட்டி .
கிராமிய மணத்தின் பின்னணியில் கிராமிய மனங்களின் வாழ்வியலை சொல்லும் இந்தப் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன சி வி குமார் படத்தை வாங்கி வெளியிடுகிறார் .
“ரொம்ப நல்ல படம் சார் . இது மாதிரி படங்கள் வரணும் . என்னை வளர்த்து விட்ட சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இது ” என்கிறார் சி வி குமார் நெகிழ்வாக .
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த அனைவரும் கிராமிய மங்கல நிகழ்ச்சிக்கு வருபவர்கள் போல ,
அன்புடன் சம்பிரதாய முறைப்படி தானியம் வைத்து வரவேற்கப்பட்டனர் . அனைவருக்கும் கிராமிய முறையில் பானகம் தரப்பட்டது .
சிறப்பு விருந்தினர்களுக்கு தலைப்பாகை கட்டப்பட்டது .
மேடையில் தொரட்டி வைக்கப்பட்ட மாலை மரியாதை செய்யப்பட்டது .
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சீனு ராம சாமி, முன்டாசுப்பட்டி ராம் , பேரரசு, ரவிக்குமார், நலன் குமாரசாமி ,
கேபிள் ஷங்கர், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா , பி எல் தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர் .
படம் மிக வித்தியாசமாக இருக்கும் என்பது நிகழ்ச்சியிலேயே தெரிந்தது
மக்கள் மனங்களை கொய்யட்டும் தொரட்டி !